கிகுச்சி ஆறு

ஆள்கூறுகள்: 32°52′47″N 130°31′34″E / 32.879855°N 130.526028°E / 32.879855; 130.526028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிகுச்சி ஆற்றின் பள்ளத்தாக்கில் விரைவுச்சுழல்கள்

கிகுச்சி ஆறு (菊池川, கிகுச்சி-கவா ) ஜப்பானின் கியோஷோவின் குமாமோட்டோ மாகாணத்தின் வடக்குப் பகுதி வழியாகப் பாய்கிறது. இந்த ஆற்றின் மூல ஆதாரமானது , 1041 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அசோ மவுண்டிற்கு அருகிலுள்ள அசோ நகரத்தின் ஃபுகாபா என்னும் இடமாகும்.[1] இங்கு உற்பத்தியான ஆறு கிகுச்சி பள்ளத்தாக்கு வழியாக மேற்கு நோக்கி பாய்கிறது. இது கிகுசுய் அருகே தெற்கே திரும்பி அரியாக் கடலில் உள்ள ஷிமாபரா விரிகுடாவில் கலக்கிறது. அதன் முகத்துவாரத்தினருகில் நில மீளமைப்பு நடைபெறுகிறது. [2]

இந்த நதியின் மொத்த நீளம் 71 கி.மீ ஆகும். இது 1041 மீட்டர் உயரத்தில் தொடங்கி 995 சதுர கிலோமீட்டர் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த ஆற்றின் அகலம் 24 மீட்டர் முதல் 72 மீட்டர் வரை இருக்கும். தற்போதைய வெளியேற்ற வேகம் ஆண்டு முழுவதும், வினாடிக்கு 10 முதல் 350 கன மீட்டர் வரை மாறுபடும். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Okamura, Maya; Minagawa, Tomoko (2016). "Historical and Physical Evaluation of Floodplain Habitats in The River Channel of the Kikuchi River". 11th International Symposium on Ecohydraulics (ISE 2016) (Engineers Australia): 91–98. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780734053398. http://proceedings.ise2016.org/papers/25984.pdf. பார்த்த நாள்: 2022-06-28. 
  2. Ohmoto, T., R. Hirakawa, and K. Watanabe. "Flow pattern and sediment transport in the Kikuchi River mouth." In 6th International Symposium on Environmental Hydraulics. 2010.
  3. Higa, Atsushi; Kasai, Fumie; Kawachi, Masanobu; Kumano, Shigeru; Sakayama, Hidetoshi; Miyashita, Mamoru; Watanabe, Makoto M. (2007-03-01). "Seasonality of gametophyte occurrence, maturation and fertilization of the freshwater red alga Thorea okadae (Thoreales, Rhodophyta) in the Kikuchi River, Japan" (in EN). Phycologia 46 (2): 160–167. doi:10.2216/05-39.1. https://archive.org/details/sim_phycologia_2007-03_46_2/page/160. 

வெளி இணைப்புகள்[தொகு]

தமனா, குமாமோட்டோவில் உள்ள நதி.

32°52′47″N 130°31′34″E / 32.879855°N 130.526028°E / 32.879855; 130.526028(முகத்துவாரம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிகுச்சி_ஆறு&oldid=3580992" இலிருந்து மீள்விக்கப்பட்டது