காஷ்மோர் மாவட்டம்
காஷ்மோர் மாவட்டம்
| |
|---|---|
மாவட்டம் | |
காஷ்மோரின் பண்டைய மாளிகை | |
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் காஷ்மோர் மாவட்டத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 28°21′N 69°23′E / 28.350°N 69.383°E | |
| நாடு | பாகிஸ்தான் |
| மாகாணம் | கோட்டம் |
| சிந்து மாகாணம் | லர்கானா கோட்டம் |
| தலைமையிடம் | காந்தகோட் |
| அரசு | |
| • வகை | மாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர் |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 2,580 km2 (1,000 sq mi) |
| மக்கள்தொகை | |
| • மாவட்டம் | 12,33,957 |
| • அடர்த்தி | 478/km2 (1,240/sq mi) |
| • நகர்ப்புறம் | 2,71,782 (22.03%) |
| • நாட்டுப்புறம் | 9,62,175 |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| வருவாய் வட்டங்கள் | 3 |
காஷ்மோர் மாவட்டம் (Kashmore District), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்து மாகாணத்தின் வடக்கில் உள்ள லர்கானா கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காந்தகோட் நகரம் ஆகும். காந்தகோட் நகரமானது, சிந்து மாகாணத் தலைநகரான கராச்சிக்கு வடகிழக்கே 621 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 845 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இம்மாவட்டம் பலூசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களை இணைக்கிறது. காஷ்மோர் நகரம் பஞ்சாப் மற்றும் பஞ்சாப் மாகாணங்களின் நுழைவாயிலாக உள்ளது.[3]2024ஆம் ஆண்டின் ஜோகோபாபாத் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு காஷ்மோர் மாவட்டம் நிறுவப்பட்டது.
புவியியல்
[தொகு]சிந்து மாகாணத்தில் வடக்கில் காஷ்மோர் மாவட்டம் உள்ளது.காஷ்மோர் மாவாட்டத்தின் சுற்றிலும் கோட்கி மாவட்டம், ஜோகோபாபாத் மாவட்டம், சிகார்பூர் மாவட்டம் மற்றும் சுக்கூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. மேலும் இம்மாவட்டம் பலூசிஸ்தான் மற்றும் பஞ்சாப் மாகாணங்களை எல்லைகளைகளாகக் கொண்டுள்ளது. காஷ்மோர் மாவட்டத்தின் கிழக்கில் சிந்து ஆறு பாய்கிறது. இம்மாவட்டத்தின் தெற்கில் கச்சா காடுகள் உள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கில் சிந்துவின் தார் பாலைவனம் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]காஷ்மோர் மாவட்டம் 3 வருவாய் வட்டங்கள் மற்றும் 41 ஒன்றியக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
| வருவாய் வட்டம்[4] | பரப்பளவு
(km²)[5] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[6] |
ஒன்றியக் குழுக்கள் |
|---|---|---|---|---|---|
| காந்தகோட் வட்டம் | 654 | 407,592 | 623.23 | 37.91% | 10 |
| காஷ்மோர் வட்டம் | 1,262 | 487,601 | 386.37 | 32.65% | 17 |
| தாங்வானி வட்டம் | 664 | 338,764 | 510.19 | 36.95% | 14 |
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 208,894 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 1,233,957 ஆகும்[7]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 103.73 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 35.59% ஆகும்[1][8]. இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 485,925 (39.38%) ஆக உள்ளனர்.[9]நகர்புறங்களில் 271,782 (22.03%) மக்கள் வாழ்கின்றனர்.[1]
சமயம்
[தொகு]இம்மாவட்ட மக்கள் தொகையில் இசுலாம் சமயத்தை 96.5% மக்களும், இந்து சமயத்தை 3.21% மற்றும் கிறித்துவம் போன்ற சிறுபான்மைச் சமயங்களை 0.29% மக்களும் பின்பற்றுகின்றனர்.
மொழி
[தொகு]இம்மாவட்ட மக்கள் தொகையில் சிந்தி மொழியை 94.07 மக்களும், பலூச்சி மொழியை 5.20 % மக்களும் மற்றும் பிற மொழிகளை 0.73% மக்களும் பேசுகின்றனர்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, SINDH" (PDF).
- ↑ "Sindh population surges by 81.5 pc, households by 83.9 pc". Thenews.com.pk. 2 April 2012. http://www.thenews.com.pk/Todays-News-13-13637-Sindh-population-surges-by-81.5-pc,-households-by-83.9-pc.
- ↑ Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம் Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, SINDH" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, SINDH" (PDF).
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.