உள்ளடக்கத்துக்குச் செல்

கினாருட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கினாருட்
Kinarut
கினாருட் நகரில் தொடருந்து நிலையம்
கினாருட் நகரில் தொடருந்து நிலையம்
ஆள்கூறுகள்: 5°49′0″N 116°03′0″E / 5.81667°N 116.05000°E / 5.81667; 116.05000
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுமேற்கு கரை பிரிவு
மாவட்டம்பாப்பார் மாவட்டம்
மக்கள்தொகை
 (2010[1])
 • மொத்தம்18,029
நேர வலயம்மலேசிய நேரம் +8
அஞ்சல் குறியீடு
89500[2]
தொலைபேசி++6088-7
Map
கினாருட் அமைவிடம்
பிரித்தானிய காலனிய காலத்து வணிகக் கடைகள்

கினாருட் (மலாய்; ஆங்கிலம்: Kinarut; சீனம்: 京那律) என்பது போர்னியோ தீவு, மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவு, பாப்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். கோத்தா கினபாலு மாநகரத்திலிருந்து தெற்கே 45 கிமீ தொலைவில் உள்ள இந்த நகரத்தில் சபா மாநில தொடருந்து நிறுத்தமான கினாருட் தொடருந்து நிலையம் உள்ளது.

சொற்பிறப்பியல்

[தொகு]

'கினாருட்' என்ற பெயரின் சொற்பிறப்பியல் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் உள்ளன. அத்தகைய ஒரு கோட்பாடு, இது முன்னர் சைனா ரோடு என்று அழைக்கப்பட்ட நகரத்தில் உள்ள ஒரு தெருவைக் குறிக்கிறது என்பதாகும்.[3] மற்றொரு கோட்பாடு, இது 'கத்தியைப் பயன்படுத்தி வெட்டுதல்' என்று பொருள்படும் டூசுன் மொழி சொல்லான கினோருட் (Kinorut) என்பதிலிருந்து உருவானது என்றும் சொல்லப்படுகிறது.

வரலாறு

[தொகு]

கினாருட் முதலில் புரூணை சுல்தானகத்திற்குச் சொந்தமான நிலப்பகுதியாக இருந்தது. 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், புரூணை உள்நாட்டுப் போரின் போது சுல்தான் அப்துல் அக்குல் முபின் செர்மின் தீவிலிருந்து (Chermin Island) பின்வாங்க வேண்டியிருந்தது. அப்போது கினாருட் காட்டுப்பகுதியில், ​​இரண்டு ஆறுகளால் பாதுகாக்கப்பட்ட ஓர் இடத்தில் ஒரு தளத்தை அமைத்தார்.[4][5] அவர் பத்து ஆண்டுகள் கினாருட்டின் சுல்தானாக அங்கு வாழ்ந்தார் அந்தக் காலக்கட்டத்தில் கினாருட்டைச் சுற்றியுள்ள கடல்பகுதிகளில் கடற்கொள்ளை நிகழ்வுகள் கணிசமாகக் குறைந்தன. உள்ளூர் பஜாவு மக்கள் மற்றும் டூசுன் மக்களின் உதவியுடன், சுல்தான் முகைதீனின் பல தாக்குதல்களை அவரால் முறியடிக்க முடிந்தது.[4]

மக்கள்தொகை

[தொகு]

கினாருட்டின் மக்கள்தொகையில் முக்கியமாக பஜாவுகள், புரூணை மலாய்க்காரர்கள், கடசான் டூசுன் மக்கள் மற்றும் சீனர்கள் (இவர்களில் பெரும்பாலோர் ஆக்கா சீனர்கள்) உள்ளனர். கினாருட்டில் ஒரு பெரிய பிலிப்பீன்சு அகதிகள் குடியேற்றமும் உள்ளது. இது உள்ளூர் மக்களிடையே இனப் பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.[6]

ஈர்ப்புகள்

[தொகு]
கினாருட் மேன்சன் இடிபாடுகள்

வாரம் ஒருமுறை நடைபெறும் தாமு எனும் திறந்தவெளி சந்தைக்கு கினாருட் பெயர் பெற்றது. இந்தத் திறந்தவெளிச் சந்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும். இது உள்ளூர் மக்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் திறந்தவெளிச் சந்தையாகும். கினாருட் நகரம், தினாவன் தீவு, லோக் காவி வனவிலங்கு மையம் (Lok Kawi Wildlife Centre) மற்றும் கினாருட் மேன்சன் இடிபாடுகள் போன்ற ஈர்ப்பு இடங்களுக்கு (Kinarut Mansion) அருகில் உள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. ↑ Population Distribution by Local Authority Areas and Mukims, 2010 (Census 2010) பரணிடப்பட்டது 14 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம் (PDF; 1,9 MB), Page 138
  2. ↑ "Taman Kinarut, Kota Kinabalu - Postcode - 88200". postcode.my. Retrieved 23 July 2026.
  3. ↑ Richard Nelson Sokial: Colonial Townships in Sabah: West Coast, Homeland Publisher Sdn Bhd, 2012, Page 224-236, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-40734-4-2
  4. 1 2 Malaysia in History. Malaysian Historical Society. 1956.
  5. ↑ Brunei (1968). Report. Printed at the Brunei Press.
  6. ↑ "Kinarut's Philippine Refugee Settlement (Map)". WikiMapia. Retrieved 21 March 2014.

    வெளி இணைப்புகள்

    [தொகு]
    "https://ta.wikipedia.org/w/index.php?title=கினாருட்&oldid=4611288" இலிருந்து மீள்விக்கப்பட்டது