கிட் ஹாரிங்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிட் கரிங்டோன்
பிறப்புகிறிஸ்டோபர் கேட்ஸ்பி கரிங்டோன்[1]
26 திசம்பர் 1986 (1986-12-26) (அகவை 37)
லண்டன்
இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ரோஸ் லெஸ்லி (தி. 2018)

கிறிஸ்டோபர் கேட்ஸ்பி கரிங்டோன் (ஆங்கில மொழி: Christopher Catesby Harington)[2] (பிறப்பு: 26 திசம்பர் 1986) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு முதல் எச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேம் ஆஃப் துரோன்ஸ்[3][4] (2011-2019) என்ற காவிய கற்பனைத் தொடரில் ஜான் சினோ என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகராகவும், சர்வதேச அங்கீகாரத்தையும் மற்றும் பல பாராட்டுகளையும் பெற்று கொடுத்தது.

இவர் பொம்பெய் (2014), செவன்த் சன் (2014) போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளியான ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2 என்ற திரைப்படத்தில் குரல் நடிகராக பணியாற்றியுள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு[5] என்ற படத்தில் டேன் விட்மேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிகை ரோஸ் லெஸ்லி என்பவரை 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன் உண்டு.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2012 சைலண்ட் ஹில் 3டி வின்சென்ட்
2014 பொம்பெய்[6] மிலோ
2014 ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2 எரெட் (குரல்)
2014 டெஸ்டமென்ட் ஒப் யூத் ரோலண்ட் லெய்டன்
2015 செவன்த் சன் பில்லி பிராட்லி வெளியிட காத்திருக்கிறது
2015 ச்பூக்ஸ்: தி கிரேட்டர் குட்
2021 எட்டெர்னல்சு டேன் விட்மேன்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2011–2019 கேம் ஆஃப் துரோன்ஸ் ஜோன் ஸ்நொவ் முதன்மை கதாபாத்திரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kit Harington Biography". BuddyTV. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
  2. "Kit Harington: Television Actor (1986–)". Biography.com. Archived from the original on 10 April 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2020.
  3. "HBO Re-commissions 'Game of Thrones'". IFTN. 19 April 2011.
  4. Low, Lenny Ann (22 March 2014). "Game of Throne's Kit Harington: Man for all seasons". The Sydney Morning Herald. https://www.smh.com.au/entertainment/movies/game-of-thrones-kit-harington-man-for-all-seasons-20140320-353mq.html. 
  5. Couch, Aaron (24 August 2019). "Marvel Confirms Kit Harington for 'Eternals', Sets 'Black Panther II' Date". The Hollywood Reporter.
  6. Hunter, Craig (14 November 2012). "Kit Harington To Headline Paul W.S. Anderson's 'Pompeii' Disaster". The Hollywood News. பார்க்கப்பட்ட நாள் 14 July 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்_ஹாரிங்டோன்&oldid=3303887" இலிருந்து மீள்விக்கப்பட்டது