உள்ளடக்கத்துக்குச் செல்

கிதம் பறவைகள் சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிதம் பறவைகள் சரணாலயம்
Kitam Bird Sanctuary
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of கிதம் பறவைகள் சரணாலயம்         Kitam Bird Sanctuary
Map showing the location of கிதம் பறவைகள் சரணாலயம்         Kitam Bird Sanctuary
Map showing the location of கிதம் பறவைகள் சரணாலயம்         Kitam Bird Sanctuary
Map showing the location of கிதம் பறவைகள் சரணாலயம்         Kitam Bird Sanctuary
அருகாமை நகரம்நாம்ச்சி
ஆள்கூறுகள்27°6′0″N 88°20′0″E / 27.10000°N 88.33333°E / 27.10000; 88.33333
பரப்பளவு6 km2 (2.3 sq mi)
நிறுவப்பட்டது3 பிப்ரவரி 2005
வலைத்தளம்Sikkim forest department

கிதம் பறவைகள் சரணாலயம் (Kitam Bird Sanctuary) என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் நம்மச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 19 கி.மீ (12 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி மற்றும் வன விலங்கு சரணாலயமாகும்.[1] இது பிப்ரவரி-3-2005 அன்று பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

விளக்கம்

[தொகு]

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயம், 1,200 அடி (370 மீ) முதல் 3,200 அடி (980 மீ) வரை உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் 6 கி.மீ 2 (2.3 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[2][3] பாதுகாக்கப்பட்ட வன பகுதியான இங்கு பைன் மற்றும் சால் மரங்களைக் கொண்ட வெப்பமண்டல இலையுதிர் காடுகள் உள்ளன. சரணாலயத்தில் காணப்படும் விலங்கினங்களில் கேளையாடு, காட்டுப்பன்றி, அசாமிய குரங்கு, மரநாய், மலேய முள்ளம்பன்றி, சிறு இந்தியப் புனுகுப்பூனை, சிறிய இந்தியக் கீரி, பட்டாம்பூச்சி சிற்றினங்களும் அடங்கும். பறவைகளில் வெள்ளைக் கண்ணி, கலிஜ் பகட்டுக்கோழி, இந்திய மயில், சிவப்புக் காட்டுக்கோழி, குங்குமப் பூச்சிட்டு, சிசா. இமயமலை சுடர் முதுகு மரங்கொத்தி ஆகியவை அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Wildlife Sanctuaries in Sikkim". சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு. Retrieved 1 June 2024.
  2. National Parks and Wildlife Sanctuaries in India (PDF). சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு (Report). November 2021. Retrieved 1 June 2024.
  3. "Wildlife in Sikkim". சிக்கிம் அரசு. Retrieved 1 June 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிதம்_பறவைகள்_சரணாலயம்&oldid=4445712" இலிருந்து மீள்விக்கப்பட்டது