கிசெலா பான்
கிசெலா பான் Gisela Bonn | |
---|---|
பிறப்பு | 22 செப்டம்பர் 1909 செருமனி |
இறப்பு | 11 அக்டோபர் 1996 (வயது 87) |
பணி | பத்திரிகையாளர் சுற்றுச்சுழல் செயற்பாட்டாளர் இந்தியவியலாளர் |
விருதுகள் | பத்மசிறீ |
கிசெலா பான் (Gisela Bon) செருமன் நாட்டைச் சேர்ந்த ஒரு ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் இந்தியவியலாளர் ஆவார். 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.
இந்தோ-செருமன் உறவுகளை மேம்படுத்துவதில் இவரது பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட இவர், ஆங்கிலத்தில் இந்திய சவால் , துணைக்கண்டம் மற்றும் நேருவின் கீழ் இந்தியர்கள் போன்ற இந்தியா குறித்த பல புத்தகங்களை எழுதியுள்ளார்.[1][2] 1990 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[3]
இந்திய அரசின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் இந்தோ-செருமன் நட்பை மேம்படுத்துவதற்காக அவர் செய்த சேவைகளை கௌரவிப்பதற்காக 1996 ஆம் ஆண்டில் கிசெலா பான் விருது என்ற ஒரு விருதை நிறுவியது.[4]
கிசெலா பான் 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதியன்று காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DIG Profile". Deutsch-Indischen Gesellschaft. 2015. பார்க்கப்பட்ட நாள் September 23, 2015.
- ↑ "Amazon profile". Amazon. 2015. பார்க்கப்பட்ட நாள் September 23, 2015.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on October 15, 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
- ↑ "Gisela Bonn Award celebrates Indo-German friendship". German Missions in India. 2015. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் September 23, 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- de: Gisela Bon, செப்டம்பர் 23,2015 அன்று பெறப்பட்டது