கிந்தாமணி
கிந்தாமணி Kintamani ᬓᬶᬢᬫᬦᬶ | |
---|---|
![]() கிந்தாமணியில் இருந்து பத்தூர் மலையின் தோற்றம் | |
![]() பாலி தீவில் கிந்தாமணி | |
ஆள்கூறுகள்: 8°15′29″S 115°19′43″E / 8.25806°S 115.32861°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | பாங்லி குறு மாநிலம் (Bangli Regency) |
பரப்பளவு | |
• மொத்தம் | 141.7 km2 (54.7 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,12,463 |
• அடர்த்தி | 790/km2 (2,100/sq mi) |
[1] | |
பொது | |
• இனக்குழுக்கள் | பாலி மக்கள் பாலி அகா |
• மதம் | இந்து சமயம் (பாலி இந்து சமயம்) |
• மொழி | இந்தோனேசிய மொழி பாலினிய மொழி |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +8 |
கிந்தாமணி (ஆங்கிலம்; இந்தோனேசியம்: Kintamani) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு மாவட்டம் (Kecamatan); மற்றும் அந்த மாவட்டத்திற்குள் ஒரு கிராமமும் ஆகும். இந்த இடம் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாப் பகுதியாகும்.[2][3]
கிந்தாமணி நகரம் பத்தூர் மலையின் (Mount Batur) மேற்கு விளிம்பில் உள்ளது. பத்தூர் மலை பகுதியைப் பார்ப்பதற்கான நிறுத்த இடமாகவும் உள்ளது.
புரா துலுக் பியூவின் (Pura Tuluk Biyu) 1,000 ஆண்டுகள் பழைமையான "அமைதி சடங்குகள்" எனும் கல் பலகைகளுக்காகவும் (Rites of Peace Stone Tablets); கிந்தாமணி நாய் எனும் ஓர் அரிய வகை நாய்களுக்காகவும் அறியப்படுகிறது.[4][5]
கிந்தாமணியில் பாலி ஆகா எனும் பூர்வீக பாலினிய மக்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்.
கிந்தாமணி மாவட்டம்
[தொகு]கிந்தாமணி மாவட்டம் தென்பசார் நகரத்தை விட 366.9 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ளது, மேலும் இது 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 112,463 மக்களைக் கொண்டிருந்தது.[6] கிந்தாமணி மாவட்டம் கிராமப்புறமானது; மொத்தம் 48 கிராமங்கள் உள்ளன.
அத்துடன் இந்த மாவட்டம் 19 பாலி ஆகா பூர்வீக மக்களின் கிராமங்களையும் கொண்டுள்ளது. அந்தக் கிராமங்கள், பத்தூர் மலையின் அடிவாரத்திலும், பத்தூர் ஏரியிலும், கிந்தாமணி பள்ளத்தாக்கிலும் பரவியுள்ளன.[7]
இந்தோனேசிய நிர்வாக உட்பிரிவுகள்
[தொகு]இந்தோனேசியாவின் நிர்வாகப் பிரிவுகள்; நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[8]
- முதலாம் நிலை: மாநிலம் அல்லது புரோவின்ஸ்; (ஆங்கிலம்: Province இந்தோனேசியம்: Provinsi)
- இரண்டாம் நிலை : குறு மாநிலம் அல்லது ரீசன்சி; மாநகரம்; (ஆங்கிலம்: Regency; City இந்தோனேசியம்: Kabupaten; Kota)
- மூன்றாம் நிலை : மாவட்டம் (ஆங்கிலம்: District இந்தோனேசியம்: Kecamatan, Distrik, Kapanewon, Kemantren)
- நான்காம் நிலை : கிராமம் அல்லது துணை மாவட்டம் (ஆங்கிலம்: Village/Subdistrict இந்தோனேசியம்: Desa / Kelurahan)[9]
காட்சியகம்
[தொகு]- கிந்தாமணி காட்சிப் படங்கள்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.
- ↑ "Peraturan Menteri Dalam Negeri Nomor 137 Tahun 2017 tentang Kode dan Data Wilayah Administrasi Pemerintahan". Kementerian Dalam Negeri Republik Indonesia. Archived from the original on 29 December 2018. Retrieved 3 October 2019.
- ↑ "Peraturan Menteri Dalam Negeri Nomor 72 Tahun 2019 tentang Perubahan atas Permendagri nomor 137 Tahun 2017 tentang Kode dan Data Wilayah Administrasi Pemerintahan". Kementerian Dalam Negeri Republik Indonesia. Archived from the original (PDF) on 25 October 2019. Retrieved 15 January 2020.
- ↑ "The Official Website of Indonesia Tourism - Indonesia Travel".
- ↑ "bokepindo". 5 May 2020.
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.
- ↑ Yudantini, Ni Made (2020). "Bali Aga Villages in Kintamani, Inventory of Tangible and Intangible Aspects". Advances in Engineering Research 192 (EduARCHsia & Senvar 2019 International Conference (EduARCHsia 2019)): 160-165. https://www.researchgate.net/publication/339588716_Bali_Aga_Villages_in_Kintamani_Inventory_of_Tangible_and_Intangible_Aspects. பார்த்த நாள்: 2024-05-09.
- ↑ "Undang-Undang Republik Indonesia Nomor 23 Tahun 2014 tentang Pemerintah Daerah". Law இல. 23 of 2014. House of Representatives.
- ↑ "Undang-Undang Republik Indonesia Nomor 32 Tahun 2004 tentang Pemerintah Daerah". Law இல. 32 of 2004. House of Representatives.
சான்றுகள்
[தொகு]- Picard, Kunang Helmi (1995) Artifacts and Early Foreign Influences. From Oey, Eric, ed. (1995). Bali. Singapore: Periplus Editions. pp. 130–133. ISBN 962-593-028-0.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் கிந்தாமணி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.