கிசோர் (படத்தொகுப்பாளர்)
Appearance
கிஷோர் Kishore Te | |
---|---|
பிறப்பு | வளவனூர், விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா | 24 மார்ச்சு 1978
இறப்பு | 6 மார்ச்சு 2015 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 36)
பணி | திரைப்படத் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2009-2015 |
கிஷோர் (Kishore Te, 24 மார்ச் 1978 - 6 மார்ச் 2015) தென்னிந்தியத் திரைப்படத் தொகுப்பாளர்.[1][2] தமிழ், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றியவர். ஆடுகளம் தமிழ்த் திரைப்படத்துக்காக இவருக்கு 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது.[3]
பணி
[தொகு]தன் 21 ஆம் வயதில் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், வி. டி. விஜயனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். 70 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு இந்தித் திரைப்படங்களில் உதவிப் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.
இறப்பு
[தொகு]வெற்றிமாறனின் படத்தைத் தொகுத்துக்கொண்டிருக்கையில் மயங்கிவிழுந்த கிஷோரின் மருத்துவ ஆய்வில் மூளை உறைகட்டியிருப்பது கண்டறியப்பட்டது.[4] அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றி 6 மார்ச் 2015 ல் உயிரிழந்தார்.[5][6]
தொகுத்த திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | விருது |
---|---|---|
2009 | ஈரம் | |
2010 | ஆனந்தபுரத்து வீடு | |
2011 | ஆடுகளம் | தேசிய விருது |
2011 | பயணம் | |
2011 | ஆடு புலி | |
2011 | மாப்பிள்ளை | |
2011 | உதயன் | |
2011 | காஞ்சனா | |
2011 | 180 | |
2011 | எங்கேயும் எப்போதும் | |
2012 | தோனி | |
2012 | ஆரோகணம் | |
2012 | அம்மாவின் கைப்பேசி | |
2013 | பரதேசி | |
2013 | எதிர் நீச்சல் | |
2013 | உதயம் என்.எச்4 | |
2013 | மதயானைக் கூட்டம் | |
2014 | வெற்றிச் செல்வன் | |
2014 | நெடுஞ்சாலை | |
2014 | புலிவால் | |
2014 | வானவராயன் வல்லவராயன் | |
2014 | உன் சமையலறையில் | |
2015 | காஞ்சனா 2 | |
2015 | காக்கா முட்டை | |
2015 | விசாரணை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kishore Te - Facebook". facebook.com. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Review: Eeram is brilliant". Rediff. 11 September 2009. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Editor Kishore - Tamil Cinema Editor Interview - Editor Kishore - Jayendra - 180 - Aadukalam - Vetri Maaran - Behindwoods.com". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 6 March 2015.
- ↑ "தினமலர்"
- ↑ "தினத்தந்தி"
- ↑ "tamil.filmibeat.com"