உள்ளடக்கத்துக்குச் செல்

கிபித்து

ஆள்கூறுகள்: 28°16′49″N 97°01′04″E / 28.28028°N 97.01778°E / 28.28028; 97.01778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிபித்து
கிராமம்
கிபித்து is located in அருணாசலப் பிரதேசம்
கிபித்து
கிபித்து
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் கிபித்து கிராமத்தின் அமைவிடம்
கிபித்து is located in இந்தியா
கிபித்து
கிபித்து
கிபித்து (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°16′49″N 97°01′04″E / 28.28028°N 97.01778°E / 28.28028; 97.01778
நாடு India
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்அஞ்சாவ் மாவட்டம்
ஏற்றம்
1,240 m (4,070 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
792104.
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுAR-17
Map
About OpenStreetMaps
Maps: terms of use
8km
5miles
கிபித்து
கிபித்து
Kibithu near the LAC


கிபித்து (Kibithu), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அஞ்சாவ் மாவட்டத்தில், இந்தியாவின் கிழக்குக் கடைக்கோடியில் அமைந்த முதல் கிராமம் ஆகும்.[1]இது இந்திய-சீனா எல்லையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே 28°16′49″N 97°01′04″E / 28.28028°N 97.01778°E / 28.28028; 97.01778யில் உள்ளது. இந்தியா-சீனா-மியான்மர் நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் முச்சந்தியில் கிபித்து கிராமம் உள்ளது. அஞ்சாவ் மாவட்டத் தலைமையிடமான ஹவாய் பேரூராட்சிக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு தெற்கே உள்ளது. கிபித்து கிராமத்தில் லோகித் ஆறு பாய்கிறது. கிபித்து கிராமத்திற்கு 20 கிலோமீட்டர் தொலைவில் இந்திய வான்படையின் மேம்படுத்தப்பட்ட தளம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 129 குடும்பங்கள் கொண்ட கிபித்தூ கிராமத்தின் மக்கள் தொகை 723. அதில் 625 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 36 பேர் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 157 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 94.76% ஆகும். பட்டியல் பழங்குடியினர் 76 பேர் உள்ளனர்[2].

போக்குவரத்து

[தொகு]

இந்தியா-சீனாவை பிரிக்கும் மெக்மோகன் கோட்டை ஒட்டி, கிபித்து கிராமம் வழியாக விஜய்நகர், தவாங் நகரத்தின் மாகோ மற்றும் திங்பு வரை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு எல்லைப்புற நெடுஞ்சாலைகள் அமைக்கிறது.[3][4][5][6]

இந்தியா-சீனா எல்லைப் பாதுகாப்பு அமைப்பினர் சந்திக்கும் புள்ளி

[தொகு]

இந்தியா-சீனா எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், போர்ப் பதற்றத்தை தணிக்கும் வகையில் பேசிக்கொள்ளும் இடமாக கிபித்து கிராமம் இந்திய-சீனா அரசால் ஒப்புக்கொள்ளப்பட்டது.[7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "amit shah urge people to visit india's first village kibithoo". The Times of India. Retrieved 14 April 2023.
  2. Kibithoo H.Q. Population - Anjaw, Arunachal Pradesh 2011
  3. Dipak Kumar Dash (16 October 2014). "Top officials to meet to expedite road building along China border". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Top-officials-to-meet-to-expedite-road-building-along-China-border/articleshow/44831871.cms. பார்த்த நாள்: 27 October 2014. 
  4. "Narendra Modi government to provide funds for restoration of damaged highways". Daily News and Analysis. Retrieved 27 October 2014.
  5. Ankit Panda. "Indian Government Plans Highway Along Disputed China Border". The Diplomat. Retrieved 27 October 2014.
  6. "Govt planning road along McMohan line in Arunachal Pradesh: Kiren Rijiju". Mint. 14 October 2014. Retrieved 2014-10-26.
  7. "Indian soldiers prevent Chinese troops from constructing road in Arunacha". The Times of India. 28 October 2014. Archived from the original on 2014-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிபித்து&oldid=4270989" இலிருந்து மீள்விக்கப்பட்டது