காவ்ரீல் திக்கோவ்
காவ்ரீல் திக்கோவ் | |
---|---|
மனைவியுடன் காவ்ரில் திக்கோவ். புல்கோவோ, 1912 | |
பிறப்பு | Smaliavičy, கசக்கஸ்தான் |
இறப்பு | 25 சனவரி 1960 அல்மாத்தி |
படித்த இடங்கள் |
|
பணி | வானியல் வல்லுநர், சோதிடர் |
வேலை வழங்குபவர் |
|
காவ்ரீல் அதிரியனோவிச் திக்கோவ் (Gavriil Adrianovich Tikhov, உருசியம்: Гаврии́л Адриа́нович Ти́хов, 1 மே [யூ.நா. 19 ஏப்ரல்] 1875 – 25 சனவரி 1960) ஒரு சோவியத் வானியலாளர் ஆவார்.
இவர் 1906 இல் இருந்து 1941 வரை புல்கோவோ வான்காணகத்தில் நோக்கீட்டாளராகப் பணிபுரிந்தார்.சூரிய ஒளிமறைப்பை நோக்கிட, அல்மாத்திக்குச் சென்ற பிறகு அவர் அங்கேயே தங்கி,கழ்சாக்தான் அறிவியல் கல்விக்கழகத்தை நிறுவியவர்களில் ஒருவராக மாறினார்.
இவர் இயல்பாக நிகழும் நிறப்பிறழ்வைப் பயன்படுத்தி இறகியல்பு கதிர்நிரல் கருவியைப் புதிதாக உருவாக்கினார். பொருள்வில்லைக்கு முன் வலய வடிவ பிரிபடலத்தை வைத்து ஒரு நோக்குபவர் எளிமையாக ஒரு விண்மீனின் கதிர்நிரல் வகையையும் நிறத்தையும் கொணரச் செய்தார். இவர்தான் முதன்முதலில் கோள்களின் மேற்பரப்பு விவரங்களின் நிற வேறுபாட்டை கூட்ட, நிர வடிப்பிகலைப் பயன்படுத்தினார். இவர் அல்மாத்தியில் வான் – தாவரவியல் துறையின் தலைவரானார். இவர் சூரியக் குடும்பத்தின் பிறகோள்களிலும் துணைக்கோள்களிலும் மாந்தர் வாழ்தகவை ஆய்வு செய்தார்.
இவரது நினைவாக, நிலாவின் திக்கோவ் குழிப்பள்ளமும் செவ்வாயின் திக்கோவ் குழிப்பள்ளமும் 2251 திக்கோவ் குறுங்கோளும் பெயர் இடப்பட்டுள்ளன.