கிசான் கடன் அட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிசான் கடன் அட்டை (Kisan Credit Card , KCC) என்பது 1998 ஆகத்து மாத்த்தில் 1998 இல் இந்திய வங்கிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டம் ஆகும். இந்த மாதிரி திட்டம் ஆர். வி. குப்தாவின் பரிந்துரையின் பேரில் தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கியால் தயாரிக்கப்பட்டது.  விவசாய தேவைகளுக்கேற்ப  குறுகிய கால கடன்கள் மற்றும் நீண்டகால கடன்களை வழங்கும் நோக்கம் கொண்டது. 

இதில் இந்திய அரசின் நிதியைக் கொண்டு அரசுப் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வழங்கும் கடன் அட்டைகள் மூலம், உழவர் ஒருவருக்கு ஆண்டு மூன்று இலட்சம் ரூபாய் கடன் வசதி அளிக்கப்படுகிறது. கடனுக்கான வட்டி விகிதம் 9 சதவிகிதம் என்றாலும், அரசு இரண்டு சதவிகிதம் வட்டி மானியம் வழங்குகிறது. தவணை காலத்திற்கு முன்பே விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்தினால், மேலும் 3 சதவிகிதம் வரை வட்டி தள்ளுபடி கிடைக்கும். அதாவது மொத்த வட்டி 4 சதவிகிதமாக மட்டுமே இருக்கும். இது ஆகஸ்ட் மாதம் 1998 இல் இந்திய வங்கிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டத்தை, 2020-ஆம் ஆண்டில் விரிவாக்கப்பட்ட திட்டமாகும்.

கிசான் கிரெடிட் கார்டு திட்டம் இப்போது கால்நடை விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இது உத்தரவாதமின்றி இலவசமாக கடனை வழங்கும். இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ், நாட்டின் சுமார் 14 கோடி விவசாயிகளுக்குக் காப்பீட்டு உத்தரவாத கடன்கள் வழங்கப்படும்.[1]

கடன் அட்டை பெறுவதற்கான ஆவணங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kisan Credit Card

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசான்_கடன்_அட்டை&oldid=3654529" இலிருந்து மீள்விக்கப்பட்டது