கா. வை. சுப்ரமணிய அய்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காந்தாடை வைத்யா சுப்ரமணிய அய்யர் (K. V. Subrahmanya Aiyar)(1875 – 7 நவம்பர் 1969) என்பவர் தமிழ் கல்வெட்டியல் மற்றும் வரலாற்றாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டுகளைத் தமிழ்ப் பிராமி வடிவமாகத் தீர்மானித்த முதல் நபராகக் கருதப்படுகிறார்.[1][2][3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சுப்ரமணிய அய்யர் 1875இல் கோயம்புத்தூர் பிறந்தார். திருச்சிராப்பள்ளியில் கல்வி பயின்றார். கல்வி முடிந்ததும், அய்யர் கோயம்புத்தூர் அருகிலுள்ள ஒட்டச்சத்திரத்தில் ஆட்சியர் அலுவலக பணியினைப் பெற்றார். இங்கு இவரது திறன்களைத் தலைமை கல்வெட்டியலாளர் வலையாட்டூர் வெங்கையா கவனித்து அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தன்னுடைய அணியில் 1906ஆம் ஆண்டில் சேர்த்தார்.

தொழில்[தொகு]

சுப்ரமணிய அய்யர் 1906 முதல் 1932 வரை அரசாங்க கல்வெட்டு ஆசிரியராக பணியாற்றினார். இவர் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதிகள் VI, VII மற்றும் VIIIஐத் திருத்தி எபிகிராஃபியா இண்டிகாவுக்காக எழுதினார். 1938ஆம் ஆண்டில், பண்டைய தெக்கானின் வரலாற்று ஓவியங்கள் தொகுதி-3 எனும் படைப்பை வெளியிட்டார்.

படைப்புகள்[தொகு]

  • Aiyar, K. V. Subrahmanya (1917). Historical Sketches of Ancient Deccan. Modern Printing Works. 
  • Aiyar, K. V. Subrahmanya (1924). The Earliest monuments of the Pândya country and their inscriptions. 

மேற்கோள்கள்[தொகு]

  1. "Records and revelations". Archived from the original on 2010-10-21. https://web.archive.org/web/20101021044255/http://www.hinduonnet.com/lr/2003/08/03/stories/2003080300280400.htm. 
  2. "Straight from the Heart - Iravatham Mahadevan: Interview with Iravatham Mahadevan". Varalaaru.com.
  3. "Jaina treasure trove in Mankulam village". http://www.thehindu.com/todays-paper/article365626.ece. 

குறிப்புகள்[தொகு]