கிச்சு
| வகை | சிற்றுண்டி; அப்பளம் செய்வதற்கான மாவாக |
|---|---|
| தொடங்கிய இடம் | இந்தியா |
| பகுதி | குசராத்து |
| முக்கிய சேர்பொருட்கள் | அரிசி மாவு, சீரகம், பப்படம் கர் என்று அழைக்கப்படும் கார உப்பு |

கிச்சு (Khichu) என்பது அப்பளம் செய்வதற்கான ஓர் அடிப்படை மாவுப் பொருள் ஆகும். இருப்பினும், இதன் சுவையின் காரணமாக ஒரு சிற்றுண்டியாகவோ அல்லது துணை உணவாகவோ உண்ணப்படுகிறது. இது அரிசி மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சில சமயங்களில் மற்ற மாவுகளும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் குசராத்து மக்கள் செய்யும் உணவு வகையாக அறியப்படுகிறது. இந்த சிற்றுண்டியானது, மாவை கஞ்சி போல தண்ணீரில் வேகவைத்து, சீரகம் மற்றும் பப்பட கார் எனப்படும் கார உப்பு (சோடியம் கார்பனேட்டு மற்றும் சோடியம் பைகார்பனேட்டு ஆகியவற்றை முக்கியக் கூறுகளாகக் கொண்ட ஒரு கார உப்பு)[1] சேர்த்து, பின்னர் அந்த மாவை ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் எண்ணெய் மற்றும் மிளகாய்ப்பொடியுடன் பரிமாறப்படுகிறது.[2]
சொற்பிறப்பியல்
[தொகு]கிச்சியு அல்லது கிச்சு என்ற பெயர், இந்த மாவின் இழுபடும் தன்மையிலிருந்து பெறப்பட்டது.[3] இந்திய மொழிகளில் 'கிஞ்ச்' என்றால் இழுத்தல் என்று பொருள் தருகிறது.
இந்த மாவிலிருந்து தயாரிக்கப்படும் பப்படங்கள் கிச்சியா பப்படம் என்று அழைக்கப்படுகின்றன. கிச்சு பாரம்பரியமாக பருவமழைக் காலத்தில் உண்ணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chemical composition of Papad Khar". Archived from the original on 30 October 2020. Retrieved 5 October 2015.
- ↑ "Rice khichu recipe on taraladalal.com". Archived from the original on 7 April 2015. Retrieved 10 April 2015.
- ↑ "Meaning of khichiyu from grosse.is-a-geek.com". Archived from the original on 4 September 2024. Retrieved 18 April 2015.