கினபத்தாங்கான் ஆறு
| கினபத்தாங்கான் ஆறு Kinabatangan River | |
|---|---|
கினபத்தாங்கான் ஆற்றின் காட்சி | |
ஆற்றின் மூலமும் அதன் துணை ஆறுகளும் | |
| அமைவு | |
| நாடு | |
| மாநிலம் | |
| பிரிவு | சண்டக்கான் பிரிவு |
| அமைவிடம் | வடமேற்கு போர்னியோ |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | தொங்கோட் மாவட்ட மலைகள் |
| முகத்துவாரம் | |
• அமைவு | கினபாத்தாங்கான் மாவட்டம், சுலு கடல் |
• ஆள்கூறுகள் | 5°37′34.1″N 118°34′21.4″E / 5.626139°N 118.572611°E |
• உயர ஏற்றம் | கடல் மட்டம் |
| நீளம் | 563 km (350 mi) |
வடிநில அளவு | 16,795.5 km2 (6,484.8 sq mi)[1][2] |
| வெளியேற்றம் | |
| • அமைவு | கினபாத்தாங்கான் கழிமுகம் |
| • சராசரி | 840 m3/s (30,000 cu ft/s)[3][4] |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| பாயும் வழி | சுலு கடல் |
| நதி அமைப்பு | கினபாத்தாங்கான் ஆறு[5][6] |
| துணை ஆறுகள் | |
| • இடது | தோங்கோட், காரமுக், தாங்குலாப் பெசார், லோக்கான் |
| • வலது | பினாங்கா, இம்பாக், பங்கான், குவாமுட், கோயா, தெனேகாங் பெசார் |
கினபாத்தாங்கான் ஆறு (மலாய்; Sungai Kinabatangan; ஆங்கிலம்: Kinabatangan River) என்பது மலேசியா, சபா மாநிலத்தில் பாயும் ஒரு முக்கிய ஆறாகும். இது சபா மாநிலத்தின் மிக நீளமான ஆறும், மலேசியாவின் இரண்டாவது மிக நீளமான ஆறும் ஆகும். இதன் மொத்த நீளம் சுமார் 560 கிலோமீட்டர்கள் (350 மைல்கள்). சபா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சண்டாக்கான் பிரிவின் வழியே பாய்ந்து, சுலு கடலில் கலக்கிறது
தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்திற்கும் (Biodiversity), அரிய வகை காட்டுயிர்களுக்கும் உலகளவில் இந்த ஆறு புகழ்பெற்றது.[7][8] அதில் கோமந்தோங் குகைகளில் உள்ள சுண்ணக்கல் குகைகள், வறண்ட நில இருசிறகுக்கனி (Dipterocarp) காடுகள், ஆற்றோரக் காடுகள், நன்னீர் சதுப்புநிலக் காடுகள், வளைவு ஏரிகள் மற்றும் கடற்கரைக்கு அருகிலுள்ள உப்பு சதுப்புநிலக் காடுகள் ஆகியவை அடங்கும்.
புவியியல்
[தொகு]கினபத்தாங்கான் ஆறு சபாவின் தென்மேற்கு உட்புற மலைப்பகுதிகளில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து வடக்கு மற்றும் கிழக்கு நோக்கிப் பாய்ந்து, இறுதியில் சண்டாக்கான் நகருக்கு கிழக்கே உள்ள சுலு கடலில் முகத்துவாரத்தை உருவாக்குகிறது. இந்த ஆற்றின் கீழ் படுகைப் பகுதி (Lower Kinabatangan) பெரும் வெள்ளச் சமவெளிகளைக் கொண்டுள்ளது. இங்குள்ள காடுகள், சதுப்புநிலங்கள் (Mangroves), மற்றும் நன்னீர் சதுப்பு நிலக் காடுகள் (Peat swamp forests) வனவிலங்குகளின் புகலிடமாக விளங்குகின்றன.
வனவிலங்குகளும் பல்லுயிர் வளமும்
[தொகு]
கினபத்தாங்கான் ஆற்றுப் படுகை, உலகின் மிகச்சிறந்த காட்டுயிர் மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு மட்டுமே காணக்கூடிய பல அரிய உயிரினங்கள் வாழ்கின்றன.[9]
- சபா குள்ள யானைகள்: ஆசிய யானைகளின் (Borneo Pygmy Elephants) ஒரு சிறிய உட்பிரிவான இந்த யானைகள், கினபத்தாங்கான் ஆற்றங்கரைகளில் கூட்டமாக உலா வருவதைக் காணலாம்.
- நீண்ட மூக்கு குரங்குகள்: நீண்ட மூக்கைக் கொண்ட இந்த அதிசயத்தக்க குரங்குகள் (Proboscis Monkeys) ஆற்றோர மரங்களில் மட்டுமே வாழ்கின்றன.
- ஒராங்குட்டான்: ஒராங்குட்டான் எனும் மனிதக் குரங்கு (Orangutans) இனத்தைச் சேர்ந்த இவை இப்பகுதியின் காடுகளில் பரவலாக வாழ்கின்றன.
- பறவை இனங்கள்: இப்பகுதியில் எட்டு வகையான இருவாச்சி (Hornbill) பறவைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- முதலைகள்: இந்த ஆற்றில் உப்புநீர் முதலைகளின் (Saltwater crocodiles) நடமாட்டம் அதிகம் உள்ளது.
கினபத்தாங்கான் வனவிலங்கு காப்பகம்
[தொகு]1997-ஆம் ஆண்டில், கினபத்தாங்கான் ஆற்றுப் படுகையில் உள்ள 270 சகிமீ (104 சதுர மைல்) பரப்பளவு மழைக்காடுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. 1999-ஆம் ஆண்டில், மேலும் கூடுதலாக 28,000 எக்டேர் (69,190 ஏக்கர்) பரப்பளவு மழைக்காடுகள் அந்தக் காப்பகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
2001-ஆம் ஆண்டில், அரசு சாரா நிறுவனங்களின் முயற்சியின் மூலமாக, கீழ் கினபத்தாங்கான் ஆற்றுப் படுகையில் பறவைகளின் காப்பகம் உருவாக்கப்பட்டது.[10] இங்குள்ள அரிய வகை உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கில், 2005-ஆம் ஆண்டில் சபா அரசாங்கம் இப்பகுதியை கினபத்தாங்கான் வனவிலங்கு காப்பகம் (Kinabatangan Wildlife Sanctuary) என அறிவித்தது. இந்தக் காப்பக்ம் ஏறக்குறைய 26,000 எக்டேர் பரப்பளவைக் கொண்டது.
சுற்றுலா
[தொகு]
சபா மாநிலத்தின் சுற்றுலாவில் கினபத்தாங்கான் ஆறு முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகெங்கிலும் இருந்து வரும் இயற்கை ஆர்வலர்களும்; நிழற்படக் கலைஞர்களும் இங்குள்ள வனவிலங்குகளைக் காண ஆற்றுப் படகுப் பயணம் (River Cruises) மேற்கொள்கின்றனர். சுகாவ் (Sukau) மற்றும் பிலிட் (Bilit) ஆகிய கிராமங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடங்களையும் படகுச் சேவைகளையும் வழங்கும் முக்கிய மையங்களாகச் செயல்படுகின்றன.
அதே வேளையில், இந்த ஆற்றின் தொடக்கப் பகுதிகளில்; மற்றும் நடுப் படுகைப் பகுதிகளில் செம்பனை எண்ணெய் தோட்டங்கள் பெருமளவில் உருவாக்கப்பட்டுள்ளதால், காடழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற சவால்களையும் இந்த ஆறு எதிர்கொண்டு வருகிறது. 2011-ஆம் ஆண்டில், நெஸ்லே நிறுவனம், கினபத்தாங்கான் ஆற்றங்கரைப் பகுதியில்; மக்கள், இயற்கை மற்றும் வேளாண் நடவடிக்கைகள் ஆகியவை இணக்கமாக இணைந்து வாழக்கூடிய ஒரு நிலப்பரப்பை உருவாக்கும் நோக்கில், காடு வளர்ப்புத் திட்டத்தைத் தொடங்கியது.[11]
காட்சியகம்
[தொகு]- போர்னியோ குள்ள யானை
- 1984-இல் கினபத்தாங்கான் ஆறு
- கினபத்தாங்கான் ஆறு
- கரையோரத் தாவரங்கள்
மேலும் காண்க
[தொகு]மேலும் படிக்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Eric, Tilman. "Kalimantan-Borneo".
- ↑ "National Register of River Basins [List of River Basin Management Units (RBMU) – Sabah]" (PDF). Department of Irrigation and Drainage. 2003. p. 34. Retrieved 6 July 2019.
- ↑ Nilsson, Christer; Liermann, Catherine Reidy; Dynesius, Mats; Revenga, Carmen (2005). "Fragmentation and Flow Regulation of the World's Large River System". Science 308 (5720): 405–408. doi:10.1126/science.1107887. https://www.researchgate.net/publication/7904921.
- ↑ "Japan International Cooperation Agency" (PDF).
- ↑ Thiessen, Tamara (2008). Bradt Travel Guide – Borneo. Bradt Travel Guides. p. 205. ISBN 978-1-84162-252-1.
- ↑ Lai, Fanny; Olesen, Bjorn (16 August 2016). Visual Celebration of Borneo's Wildlife. Tuttle Publishing. p. 409−419. ISBN 978-1-4629-1907-9.
- ↑ Levinson, David (1993). Encyclopedia of World Cultures. G.K. Hall. p. 80. ISBN 978-0-8168-8840-5.
- ↑ Tietze, Uwe (2007). Credit and Microfinance Needs in Inland Capture Fisheries Development and Conservation in Asia. Food & Agriculture Organization of the United Nations. p. 131. ISBN 978-92-5-105756-8.
- ↑ "Kinabatangan Wildlife KINABATANGAN WILDLIFE SANCTUARY - It is one of the only two places in the world where ten primate species are found cohabiting, next to some 50 species of mammals and 200 species of bird, Orangutans, Proboscis monkeys, Sabah Pygmy elephants, Sumatran Rhino, Storm's stork, Oriental Darter and all eight species of Hornbill in Borneo". Sabah Travel Guide - Ultimate travel guide! Sabah, Malaysia. Retrieved 30 March 2022.
- ↑ Charlotte J. Fletcher (2009). Conservation, livelihoods and the role of tourism: a case study of Sukau village in the Lower Kinabatangan District, Sabah, Malaysia (Thesis). Lincoln University. hdl:10182/1339.
- ↑ Fletcher, Charlotte J. (2009). Conservation, livelihoods and the role of tourism: a case study of Sukau village in the Lower Kinabatangan District, Sabah, Malaysia. Lincoln University (Thesis). hdl:10182/1339.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் கினபத்தாங்கான் ஆறு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.