காஷ்மீரின் கலாச்சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரம்பரிய காஷ்மீரி உடையில் காஷ்மீரி பெண்

காஷ்மீரின் கலாச்சாரம் (Culture of Kashmir) இந்திய துணைக்கண்டத்தின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த காஷ்மீர மக்களின் பேச்சு மொழி, எழுதப்பட்ட இலக்கியம், உணவு வகைகள், கட்டிடக்கலை, மரபுகள் மற்றும் வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கியது. காஷ்மீர் மீதான இசுலாமிய படையெடுப்பிற்குப் பிறகு காஷ்மீரின் கலாச்சாரம் பாரசீக மற்றும் மத்திய ஆசிய கலாச்சாரங்களால் பாதிக்கப்பட்டது. காஷ்மீர கலாச்சாரம் இந்து சமயம், பௌத்தம் மற்றும் பின்னர் இசுலாம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.[1]

ஆரம்பகால வரலாறு[தொகு]

காஷ்மீரில் கண்டெடுக்கப்பட்ட 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாதேவரின் சிலை. தற்போது கிளீவ்லேண்ட் கலை அருங்காட்சியகத்தில் உள்ளது.

காஷ்மீரில் வேத கலை மற்றும் கலாச்சாரம் வளர்ந்திருந்தது. மேலும் சில ஆரம்பகால வேத பாடல்களும் இங்கு இயற்றப்பட்டன. [2]

இந்திய கலாச்சாரத்தில் நடனம், இசை மற்றும் இலக்கிய மரபுகளில் செல்வாக்கு செலுத்திய கலைகள் பற்றிய பண்டைய கலைக்களஞ்சியக் கட்டுரையாக குறிப்பிடத்தக்க காந்தர்வ வேதம் காஷ்மீரில் உருவானது.

கிமு 2 ஆம் நூற்றாண்டின் எழுத்தாளர் பதஞ்சலி யோகக் கலை பற்றிய தனது தொகுப்பை காஷ்மீரில் தொகுத்தார். [2]

விஷ்ணு சர்மா என்பவரால் கி.மு 200-ல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் பஞ்சதந்திரமும் இப்பகுதியில்தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது. [3]

இந்தியாவின் பிற பகுதிகளில் பௌத்த இலக்கியங்களுக்கு பாலி முதன்மை மொழியாக இருந்த காலத்தில், காஷ்மீரில் உருவாக்கப்பட்ட பௌத்த இலக்கியங்கள் அனைத்தும் சமசுகிருதத்திலேயே இருந்தன. காஷ்மீர் பெண்கள் சமசுகிருதம் மற்றும் பாலி ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்கள் என்று பில்ஹணன் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் காஷ்மீரி பெண்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தனர் என அறியப்படுகிறது.

காமசூத்திரத்திற்கு அடுத்தபடியாக பாலின அறிவியலில் கோஷ் சாஸ்திரம் காஷ்மீரில் உருவாக்கப்பட்டது. விக்யான் பரைவ் தந்திரம், யோக சூத்திரங்கள், சப்ந்தி கர்கிகா [4] தந்திர லோகம் [5] மற்றும் பரா-திரிசிகா-விவரணை போன்றவை காஷ்மீரில் தோன்றிய முக்கிய நூல்களுக்கு இன்னும் சில எடுத்துக்காட்டுகளாகும். [6]

உணவு முறை[தொகு]

அரிசி என்பது காஷ்மீரிகளின் முக்கிய உணவாகும். அது பண்டைய காலங்களிலிருந்தே இருந்துள்ளது. காஷ்மீரில் அரிசியுடன் இறைச்சியும் மிகவும் பிரபலமான உணவுப் பொருளாக இருக்கிறது. காஷ்மீரிகள் இறைச்சியை அதிகமாக சாப்பிடுகிறார்கள். பிராமணர்களாக இருந்தாலும், பெரும்பாலான காஷ்மீர பண்டிதர்கள் இறைச்சி உண்பவர்களாகவே இருக்கிறார்கள். காஷ்மீரி பானங்களில் நூன் சாய் அல்லது ஷீர் சாய் மற்றும் கஹ்வா அல்லது கேஹூ ஆகியவை அடங்கும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் ரொட்டி பாரம்பரியத்திற்காக குறிப்பிடத்தக்கது. பேக்கர்கள் எள் மற்றும் பாப்பி விதைகளுடன் தங்க பழுப்பு நிற மேலோடுகளுடன் பல்வேறு வகையான ரொட்டிகளை விற்கிறார்கள். ஷீர்மல், பாகர்கெய்ன் (பஃப் பேஸ்ட்ரி), லாவாஸ் (புளிப்பில்லாத ரொட்டி) மற்றும் குல்ச்சா ஆகியவை பிரபலமாக உள்ளன. கிர்டாஸ் மற்றும் லாவாஸ் ஆகியவை வெண்ணெயுடன் பரிமாறப்படுகின்றன. காஷ்மீரி உணவு வகைகளில் காஷ்மீரி பேக்கர்கானிக்கு தனி இடம் உண்டு. இது தோற்றத்தில் ஒரு வட்டமான ரொட்டி போன்றது. ஆனால் மிருதுவாகவும் அடுக்குகளாகவும், எள் விதைகளால் தெளிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. [7] இது பொதுவாக காலை உணவின் போது சூடாக உட்கொள்ளப்படுகிறது. [8]

திருவிழாக்கள்[தொகு]

(இடது) சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 2,200 ஆண்டுகள் பழமையான ஆதி சங்கரர் கோயில்; (வலது) கி.மு 1395 இல் கட்டப்பட்ட பள்ளி வாசல்

காஷ்மீரி இந்துக்கள்[தொகு]

காஷ்மீரி இந்துக்களின் முதன்மை பண்டிகைகளில் பின்வருவன அடங்கும்:

  • ஹேரத் (சிவராத்திரி)
  • கெட்ச்மாவாஸ்
  • நவ்ரே
  • சையத் ஆதம்
  • திக்கி சோரம்
  • பான்
  • காட் பேட்

காஷ்மீரி முஸ்லிம்கள்[தொகு]

காஷ்மீரி முஸ்லீம்களின் முதன்மை பண்டிகைகளில் பின்வருவன அடங்கும்:

மொழி மற்றும் இலக்கியம்[தொகு]

</img>
</img>
(இடது) பக்சாலி கையெழுத்துப் பிரதியில், ஆரம்பகால சாரதா எழுத்துகளின் மாதிரி; (வலது) பெர்சிய-அரேபிய எழுத்தில் வெரிநாக்கிலுள்ள கல் பலகை

காஷ்மீரி என்பது இந்திய-ஆரிய மொழிகளின் தார்டிக் துணைக்குழுவிலிருந்து வந்த ஒரு மொழியாகும். இது சுமார் 7 மில்லியன் காஷ்மீரிகளால் பேசப்படுகிறது, முதன்மையாக இந்தியப் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் . அண்டை நாடான ஆசாத் காஷ்மீரின் சில பகுதிகளிலும் இதைப் பேசுபவர்கள் உள்ளனர்.

கோஷூர், தோக்ரி, இந்தி - உருது மற்றும் ஆங்கிலம் ஆகியன ஜம்மு மற்றும் காஷ்மீரின் அதிகாரப்பூர்வ மொழிகளாகும். காஷ்மீரி மொழி மாநிலத்தில் ஒரு பிராந்திய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் 22 அலுவல் மொழிகளில் ஒன்றாகும்.

காஷ்மீரி பாரம்பரியமாக சாரதா எழுத்துக்களில் எழுதப்பட்டாலும், [9] [10] [11] இது காஷ்மீர பண்டிதர்களின் மத விழாக்களைத் தவிர, இன்று பொதுவான பயன்பாட்டில் இல்லை. [12]

இன்று அது பெர்சிய-அரேபிய மற்றும் தேவநாகரி எழுத்துக்களில் (சில மாற்றங்களுடன்) எழுதப்பட்டுள்ளது. [13]

ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் கலை, கலாச்சாரம் மற்றும் மொழிகளின் அகாதமி ஆகியவற்றால் பெர்சிய-அரேபிய எழுத்துகள் காஷ்மீரி மொழியின் அதிகாரப்பூர்வ எழுத்து மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[14] [15]

இப்போதெல்லாம், பெர்சிய-அரேபிய எழுத்துகள் காஷ்மீரி முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் தேவநாகரி எழுத்து காஷ்மீரி இந்து சமூகத்துடன் தொடர்புடையது. [16]

இசை[தொகு]

A short film on Kashmiri wedding, with Kashmiri music
தில்லியில் ரூஃப் நடனம் ஆடும் காஷ்மீரி பெண்கள்

ஆரம்பகால வரலாறு[தொகு]

காஷ்மீரில் உருவான, இந்தியாவில் நடனம், இசை மற்றும் இலக்கிய மரபுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய கலைகள் பற்றிய பண்டைய கலைக்களஞ்சியக் கட்டுரையாக பரத நாட்டிய சாஸ்திரம் குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாள்[தொகு]

காஷ்மீரி இசை முதன்மையாக

  • சக்ரி
  • ஹென்சே
  • ரூஃப் அல்லது வான்வுன்
  • லடிஷா
  • சுபியான கலாம்

போன்றவற்றை உள்ளடக்கியது:

குறிப்புகள்[தொகு]

  1. KAW, Mushtaq A. (2010). "Central Asian Contribution to Tradition of Religion-Cultural Pluralism" (in en). Central Asiatic Journal 54 (2): 237–255. 
  2. 2.0 2.1 Nations, United. "Rigvedasamhita, Rigvedasamhita-Padapatha and Rigvedasamhitabhashya" (PDF). Archived from the original (PDF) on 2020-11-13. பார்க்கப்பட்ட நாள் 2020-12-11.
  3. Datta, Amaresh (1988) (in en). Encyclopaedia of Indian Literature: Devraj to Jyoti. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-1194-0. https://books.google.com/books?id=zB4n3MVozbUC&pg=PA1254. பார்த்த நாள்: 2020-11-10. 
  4. . 1992-01-01. 
  5. . 2010. 
  6. . 2007. 
  7. "Culture of Anantnag". District Anantnag J&K. Archived from the original on 2009-06-19.
  8. "Kashmir has special confectionary". Thaindian.com. 2008-03-13. Archived from the original on 2018-05-12. பார்க்கப்பட்ட நாள் 2013-07-18.
  9. "ScriptSource - Sharada, Śāradā". www.scriptsource.org. Archived from the original on 2020-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-07-14.
  10. Language: Sharda Script, India, archived from the original on 2020-07-03, பார்க்கப்பட்ட நாள் 2020-07-01
  11. Kaul Deambi, B. K. "The Sharada Script : Origin and Development". Kashmiri Overseas Association. Archived from the original on 7 January 2010. பார்க்கப்பட்ட நாள் 18 July 2020.
  12. Kaul, Omkar Nath. "On Kashmiri Language". Kashmiri Overseas Association. Archived from the original on 25 January 2012. பார்க்கப்பட்ட நாள் 18 July 2020.
  13. "Kashmiri Language". omnigot. Archived from the original on 14 August 2020. பார்க்கப்பட்ட நாள் 18 July 2020.
  14. B. Kachru, Braj. "An introduction to Spoken Kashmiri". Archived from the original on 29 January 2020. பார்க்கப்பட்ட நாள் 18 July 2020.
  15. Kaul, Omkar Nath. "Spoken Kashmiri A Language Course". Archived from the original on 29 November 2016. பார்க்கப்பட்ட நாள் 18 July 2020.
  16. "Valley divide impacts Kashmiri, Pandit youth switch to Devnagari - Indian Express". http://archive.indianexpress.com/news/valley-divide-impacts-kashmiri-pandit-youth/472872. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஷ்மீரின்_கலாச்சாரம்&oldid=3652376" இலிருந்து மீள்விக்கப்பட்டது