கிசுயினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிசுயினி
KISHNI MAINPURI(UTTER PRADESH)

KISHNI
மைன்புரி மாவட்டத்தில் ஒரு நகரம்
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மைன்புரி
ஏற்றம்153 m (502 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்8,913
மொழிகள்
 • அலுவல்பூர்வம் இந்தி
நேர வலயம் இ.சீ.நே (ஒசநே+5:30)

கிசுயினி (Kishni) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் மைன்புரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகரப் பஞ்சாயத்தும் ஆகும். சாக்கிய முனி என்றழைக்கப்பட்ட கௌதம புத்தரின் பெரிய சிலை இருக்கிறது என்பது இந்நகரத்தின் சிறப்பாகும். 40 அடி உயரமுள்ள புத்தர் சிலை என்பதால் புத்தமதத்தினரால் இவ்வூர் பிரபலமாக அறியப்படுகிற்து. மேலும், அனைத்திந்திய அளவில் கிசுயினி நகரம் பூண்டு விவசாயம் செய்வதில் புகழ் பெற்று விளங்குகிறது. இவை தவிர இந்நகரத்தில் சிவமந்திர் மற்றும் செத்தம் என்ற இரண்டு பழமையான கோயில்கள் இருக்கின்றன. கிச்யின் நகருக்கு அருகில் காரெபூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஒரு பழமையான கோகா கி மகாராச் நகரக் கோயில் காணப்படுகிறது. ஆண்டுதோறும் இவ்வூரில் சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது. கிசுயினி நகரில் பட்டமளிக்கும் ஐந்து கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் கிச்யினி மகாவித்யாலயா என்ற பழமையான கல்லூரியும் அடங்கும்.

புவியியல்[தொகு]

27.02° வ 79.27° கிழக்கு என்ற ஆள்கூறுகள் அமைவிடத்தில் கிசுயினி நகரம் அமைந்துள்ளது.[1] சராசரியாக 153 மீட்டர் (501 அடி) உயர்வு தோற்றத்தைக் கிச்யினி நகரம் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[2] இந்நகரின் மக்கள் தொகை 8,913 ஆகும். இம்மக்கள் தொகையில் 53 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 47 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். கிசுயினி நகரின் படிப்பறிவு சதவீதம் 60% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 68% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 51% ஆகும். மக்கள் தொகையில் 19 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Kishni
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசுயினி&oldid=3575109" இலிருந்து மீள்விக்கப்பட்டது