கா. கோபாலகிருஷ்ணன்
தோற்றம்
கா. கோபாலகிருஷ்ணன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | கே. பண்ணை சேதுராம் |
| பின்னவர் | டி. முகமது சலீம் |
| தொகுதி | பெரியகுளம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 5 ஏப்ரல் 1941 வடுகப்பட்டி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| முன்னாள் மாணவர் |
|
| தொழில் | விவசாயி |
கா. கோபாலகிருஷ்ணன் (K. Gopalakrishnan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தேனி மாவட்டம் வடுகப்பட்டி கிராமத்தினைச் சேர்ந்தவர். கொடைக்கானல் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். பின்னர் மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பினையும் சென்னை, அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டப் படிப்பினையும் முடித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]