கிங்க்ஃபிஷர் ரெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நடத்திய குறைந்த கட்டண விமானச் சேவை கிங்க்ஃபிஷர் ரெட் ஆகும். இது மும்பையினை தலைமையகமாகக் கொண்ட கிங்க்ஃபிஷர் நிறுவனத்தால் இயக்கப்பட்டது. இது பயணிகளை தனது முதன்மை நிறுவனமான கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உதவியுடன் பெற்றது. ‘சினி பிலிட்ஸ்’ எனப்படும், விமானத்திற்குள் கொடுக்கப்படும் படிக்கக்கூடிய ஒரு சிறப்புமிக்க புத்தகம் கிங்க்ஃபிஷர் ரெட்டைப் பற்றிய பல தகவல்களைக் கொண்டது. ஆரம்பத்தில் ‘ஏர் டெக்கான்’ என அழைக்கப்பட்ட இந்நிறுவனம் பின்னர் கிங்க்ஃபிஷர் ரெட் என மாற்றப்பட்டது. கிங்க்ஃபிஷரின் அமைப்பின் வழியாக கிங்க்ஃபிஷர் ரெட்டில் இருக்கை பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டது.

இந்தக் குறைந்த கட்டணச் சேவையினை தொடர முடியாத காரணத்தினால், கிங்க்ஃபிஷர் நிறுவனங்களின் உரிமையாளரான விஜய் மல்லையா, கிங்க்ஃபிஷர் ரெட்டின் விமானச் சேவையினை நிறுத்தப்போவதாக செப்டம்பர் 28, 2011 ல் அறிவித்தார்.[1]

வரலாறு[தொகு]

ஏர் டெக்கான், டெக்கான் ஏவியேஷனின் துணை நிறுவனமாக செயல்பட்டது. இது கேப்டன் G. R. கோபிநாத் அவர்களால் முதல் குறைந்த கட்டண விமான சேவையாகத் தொடங்கப்பட்டது. இதன் முதல் விமானம் ஆகஸ்ட் 23, 2003 இல் பெங்களுரில் இருந்து ஹப்ளிக்கு செயல்பட்டது.[2] மனிதனின் இரு கரங்கள் இணைந்து பறப்பதைக் குறிப்பதுபோல் இதன் சின்னம் அமைந்துள்ளதால், இது பெரும்பாலும் சாதாரண மக்களுக்கும் பயன்படும் என்று எளிதாக அறிவுறுத்தியது. மேலும், அதனருகில் எழுதப்பட்டிருந்த “சிம்பிளி-ஃப்ளை” எனும் எழுத்துக்கள் எந்தவொரு சாதாரண மனிதனும் இனி பறக்கலாம் என்பதை எடுத்துரைத்தது. இதுதான் கேப்டன் கோபிநாத் அவர்களின் கனவும் கூட. ஒவ்வொரு இந்தியனும் ஒரு முறையாவது விமானத்தில் பறந்திருக்க வேண்டும், என்று அவர் கனவு கண்டதே இதற்குக் காரணம்.

மதுரை, ஹப்ளி, மங்களூர் மற்றும் விசாகப்பட்டினம் போன்ற இரண்டாம்நிலை நகரங்களுக்கு முதல்நிலை பெருநகரங்களில் இருந்து விமானங்களை அனுப்ப வசதி செய்த முதல் நிறுவனம் ஏர் டெக்கான் ஆகும். இதன் தனித்தன்மையான வளர்ச்சி பல நிறுவனங்களை விமானச்சேவையில் முதலீடு செய்யத் தூண்டியது. அதன்பிறகு, விமானச்சேவையில் ஈடுபட்டிருந்த ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஜெட் லைட், மற்றும் கோ ஏர் போன்ற நிறுவனங்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவியது. உள்ளூர் விமானச்சேவையில் கட்டணத்தினைக் குறைப்பது குறித்தும் அவர்கள் தீவிரமாக சிந்தித்தனர்.

கிங்க்ஃபிஷருடன் இணைதல்:[தொகு]

Interior of Air Deccan Airbus A320

பின்னர், ஜனவரி 25, 2006 முதல் ஏர் டெக்கான் சரிவினைத் தழுவத் தொடங்கியது. அதன் பங்குச்சந்தை மற்றும் இதர இடங்களில் அடைந்த நஷ்டத்தின் காரணமாக ஏர் டெக்கான் சுமார் 3.4 பில்லியன் ரூபாய் பணத்தினை இழந்தது. இது அதன் கடைசி 15 மாதத்தில் அடைந்த இழப்பு மட்டுமே. பின்னர் பல செயல்முறைகளுக்குப் பின்னர் டிசம்பர் 19, 2007 இல் ஏர் டெக்கான், கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உடன் இணைவதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு இணைவதற்கு உள்ளூர் விமானச்சேவை ஐந்து ஆண்டுகளாவது பணியில் இருந்தால்தான் உலகளவில் விமானச்சேவையில் ஈடுபட முடியும் என்ற விதிமுறையும் ஒரு முக்கியக் காரணம்.[3] இரு நிறுவனங்களும் இணைந்த பின்னர் விஜய் மல்லையா அதன் தலைமை நிர்வாக அதிகாரியானார். கேப்டன் கோபிநாத் அதன் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். இது ஏப்ரல் 2008 முதல் அமலுக்கு வந்தது. கார்பரேட் மற்றும் வணிகச் சேவைகளுக்காக கிங்க்ஃபிஷர் நிறுவனமும், குறைந்த கட்டணச் சேவைகளுக்கு ஏர் டெக்கான் நிறுவனமும் என, இணைந்து செயலாற்றினர். ஆகஸ்ட் 2008 முதல் அந்நிறுவனம் ‘கிங்க்ஃபிஷர் ரெட்’ எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு, கிங்க்ஃபிஷரின்  IATA  குறியீட்டுடன் செயல்பட்டது.[4][5]

கிங்க்ஃபிஷர் ரெட்டின் உதவியுடன் இரயிலில் முதல் தர வகுப்பில் பயணம் செய்யும் அதே பண மதிப்பில் விமானத்திலும் பயணம் செய்யலாம் என நிரூபித்தனர். செப்டம்பர் 2011 முதல் கிங்க்ஃபிஷர் ரெட் தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.[6]

இலக்குகள்[தொகு]

கிங்க்ஃபிஷர் ரெட் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், சர்வதேச அளவில் சில பகுதிகளுக்கும் தனது விமான சேவையினை புரிந்தது. அவற்றுள் முக்கியமானவை: தென்னிந்தியா – அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திர பிரதேசம், அசாம், பீகார், சண்டிகார், டெல்லி, கோவா, குஜராத், ஹிமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா,மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் உத்தரகாண்ட்.

விமானக் குழுமங்கள்[தொகு]

குறைந்த கட்டணச் சேவைகளை நிறுத்திய பிறகு ஏர்பஸ் A-320 மற்றும் ATR-72 விமானங்கள் கிங்க்ஃபிஷரின் இதர விமான சேவைகளுக்கு மாற்றியமைக்கப்பட்டு பின்னர் பயன்படுத்தப்பட்டது. [7] விபத்துக்கள்: செப்டம்பர் 24, 2003 இல் ஹைதராபத்திலிருந்து விஜயவாடாவிற்கு சென்ற ஏர் டெக்கானின் விமானம் பறப்பதற்கு முன்பாக நடையோட்டம் செய்யப்படும்போதே தீப்பிடித்தது. அந்த விமானத்தில் வெங்கையா நாயுடு, ராஜீவ் பிரதாப் ருடி, எர்ரான் நாயுடு போன்ற பல முக்கியப் பிரமுகர்கள் இருந்தனர். இது ATR-42 விமானம் மூலம் இயக்கப்பட்டது.[8][9]

அடுத்த மார்ச் 29, 2004 இல் கோவாவிலிருந்து பெங்களுர் சென்ற விமானம் பறந்து சென்ற அரை மணிநேரத்தில் புகை நிரம்பியதாக திரும்பி வந்தது. இதுவும் ATR-42 விமானம் மூலம் இயக்கப்பட்டதுதான்.[10]

மார்ச் 11, 2006 இல் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருக்குச் சென்ற விமானம் HAL விமான நிலையத்தில் கஷ்டப்பட்டு தரையிறக்கப்பட்ட்து. அதில் 44 பேர் இருந்தனர் (40 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள்). அவர்களுக்கு எந்த உயிர்பாதிப்பும் ஏற்படவில்லை, ஆனால் ATR-42 விமானம் அதிக பாதிப்புக்குள்ளானது.[11]

குறிப்புகள்[தொகு]

  1. "Kingfisher to exit low-cost airline operation". CNN IBN. 28 September 2011. Archived from the original on 1 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 28 September 2011.
  2. "About Air Deccan". Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-11-14.
  3. "Deccan international flights from August 2008". Blonnet.com. 17 November 2007. பார்க்கப்பட்ட நாள் 30 August 2010.
  4. "Deccan to be rebranded Kingfisher Red". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 30 August 2010.
  5. "Air Deccan is now Kingfisher Red". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 30 August 2010. {{cite web}}: |first= missing |last= (help)CS1 maint: numeric names: authors list (link)
  6. "Kingfisher Red Airlines". Cleartrip.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  7. "Kingfisher to exit low-cost flying". Times of India. 29 September 2011. பார்க்கப்பட்ட நாள் 20 August 2012.
  8. "Fire grounds Air Deccan". Business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 30 August 2010. {{cite web}}: |first= missing |last= (help); no-break space character in |first= at position 23 (help)CS1 maint: numeric names: authors list (link)
  9. "Major plane accident averted". Hinduonnet.com. 5 September 2003. பார்க்கப்பட்ட நாள் 30 August 2010.
  10. "Low-cost flight under a cloud". Hindu.com. 11 April 2004. பார்க்கப்பட்ட நாள் 30 August 2010.
  11. "Air Deccan aircraft skids off runway". Thehindubusinessline.com. 12 March 2006. பார்க்கப்பட்ட நாள் 30 August 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிங்க்ஃபிஷர்_ரெட்&oldid=3549556" இலிருந்து மீள்விக்கப்பட்டது