கா. சுஜந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கா. சுஜந்தன் ( சுஜோ, சுருதி ) - ஈழத்து எழுத்தாளர், இதழாசிரியர். போர் வலயத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்.

கிளிநொச்சி சுகாதார வைத்திய பிரிவினால் வெளியிடப்பட்ட "விழி" மருத்துவ மாத இதழின் நிறுவனரும் ஆசிரியருமாவார் (2000-2008). விழி இதழ் தொண்ணூற்று ஐந்து இதழ்களைப் பிரசுரித்திருந்தது. சுதேச ஒளி காலாண்டு சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார் (2007-2008). கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கிய சுகாதார கல்லூரியின் "அக ஒளி" வருட சிறப்பு இதழ்களின் (இரு) ஆசிரிய ஆலோசகராகவும், புலிகளின் குரல், ஈழநாதம், தமீழீழ தேசியத் தொலைக்காட்சி ஆகியவற்றின் சுயாதீன செய்தி வழங்குனராகவும் இருந்தார். இவர் இதழியல், தத்துவவியல் போன்ற துறைகளில் பட்டயக்கற்கையை பூர்த்தி செய்திருந்தார்.

சிறுகதை, கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். இவரது மனைவி பெயர் சு.ராஜசெல்வி .

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • அந்தநாளை அடைவதற்காய் (கவிதை தொகுதி) -1999
  • உறவுகள் (குறுநாவல்)-2000
  • அந்த நாள் எந்தநாளோ (பாடல்கள், சிறுகதைகள்)-2001
  • கண்ணீர்த்துளிகள் (கவிதைத்தொகுதி)-2007
  • சுகவாழ்வு (தாளலயம்)-2009
  • சாட்சி -(நீள்கவிதை )- 2010
  • பாரம்பரிய விளையாட்டுக்கள் - இணை ஆசிரியர் - 2010
  • ஒரு ஈழ அகதியின் மனவெளியிலிருந்து--( நீள்கவிதை ) - 2012
  • அகதியின் குழந்தை -2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._சுஜந்தன்&oldid=2716148" இருந்து மீள்விக்கப்பட்டது