கித்வாய் நினைவு புற்றுநோய் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கித்வாய் நினைவு புற்றுநோய் நிலையம் (Kidwai memorial institute of oncology) கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ள புற்றுநோய் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிலையமாகும்.[1][2] அடித்தட்டு புற்று நோயாளிகளுக்காக, மகாரட்டிர மாநில ஆளுநராக இருந்த ரஃபி அகமத் கித்வாய், பற்றுநோய் மருத்துவமனை அமைக்க 20 ஏக்கர் நிலமும் ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கினார். இந்த மருத்துவமனை மாரிகௌடா சாலையில் உள்ளது.

இந்நிலையம் 1973 சூன் 2 அன்று, 50 படுக்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. 1980 இல் தன்னாட்சி பெற்றது. வட்டாரப் புற்றுநோய் மையமாக (Reginal cancer center) அதே ஆண்டு தரமுயர்த்தப்பட்டது. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ICMR) இதனைஆய்வு மையமாகவும் ஏற்றுள்ளது. ஏழை மக்களுக்காக தர்மசாலா மருத்துவமனை வளாகத்திலேயே உள்ளது. ஆண்டுச் செலவு சுமார் 20 கோடியாகும். பெரும் பகுதியை மைய, மாநில அரசுகள் வழங்குகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. கித்வாய் நினைவு புற்றுநோய் நிலையம் பரணிடப்பட்டது 2019-08-13 at the வந்தவழி இயந்திரம்