கிசோரி சக்தி இயோஜனா
| கிசோரி சக்தி இயோச்சனா Kishori Shakti Yojana | |
|---|---|
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| Chief Minister | நவீன் பட்நாய்க் |
| அமைச்சகம் | மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஒடிசா[1] |
| துவங்கியது | 31 ஆகத்து 2007 |
கிசோரி சக்தி இயோச்சனா (Kishori Shakti Yojana) என்பது, இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு, ஒடிசா அரசால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். 'பருவப் பெண் மேம்பாட்டுத் திட்டம்' என்பது இதன் பொருளாகும். 'ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள்' எனும் அரசுத் திட்டத்தின் கீழ், 11 முதல் 18 வயதுக்குட்பட்ட பருவப் பெண்களுக்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.[2][1] பருவப் பெண்களுக்கு அதிகாரமளிப்பது, அவர்களைச் சுயசார்புடையவர்களாக மாற ஊக்குவிப்பது, அவர்களின் கல்வி மற்றும் தொழில்சார் முயற்சிகளுக்கு உதவுவது, சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவது மற்றும் அவர்கள் பொறுப்புள்ள குடிமக்களாக வளர்வதற்குத் தேவையான அறிவைப் பெறும் வகையில் சமூகத்துடன் அவர்களை இணைப்பது ஆகியவையே இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
வரலாறு
[தொகு]கிசோரி சக்தி இயோச்சனா என்பது ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகளின் கீழ் இருந்த முந்தைய வளரிளம் பெண்கள் திட்டத்தின் மறுவடிவமைப்பு ஆகும். இத்திட்டம் அதன் வரம்பை விரிவுபடுத்தி, உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது.[3]
நோக்கங்கள்
[தொகு]இத்திட்டத்தின் நோக்கங்கள், 11 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு அவர்களின் கல்வி மற்றும் தொழிலில் உதவுதல், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சுகாதாரம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பரந்த அறிவைப் பெறவும் சமூகத்தைப் பற்றிய அறிவைப் பெறவும் அவர்களுக்கு ஒரு வழியை வழங்குதல், மற்றும் அவர்களைத் தன்னிறைவு அடையத் தயார்படுத்துதல் ஆகியன இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Kishori Shakti Yojana". wcdodisha.gov.in (in ஆங்கிலம்). Odisha: Department of Women & Child Development and Mission Shakti, Government of Odisha. Archived from the original on 2018-12-21. Retrieved 2018-12-21.
- ↑ "Kishori Shakti Yojana" (PDF). wecd.uk.gov.in (in ஆங்கிலம்). Uttarakhand, India: Women Empowerment & Child Development, Government of Uttarakhand. Archived from the original (PDF) on 2018-12-21. Retrieved 2018-12-21.
- ↑ "Kishori Shakti Yojana". Ministry of Women and Child Development.
- ↑ "Kishori Shakti Yojana". National Portal of India. Ministry of Women and Child Development.