கிடாரக்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீர்மிகு திருநெல்வேலி மாவட்டம்

முன்னுரை:-

கி.பி.1790 செப்டம்பர் 1-ல் திருநெல்வேலி மாவட்டம் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது ஆகும். இது பிற்காலப் பாண்டியர்களின் தலைநகராகச் சிறிது காலம் இருந்தது.

திருநெல்வேலி மாவட்டம் வீர வரலாற்றிற்கும், ஈகை உணவிற்கும், மொழி வளத்திற்கும், கலை இலக்கிய சிறப்பிற்கும் பெயர் பெற்றதாகும். ஐந்து வகையான நிலஅமைப்பை கொண்டதாகும். இதை “திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி” என்று தேவாராம் பாடிய திருஞானசம்பந்தர் புகழ்ந்துரைக்கும் புண்ணிய பூமி இது ஆகும்.

திருநெல்வேலி நகரின் வரலாறு:-

நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பரின் பெயரால் இந்நகரம் வழங்கப்படுகிறது. அதாவது, வேதசர்மா என்னும் இந்து சமய துறவி இறைவனுக்குப் படைப்பதற்காக உழவர்களிடம் வீடுதோறும் தாம் யாசித்துப் பெற்ற நெல்மணிகளை தற்போதைய நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ள இடத்திலிருந்த ஒரு பாறையில் காயவைத்து விட்டு தாமிரபரணி நதியில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் பயங்கர புயலுடன் கூடிய கனமழை பொழியவே, திடுக்கிட்ட வேதசர்மா நெல்லை காயவைத்த இடத்திற்கு விரைந்து வரவே இறைவனின் திருவருளால் அந்த இடத்திற்கு மட்டும் வேலி அமைக்கப்பட்டு வெயில் அடித்துக்கொண்டிருக்க நெல்மணிகள் காதொரு சேதமுமின்றி பத்திரமாகக் கிடைக்கப்பெற்றது. இவ்வாறு நெல்லுக்கு வேலியிட்ட இறைவனின் இச்செயலால் இந்நகருக்கு திருநெல்வேலி என பெயர் வந்தது என கூறுவர். இந்நகரில் பாய்ந்தோடி வளம் சோக்கும் தாமிரபரணி நதியின் சிறப்பை இனி காணலாம்.

தாமிரபரணி நதியின் கதை:-

பொதிகையில் பிறந்து மன்னார் வளைகுடாவில் கலக்கும் இந்நதியே பொருநை, தண்பொருநை, பொருந்தம், தாம்பிரவருணி, தாமிரபரணி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆரமும், ஆகிலும், தேக்கும், பாக்கும், தேங்கும், கோங்கும், ஆலும், வேலும் அடர்ந்து விளங்குவது பொதியமலை. இதனை வடமொழிவாணர் மலையமலை என்பர்.

1

இம்மலையில் பிறந்து மஞ்சுலாவும் மலைச்சாரலில் தவழ்ந்து பாலையெல்லாம் சோலையாக வளம் ஊட்டி, புல் வளந்த புன்செய் காடெல்லாம் நெல்விளையும் நன்செய் நிலமாக்கச்செய்த்து தாமிரபரணி.

தாமிரபரணி முதலில் மரங்களடர்ந்த காடுகள் வழியாகப் பாய்ந்து ஏறத்தாழ 100 அடி உயரமுள்ள பெரிய மலையின் மேலிருந்து பல அருவிகளாக கீழே விழுகிறது. உள்ளாறு பேயாறு என்னும் சிற்றாறுகளோடு கலந்து பெருக்கெடுத்தோடுகிறது. மேலும் பாணதீர்த்தம் என்னும் அருவியாகி பின் பாம்பாறும் கீரியாறும் கலந்து பேராறாகிறது. இதிலிருந்து சேர்வலாறு என்னும் கிளை பரிந்து செல்கிறது.

கல்லிடைக்குறிச்சிக்கு அருகே மணிமுத்தாறும் பின் வராக நதியும் கடனா நதியும் கூடி திருப்புடைமருதுரில் வந்து சேர்கின்றன. பிறகு தருவையில் பச்சையாறு வந்து கலக்கிறது. இறுதியாக சித்திரா நதி குற்றால மலையில் தோன்றி தேன் அருவி, செண்பகாதேவி அருவி, வட அருவி, ஐந்தருவி என்றெல்லாம் பெயர் பெற்று 40கல் தொலைவிற்கு ஒடி சீவலப்பேரிக்கு அருகில் தண்பொருநையோடு கலக்கிறது. பின் முறப்பநாடு, மணற்கரை, ஆதிச்சநல்லுர், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி முதலிய ஊர்கள் அனைத்தையும் கடந்து ஆத்துருக்கருகில் புன்னக்காயில் கடலில் கலக்கிறது. ஆற்றுமுகத்தில் வடபுறம் கொற்கையும், தென்புறம் ஆத்துரும் உள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு, அரியநாயகிபுரம், சுத்தமல்லி, திருவைகுண்டம், மருதுர் ஆகிய இடங்களில் பாசன வசதிக்காக சிறு அனைக்கட்டுகள் உள்ளன.

சுதந்திர வேட்டையில் இம்மாவட்டம்:-

ஆங்கிலேயர்கள் காலத்தில் விடுதலைப்போராட்டத்தில் நெல்கட்டும் சேவலில் மாளிகை எழுப்பி வெள்ளையனை எதிர்த்த பூலிதேவரும், ஒண்டுவீரரும், மற்றும் வெண்ணிக்காலாடியும், பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை எழுப்பி ஆங்கிலேயருடன் போர் புரிந்த வீரபாண்டியகட்டபொம்மு, தளபதி மாவீரன் சுந்தரலிங்கனார் மற்றும் அழகுமுத்து கோன் , செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், ஆஷ் என்னும் வெள்ளைக்காரதுரையை சுட்டுக்கொன்று தன்னையும் மாய்த்துக்கொண்ட வீரவாஞ்சி போன்ற சாண்றோர் வாழ்ந்து வரலாறு படைத்தது இந்த மாவட்டத்தில்தான்.

இலக்கிய வரலாற்றில் இம்மாவட்டம்:-

எழுத்து சீர்திருத்தம் முதல் திருக்குறள் மொழிபெயர்ப்பு வரை பன்னிரு

2

துறைகளில் முறையாகவும், நிறைவாகவும், பணியாற்றி தமிழுக்கு அணியாக ஒளியுடன் மிளிரும் வீரமாமுனிவர் வாழ்ந்து சேவை செய்த்துவும் இங்குதான் என்பது வரலாறு கூறும் செய்தியாகும். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வரைந்து தமிழே உலகின் செவ்வியல் மொழி என்று விளம்பிய திரு.கால்டுவொர் ஆவர்கள் வாழ்ந்த்துவும் திருநெல்வேலி மாவட்டத்தில்தான்.

திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்த பிஷப்போப்பையர் போன்றோர் இங்கு பணிபுரிந்து பெருமைக்குரியது ஆகும்.  ”உலகின் உயர்தனிச் செம்மொழி தமிழே” என ஆங்கிலத்திலும், தமிழிலும் உலகத்திற்கு தெளிவுற உணர்திய “மொழியியல் ஞாயிறு” ஞா.தேவநேயப்பாவாணர் ஆவர்கள் பிறந்த்துவும் இந்த மாவட்டத்தில்தான்.

குற்றாலக் குறவஞ்சி இயற்றிய திரிகூட ராசப்பக்கவிராயர், 14 இலக்கியங்கள் வழங்கிய குமரகுருபரர், “காவடிச்சிந்து” பாடிய அண்ணாமலைக் கவிராயர், சீராப்புராணம் நல்கிய உமறுப்புலவர் மற்றும் அனைவரும் போற்றிப்பாராட்டும் அருளாளர் நம்மாழ்வார், அவர்தம் திருத்தொண்டராம் மதுரகவி ஆழ்வார் போன்ற பெருமக்கள் பெருமிதம்தரும் வகையில் வாழ்ந்த புண்ணிய பூமி திருநெல்வேலி மாவட்டம் ஆகும்.

மாவட்ட சுற்றுவாத் தலங்கள்:-

இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையோரம் இயற்கை எழில் கொழிக்கும் குற்றாலம் அமைந்துள்ளது. அங்கே பேரருவி, சிற்றருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, அகத்தியர் அருவி, புலி அருவி, தேன் அருவி ஆகிய அருவிகள் அணிவகுத்து அழகு சேர்க்கிறது.

களக்காடு செங்கத்தேரி மலைப்பகுதிகளில் காணப்படும் சிங்கவால் குரங்குகள் மிகவும் அபூர்வமான மந்திகளின் வகையைச் சார்ந்த்து. மருத நிலத்திற்குப் பெருமை தரும் அம்பாசமுத்திரம், ஆலங்குளம் பகுதிகள். நெய்தல் நிலத்துக்குப் பெருமை தரும் புண்னைக்காயல் என்று ஐந்தினைக்கும் சான்றுகாட்டத்தக்க திருவிடங்கள் பல பொருந்திய மாவட்டம் இதுவேயாகும்.

முண்டந்துறை புலிகள் சரணாலயம் உலகத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள சரணாலயமாகும். தாழையூத்து மான்கள் சரணாலயம், வெளிநாட்டுப் பறவைகள்

3

விரும்பி வரும் திருக்குறுங்குடி, அரியகுளம், கூந்தக்குளம், மூன்றடைப்பு பறவைகள் சரணாலயம், கிருஷ்ணபுரம் சிற்பகலை மற்றும் பாபநாசம், காரையாறு, ஆகாதையாறு ஆபான்ற வளம் பொருந்திய பெருமைக்குரியது இம்மாவட்டமாகும்.

தொழிற்சாலையில் இம்மாவட்டம்:-

பெயர் பெற்ற நிறுவனங்களான இந்தியா சிமெண்ட் (தாழையூத்து), தரணி போன்ற நிறுவனங்களும், விஜயநாராயணத்தில் அமைந்துள்ள கடற்படைத்தளம், மகேந்திரகிரியில் அமைந்துள்ள திரவ எரிவாயு திட்ட விண்வெளி ஆய்வு மையம், கூடன்குளம் அணுமின் நிலையம், போன்றவை இம்மாவட்டத்திற்கு புகழ் சேர்ப்பவையாகும்.

கைத்தொழிக்கு கட்டியம் கூறும் பத்தமடைப் பாய், பித்தளைக் குத்துவிளக்கு செய்வதற்கு பிரசித்திபெற்ற வாகைக்குளம், மரச்சாமான்கள் செய்யும் அம்பாசமுத்திரம், மண்ணால் அழகுக் கலைப்பொருட்கள் உருவாக்கும் காருக்குறிச்சி, என்று தொழிலால் எழில் சேர்க்கும் ஊர்கள் பல அமையப்பெற்று சீர் பெற்றது இம்மாவட்டம்.

கல்விக் களஞ்சியத்தில் இம்மாவட்டம்:-

“இந்துக் கல்லுரியின் இடிந்த சுவர்கூட இன்கவி பாடும்” என போற்றும் அளவுக்கு பெயர் பெற்று நூறு ஆண்டுகளுக்கு மேலாக வீறுடன் விளங்கும் ம,தி,தா,இந்துக்கல்லுரி நெல்லை மாநகரிலேயே அமைந்துள்ளது. இக்கல்லுரியின் முதல்வராக பணியாற்றிய சிறப்பிற்குரியவர் மனோன்மணியம் சுந்தரனார் ஆவார்.

மனோன்மணியம் சுந்தரனார் அவர்களால் இயற்றப்பட்ட “நீராருங் கடலுடுத்த” என்று தொடங்கும் பாடல் மாநில கீதமாகும். இவரின் நினைவாக 1990ம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (திருநெல்வேலி) உருவாக்கப்பட்டது. இதனால், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் இரண்டாகப் பரிக்கப்பட்டு தென் பகுதி இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன.

இம்மாவட்ட கல்லுரிகள்:-

இங்கு ம.தி.தா, இந்து கல்லுரி, துயயோவான் கல்லுரி, புனித சவேரியார் கல்லுரி, சாராள் தக்கர் கல்லுரி (தென் இந்தியாவின் முதல் மகளிர் கல்லுரி) சட்டக் கல்லுரி, ராணிஅண்ணா மகளிர் கல்லுரி போன்ற பல கல்லுரிகள் உள்ளது.

4

இந்தியாவில் வேறு எந்த நகரிலும் இல்லாத வகையில், இந்நகரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 2 கி.மீ துரத்திற்குள் பல்வேறு கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள காரணத்தால் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்ற பாராட்டைப் பெற்ற கல்விக் களஞ்சியம் திருநெல்வேலி மாவட்டம் ஆகும்.

கல்வி பயிலும் மாணவ மாணவியர் அறிவியலில் வளர்ச்சி பெற மாவட்ட அளவில் அறிவியல் மையம், தொல்பொருள் ஆராய்ச்சி மையம், தொல்பொருள் கண்காட்சிக்கு அருங்காட்சியகம் ஆகியவை இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சட்டமன்றத் தொகுதிகள்:-

1.சங்கரன் கோவில்(தனி), 2.வாசுதேவநல்லூர், 3.கடையநல்லூர், 4.தென்காசி, 5.ஆலங்குளம், 6.திருநெல்வேலி, 7.அம்பாசமுத்திரம், 8.பாளையங்கோட்டை, 9.நாங்குநேரி, 10.ராதாபுரம், ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டது. வேளாண்மையில் இம்மாவட்டம்:-

திருநெல்வேலியில் செம்மண், கருப்புமண், போன்ற பல மண்வகைகள் இடத்திற்கு எற்றவாறு காணப்படுகிறது. இங்கு பாபநாசம், கடனா நதி, இராமா நதி, கருப்பா நதி, ஆரல்வாய் மொழிக் கணவாய், ஆரியங்காவுக் கணவாய், சிற்றாறு, கால்வாய், கிணறு போன்றவைகளின் மூலம் பாசனம் பெறுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மை ஒரு முக்கியத் தொழிலாகும். இங்கு அதிக பரப்பில் பயிரிடப்படும் முக்கியமான பயிராக நெல் உள்ளது. காய்-கறிகள், வாழை, கரும்பு, பருத்தி, சோளம், உளுந்து, மிளகாய், தக்காளி, வெங்காயம், மிளகு மற்றும் தேயிலை, ரப்பர், காப்பி (பொதிய மலையில்) போன்றவை பயிரிடப்படுகின்றன.

வழிபாட்டு இடங்கள்:-

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், குற்றாலநாதர் கோவில், தென்காசி விஸ்வநாதர் கோவில், பண்மொழி திருமலைக் கோவில், சொரிமுத்தைய்யன் கோவில், சங்கரன் கோவில், உவரி சுயம்பு லிங்கசாமி கோவில், திருக்குறுங்குடி, வாமாலை கோவில், பாளையங்கோட்டை ஊசிக் கோபரம், ஆற்றங்கரைப் பள்ளிவாசல், பொட்டல்புதூர் பள்ளிவாசல் போன்ற இடங்கள் வழிப்பாட்டு இடங்களாக உள்ளன.

5

முடிவுரை:-

திருநெல்வேலியின் வரலாற்றுப் பழம் பெயர் “மருதவேலி” என்பதையும், இது மள்ளர்களின் ஊர் என்றும் வரலாறு கூறுகிறது. பச்சைப்புடவையினை பாங்குடனே அணிந்து கொண்டு மருகி விளையாடும் தென்றலோடு அருவி நீராய் பாடிவரும் தென்பொதிகை மலைதனிலே தமிழ்மொழியோடு பிறந்து வரும் பொருநை நதியின் வளத்தன்மையால் தீந்தமிழ் மணக்கும் திருநெல்வேலி மாவட்டம் இது.

மானத்திற்கு உரு பங்கம் வந்தால் மார்நிமிரும் மக்களடா!

ஊருக்கொரு தேவை என்றால் உயிர் கொடுக்க துணியும் நெஞ்சமடா!

முதுகில் வெட்டவரும் கோழையிடம் நெஞ்சை காட்டும் எங்கள் வீரமடா!

என்ற சொல்லுக்கினங்க பண்புடையவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தினர்.

படை எடுத்து பகை முடிப்பதும் “களத்தில்” கதிர் அடித்து சோறு கூடுப்பதும் எம் குலதொழில் என வீரத்திற்கும், மாணத்திற்கும், ஈகைபண்பிற்கும் விளைநிலமாக உள்ள சீறப்பு வாய்ந்த திருநெல்வேலி மாவட்டத்தில் நமது ஊரான கிடாரக்குளம் கிராமம் அமைந்திருப்பதை என்னி நாம் பெருமைப்படுவோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடாரக்குளம்&oldid=2928093" இருந்து மீள்விக்கப்பட்டது