கிசோனா செல்வதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிசோனா செல்வதுரை
நேர்முக விவரம்
நாடு மலேசியா
பிறப்புஅக்டோபர் 1, 1998 (1998-10-01) (அகவை 25)
சிரம்பான், நெகிரி செம்பிலான், மலேசியா
உயரம்1.62 m (5 அடி 4 அங்) (5 அடி 4 அங்)
எடை50 kg (110 lb; 7.9 st)
கரம்வலது
பெண்கள் ஒற்றையர்
பெரும தரவரிசையிடம்53  (22 ஜுன் 2021)
தற்போதைய தரவரிசை64  (1 பிப்ரவரி 2022)
இ. உ. கூ. சுயவிவரம்
வென்ற பதக்கங்கள்
நாடு  மலேசியா
பெண்கள் இறகுப்பந்தாட்டம்
சுடிர்மான் கோப்பை
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2021 வந்தா, பின்லாந்து கலப்பு அணி
ஆசிய அணி போட்டி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2020 மணிலா பெண்கள் அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2022 சிலாங்கூர் பெண்கள் அணி
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 பிலிப்பைன்ஸ் பெண்கள் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2019 பிலிப்பைன்ஸ் பெண்கள் அணி
சிட்னி அனைத்துலகத் தொடர்[1]
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 சிட்னி பெண்கள் ஒற்றையர்
மலேசியா அனைத்துலகத் தொடர்[1]
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 கோலாலம்பூர் பெண்கள் ஒற்றையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 கோலாலம்பூர் பெண்கள் ஒற்றையர்
ஆசிய இளைஞர் விளையாட்டு
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2013 நான்ஜிங் பெண்கள் ஒற்றையர்
ஆசிய இளையோர் போட்டி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2012 கிம்சியோன், தென் கொரியா கலப்பு அணி

கிசோனா செல்வதுரை (பிறப்பு: 1 அக்டோபர் 1998); (மலாய்: Kisona Selvaduray; ஆங்கிலம்: Kisona Selvaduray) என்பவர் மலேசியாவில் இறகுப் பந்தாட்டக்காரர்.[2] 2013 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.[3]

கிசோனா செல்வதுரை மலேசியாவின் முதல் நிலை ஒற்றையர் ஆட்டக்காரராகத் திகழ்கின்றார். 2019-ஆம் ஆண்டில் பிலிப்பின்ஸில் நடைபெற்ற 30-ஆவது தென் கிழக்காசியப் போட்டிகளின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.[4]

அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி அனைத்துலகப் போட்டிகளில் வாகை சூடிய அவர், கடந்த 2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஸ்பெய்ன் பொது இறகுப் பந்தாட்டப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார். [5]

இவர் தன் முதல் அனைத்துலகப் பட்டத்தை, இந்தோனேசியா அனைத்துலகத் தொடர் இறகுப் பந்தாட்டப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வென்றார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கிசோனா செல்வதுரை, இறகுப் பந்தாட்டம் விளையாடும் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரின் சகோதரர்கள் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடந்த போட்டிகளில் செலுபு மாவட்டத்தைப் பிரதிநிதித்தவர்கள்.[7]

இவரின் தந்தையார் ஒரு காவல்துறை அதிகாரி. இவர் ஜெலுபு காவல்துறை அணியை பிரதிநிதித்தவர். கிசோனாவின் தாயார் எஸ். வளர்மதி. இவர் தன் பள்ளியைப் பிரதிநிதித்தவர். போலீஸ் குடும்பச் சங்க அணிக்காகவும் விளையாடியவர்.[7]

மலேசியப் பள்ளிகளின் விளையாட்டு மன்றம்[தொகு]

கிசோனா செல்வதுரை 4 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைக் குட்டியாவார். இவருக்கு இரு அண்ணன்கள்: தினகரன், மகேந்திரன். ஓர் அக்கா: கண்மணி. அனைவருமே இறகுப் பந்தாட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.

கிசோனா தன் 10-ஆவது வயதில் பெர்லிஸ் கங்கார் நகரில், 2009-ஆம் ஆண்டு மலேசியப் பள்ளிகளின் விளையாட்டு மன்றம் நடத்திய இறகுப் பந்தாட்டப் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் இளம் வெற்றியாளராகச் சாதனைப் புரிந்தார்.[7]

விளையாட்டு வரலாறு[தொகு]

2012-ஆம் ஆண்டிலும் 2014-ஆம் ஆண்டிலும் மலேசியப் பள்ளிகளுக்கான ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற கிசோனா. தேசிய இளநிலை வெற்றியாளர் விருதைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்குத் தக்க வைத்துக் கொண்டார்.

2013-ஆம் ஆண்டு ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் போட்டியில் வெண்கலம் வென்றார். 2014-ஆம் ஆண்டு நடந்த உலக இளையோர் போட்டியில் கிசோனாவுக்கு காலில் பெரும் காயம் ஏற்பட்டது.[8] இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப் பட்டன. மூன்று ஆண்டுகளுக்கு இறகுப் பந்தாட்டம் விளையாடுவதை நிறுத்தி விட்டார்.[9]

இந்தோனேசியா அனைத்துலகத் தொடர் இறுதிப் போட்டி[தொகு]

அவர் மீண்டும் விளையாடத் தொடங்கிய போதும், தொடக்கச் சுற்றுகளில் தோல்வி அடைந்தார். இருப்பினும், 2017-இல் இந்தோனேசியா அனைத்துலகத் தொடர் இறுதிப் போட்டியில் தங்கம் வென்றார்.

பின்னர் அவர் 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மலேசியா அனைத்துலகப் போட்டியில் வென்றார். 2019-ஆம் ஆண்டில் கிரீஸ், எல்லாஸ் பொதுப் போட்டி (Hellas Open); மற்றும் சிட்னி அனைத்துலகப் போட்டிகளில் வென்றது அவரின் மற்ற சாதனைகளாகும்.

சாதனைகள்[தொகு]

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்[தொகு]

பெண்கள் ஒற்றையர்

ஆண்டு இடம் போட்டியாளர் புள்ளிகள் முடிவு
2019 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் முன்டின்லுபா விளையாட்டு வளாகம், மணிலா, பிலிப்பைன்ஸ் இந்தோனேசியா ருசெலி அர்தாவான் 20–22
21–14
21–13
Gold தங்கம்

ஆசிய இளைஞர் விளையாட்டு[தொகு]

பெண்கள் ஒற்றையர்

ஆண்டு இடம் போட்டியாளர் புள்ளிகள் முடிவு
2013 நான்ஜிங் பெண்கள் ஒற்றையர் நான்ஜிங் விளையாட்டு நிறுவனம், நான்ஜிங், சீனா மலேசியா ஓ என் மேய் 21–15
23–21
Bronze வெண்கலம்

இறகுப்பந்தாட்ட உலகப்போட்டி[தொகு]

பெண்கள் ஒற்றையர்

ஆண்டு இடம் போட்டியாளர் புள்ளிகள் முடிவு
2017 இந்தோனேசியா அனைத்துலகப் போட்டி இந்தோனேசியா கிரிகோரியா மாரிசுகா துன்சங் 10–21
21–16
21–19
1st வெற்றியாளர்
2017 மலேசியா அனைத்துலகப் போட்டி மலேசியா லீ இங் இங் 16–21
21–15
21–17
1st வெற்றியாளர்
2018 மலேசியா அனைத்துலகப் போட்டி சீன தைப்பே லியாங் திங் யூ 14–21
21–7
21–19
1st வெற்றியாளர்
2019 கிரீஸ் எல்லாஸ் பொதுப் போட்டி மியான்மர் தெட் ஊட்டர் துசார் 21–14
21–9
1st வெற்றியாளர்
2019 சிட்னி அனைத்துலகப் போட்டி சப்பான் சியோர் எபிகரா 21–18
21–13
1st வெற்றியாளர்
2021 ஸ்பெயின் அனைத்துலகப் போட்டி மலேசியா கோ சின் வேய் 21–14
21–19
1st வெற்றியாளர்
     அனைத்துலக இறகுப் பந்தாட்டப் போட்டி
     அனைத்துலகத் தொடர் இறகுப் பந்தாட்டப் போட்டி
     அடுத்த அனைத்துலக இறகுப் பந்தாட்டப் போட்டி

இன்று மலேசியாவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு நட்சத்திர இறகுப் பந்தாட்ட விளையாட்டு வீரராக கிசோனா திகழ்கிறார். திண்ணைத் தாண்டி வா, விண்ணைத் தாண்டிப் போகலாம் எனும் வாசகம் அவர் அடிக்கடி சொல்லும் வாசகமாகும்.[10][11]

மேலும் காண்க[தொகு]

கிசோனா செல்வதுரையின் படங்களும் பேட்டியும்

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 "Kisona Selvaduray: Clinched the gold medals at the 2017 and 2018 Malaysia International Series". Birthdays in sports (in ஆங்கிலம்). 31 March 2021. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  2. "KISONA Selvaduray Profile". bwfbadminton.com. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  3. "Kisona eyeing first individual title". The Star (Malaysia). http://www.thestar.com.my/sport/badminton/2013/09/10/kisona-eyeing-first-individual-title/. 
  4. "National shuttler Kisona Selvaduray became a household name last year when she won the gold medal at the ladies singles' event in the 2019 SEA Games, making Malaysia beam with pride". Varnam MY. 12 May 2020. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  5. "Kisona Selvaduray | BAM". bam.org.my (in ஆங்கிலம்). Archived from the original on 28 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Fabian Peter (14 May 2017). "Badminton: Kisona earns maiden international title in Indonesia". New Straits Times. https://www.nst.com.my/sports/badminton/2017/05/239209/badminton-kisona-earns-maiden-international-title-indonesia. 
  7. 7.0 7.1 7.2 Selan, Siva (7 October 2021). "Kisona is the youngest in her family and she has two brothers and a sister. An interesting fact about her family members is that all of them love the sport and have actually participated in tournaments". TheSmartLocal Malaysia - Travel, Lifestyle, Culture & Language Guide. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  8. "Kisona Selvaduray Talks About the Love of Her Life, Badminton". Varnam MY. 12 May 2020. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  9. "மலேசியப் இறகுப் பந்தாட்ட வானில் பூத்திருக்கும் தாரகைகள்!". Malaysiakini. 19 January 2022. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  10. KumaraN, குமரன். "பெண்களைக் கொண்டாடும் ஆஸ்ட்ரோவின் பெண்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி | அநேகன்". பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  11. "இந்தியப் பெண்மணி கிசோனா செல்வதுரை. இவர் ஒரு மலேசிய பூப்பந்து வீரர். 2013 ஆம் ஆண்டு ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றவர்". பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசோனா_செல்வதுரை&oldid=3928862" இலிருந்து மீள்விக்கப்பட்டது