கினி மேட்டு நிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நைகர் ஆற்றுப் படுகையினதும் தென் மேற்கே பரவியுள்ள கினி மேட்டு நிலத்தின் ஒரு பகுதியினதும் வரைபடம்

கினி மேட்டு நிலம் (Guinea Highlands) என்பது தென்மேற்கு கினி நாட்டிலிருந்து வடக்கத்திய சியேரா லியோனி, லைபீரியா, வடமேல் கோட் டிவார் ஆகியவற்றினூடே பரந்து காணப்படும் தெற்கத்திய பூத்தா ஜல்லொன் மேட்டு நிலத்திலிருந்து விரிந்து காணப்படும் அடர்ந்த காடுகளைக் கொண்ட மலைப்பாங்கான மேட்டு நிலமாகும்.

இக்காடுகளே மேற்கு ஆபிரிக்காவிலேயே மிக நீளமான ஆறாகிய நைகர் ஆற்றின் நீர் வளங்களைக் கொண்டிருக்கின்றன. இப்பகுதியிலேயே மிக உயரமான மலையாகிய நிம்பா மலை 1,752 மீட்டர்கள் (5,748 ft) உயரமானதாகும். பரந்துபட்டுக் காணப்படும் இம்மேட்டு நிலப் பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து பெரும்பாலும் 300 மற்றும் 500 மீட்டர்கள் (980 மற்றும் 1,640 ft) இற்கும் இடைப்பட்ட உயரத்தைக் கொண்டிருக்கின்றன.[1] புவியியல் அடிப்படையில் இம்மேட்டு நிலத்தின் கூறுகள் கருங்கற்கள், தட்டடுக்குப் பாறைகள், படிகப் பாறைகள் உட்பட மேல் கினியை ஒத்துக் காணப்படுகின்றன.[2]

இம்மேட்டு நிலப் பகுதியானது நைஜீரியாவின் யோசு மேட்டு நிலம், கமரூன் நாட்டின் கமரூன் மேட்டு நிலத்தின் ஆதமவா பகுதி, மாலி நாட்டின் பமாக்கோவுக்கு அருகிலுள்ள மண்டிங்குவே மேட்டு நிலம் ஆகியவற்றுடனதும் தொடர்புபட்டுள்ளது.

அடர்ந்த காடுகளைக் கொண்ட கினி மேட்டு நிலத்தின் சந்தை நகரம் யோமூ ஆகும். அந்நகரில் விற்பனை செய்யப்படும் பிரதான வணிகப் பொருட்களில் நெல், மரவள்ளி, கோப்பி, செம்பனை எண்ணெய், பருப்பு வகைகள் என்பன உள்ளடங்குகின்றன.[3] இப்பகுதியில் பிரதானமாக குவேர்சு (குப்பெல்லே), மானோ ஆகிய இனக் குழுக்கள் வாழ்கின்றன.

உசாத்துணை[தொகு]

  1. Encyclopædia Britannica, Retrieved on June 18, 2008
  2. Africa Travel Guide, Retrieved on June 18, 2008
  3. Encyclopædia Britannica, Retrieved on June 18, 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=கினி_மேட்டு_நிலம்&oldid=1868520" இருந்து மீள்விக்கப்பட்டது