உள்ளடக்கத்துக்குச் செல்

கினோயிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கினோயிட்டு
Kinoite
பொதுவானாவை
வகைசோரோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுCa2Cu2Si3O8(OH)4
இனங்காணல்
மோலார் நிறை450அணுநிறை அலகு
நிறம்ஒளிபுகும் ஆழ்ந்த நீலம்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்புநன்று {010}, தனித்துவம் {001} மற்றும் {100}
மோவின் அளவுகோல் வலிமை2 12
மிளிர்வுபளபளக்கும்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி3.13 – 3.19
அடர்த்தி3.13 – 3.19
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.638 nβ = 1.665 nγ = 1.676
இரட்டை ஒளிவிலகல்δ = 0.038
பலதிசை வண்ணப்படிகமைவலிமையானது
2V கோணம்அளக்கப்பட்டது: 68° , கணக்கிடப்பட்டது: 64°
நிறப்பிரிகைபலவீனமானது

கினோயிட்டு (Kinoite) என்பது (Ca2Cu2Si3O8(OH)4 [1][2]அல்லது Ca2Cu2Si3O10 · 2 H2O [3] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் கினோயிட்டு கனிமத்தைKin[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

ஓரளவு அரிதான இக்கனிமம் வெளிர் நீல நிறத்துடன் உள்ள செப்பு சிலிக்கேட் கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்புடன், கண்ணாடி போன்ற பளபளப்பும் ஒளிஊடுருவக்கூடியதாகவும் திகழ்கிறது. சாண்டா ரீட்டா மலைகள், அரிசோனாவின் கிறித்துமசிலில் உள்ள கிறித்துமசு சுரங்கம் மற்றும் வேறு சில செப்பு சுரங்கங்களில் கினோயிட்டு காணப்படுகிறது. கினோயிட்டு கனிம சேகரிப்பாளர்களிடையே பிரபலமானதாகவும் உள்ளது. கலிபோர்னியாவில் அரிசோனா, சோனோரா மற்றும் பாச்சாவில் பணியாற்றிய முன்னோடி இயேசுட்டு அமைப்பின் பத்ரே யூசெபியோ கினோவின் நினைவாக 1970 ஆம் ஆண்டில் கினோயிட்டு என்று பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Handbook of Mineralogy
  2. Kinoite at Webmineral
  3. Kinoite at Mindat.org
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கினோயிட்டு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கினோயிட்டு&oldid=4283304" இலிருந்து மீள்விக்கப்பட்டது