காவேரி (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லட்சுமி கண்ணன்
பிறப்பு1947
மைசூர், கர்நாடகம், இந்தியா
இருப்பிடம்புதுதில்லி
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்காவேரி
அறியப்படுவதுஎழுத்தாளர்

தமிழில் காவேரி என்ற புனைபெயரில் எழுதி வரும் லட்சுமி கண்ணன்[1] தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுதி வரும் படைப்பாளி. சிறுகதை, குறுநாவல், கவிதை, விமரிசனம், மொழிபெயர்ப்பு எனப்பல தளங்களிலும் எழுதி வருகிறார். தற்போது இவர் புதுதில்லியில் வசித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1947ஆம் ஆண்டு மைசூரில் பிறந்த லட்சுமி கண்ணன், பள்ளிப்படிப்பு முடிந்ததும் இவரது குடும்பம் பெங்களூருக்கு இடம் பெயர்ந்தது. பள்ளிப்படிப்பை நிறைவு செய்தபின், தில்லி, கல்கத்தா (ஜாதவ்பூர்), கலிபோர்னியா பல்கலைக்கழகங்களில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, மற்றும் முதுகலைக்கல்வி பயின்று, நோபல்பரிசு பெற்ற சால்பெல்லோவின் படைப்புக்களை ஆய்வு செய்தமைக்காக ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆங்கிலப் பேராசிரியராகவும், சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸ் என்ற அமைப்பில் ஆய்வாளராகவும் (fellow) பணியாற்றியிருக்கிறார். ஜே.வால்டர் தாம்சன் கம்பெனியில் முதுநிலை எழுத்தராகவும், மொழி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.

இலக்கிய உலகில்..[தொகு]

தனது தமிழ் ஆக்கங்களைத் தானே ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு வருகிறார். இவரது படைப்புக்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், அரபு, இந்தி, மராத்தி போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலக்கவிதை நூல்கள், நாவல், குறுநாவல்கள், தமிழில் சிறுகதைத்தொகுப்புகள், புதினம் என இதுவரை இவரது 21 நூல்கள் வெளியாகியிருக்கின்றன.

இவரது ஆங்கிலக் கவிதைகளும், பாலின வேறுபாடு, பின் காலனீயம், மொழியாக்க நுட்பங்கள் ஆகிய உள்ளடக்கங்களைக் கொண்ட இவரது பல ஆய்வுக் கட்டுரைகளும் இந்தியாவிலிருந்து வெளிவரும் இதழ்களில் மட்டுமல்லாது மேலைநாடுகளிலிருந்து வெளிவரும் பல்வேறு இலக்கிய இதழ்களிலும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.காவேரியின் படைப்புக்கள் பலவும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டங்களில் இடம் பெற்றிருப்பதோடு எம்.ஃபில்., [இள முனைவர்] மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர்களின் கருத்தரங்குகளிலும், உலக இலக்கியம் தொடர்பான பல்வேறு ஆய்வரங்கங்களிலும் [கேம்ப்ரிட்ஜ், மாண்ட்ரியால், பிரித்தானிய கவுன்சில், கலிஃபோர்னியா], தேசிய, சர்வதேசிய இலக்கிய, பண்பாட்டு உறைவிடத் திட்டங்களிலும், பன்னாட்டுக் கருத்தரங்கங்களிலும், ஜெய்ப்பூர் [2013], [தொடர்பிழந்த இணைப்பு] ஹைதராபாத் [2013] இலக்கிய விழாக்களிலும், சண்டிகர் சாகித்திய அகாதமி நடத்திய இலக்கிய விழாவிலும் [2012] சிறப்பு அழைப்பின் பேரில் காவேரி பங்குபெற்றிருக்கிறார்.

வெளிவந்த நூல்கள்[தொகு]

சிறுகதைகள்[தொகு]

  • ஓசைகள் (1984)
  • வெண்மை போர்த்தியது (1991)
  • இன்று மாலை என்னுடன்(1993),சென்னை,நர்மதா வெளியீடு.
  • எங்கும் வானம் (2001)
  • காவேரி கதைகள் (இரண்டு பாகங்களில், சிறுகதைத் தொகுப்புகள், மித்ர பதிப்பகம், 2007[2]

‘முத்துக்கள் பத்து’-அமிர்தா பதிப்பகம்(2015)

நாவல்[தொகு]

ஆத்துக்குப் போகணும் என்னும் இவரது நாவல்,வீடு என்னும் பருப்பொருளைப் பல்வேறு குறீயீட்டுத் தளங்களுக்கு எடுத்துச் செல்லும் நுண்ணியல்பு வாய்ந்தது. இதன் மூன்றாம் பதிப்பு அண்மையில் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்திருக்கிறது[3]. தனது சிறுகதைகள் பலவற்றையும், ’ஆத்துக்குப் போகணும்’ என்னும் தனது புதினத்தையும் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்[4][5].

கவிதை நூல்கள்[தொகு]

  • Impessions (1974)
  • The Glow And The Grey (1976)
  • Exiled Gods (1985)
  • UNQUIET WATERS[2005]-New Delhi,Sahitya Akademi commemorating their Golden Jubilee celebrations,Ed.,By Keki N.Daruwala

மொழிபெயர்ப்பு[தொகு]

ஆங்கிலத்தில்[தொகு]

தி. ஜானகிராமனின் மரப்பசு நாவல்- Wooden Cow

இந்திரா பார்த்தசாரதியின் திரைக்கு அப்பால் நாவல் -Through The Veils

பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பெற்ற காவேரி படைப்புக்கள்[தொகு]

ஆங்கிலம்(தன் படைப்புக்களைத் தானே பெயர்த்தவை)[தொகு]
  • Going Home: Novel. ஆத்துக்குப் போகணும் நாவலின் ஆங்கிலப்பெயர்ப்பு, Translated from the original Tamil by the author, Orient BlackSwan, Delhi, 1998, 1999.
  • India Gate and Other Stories: காவேரி எழுதிய தமிழ்ச்சிறுகதைகளின் ஆங்கில வடிவம்,Translated from the original Tamil by the author, Delhi, Orient BlackSwan, 1993.
  • Parijata and Other Stories: காவேரி எழுதிய குறுநாவல், Translated from the original Tamil by the author. Delhi, National Publishing House, 1992.
  • Rhythms: காவேரியின்’ஓசைகள்’, Translated from the original Tamil by the author. Delhi, Vikas Publishing House, 1986.
  • Nandanvan & Other Stories, Translated from the original Tamil by the author. Delhi, Orient BlackSwan, 2011.
இந்தி[தொகு]
  • Aakash hi Aakash: Penguin (with Yatra), 2007.
  • Laya Baddh: Bharatiya Jnanpith, New Delhi, 1990, 2nd edition, 2007.
  • Partein: K.K.Birla Foundation with Vaani Prakashan, New Delhi, 1996.

விருதுகள்[தொகு]

1.இவரது புனைகதைகளில் இடம்பெறும் விளிம்புநிலைப் பெண்கள் பற்றிய சித்தரிப்புக்காக ‘மஞ்சுளா ஸ்ரீனிவாஸ்’அறக்கட்டளையின் சிறந்த பெண்மணி விருது-2012

2.‘சவ்யாயாசி சதுக்கம்’சிறுகதைக்கு இலக்கிய சிந்தனை பரிசு-1995

இணைப்புகள்[தொகு]

“Chitti” P.G.Sunderarajan on 'Engum Vaanam' in The Hindu Literary Review. http://www.hindu.com/lr/2003/12/07/stories/2003120700270400.htm பரணிடப்பட்டது 2005-02-04 at the வந்தவழி இயந்திரம்

Malati Mathur’s review of 'Nandanvan' in The Book Review, Translation of the Tamil collection by the author. http://www.thebookreviewindia.org/articles/archives-854/2012/April/4/bouquet-of-feeling.html பரணிடப்பட்டது 2012-09-03 at the வந்தவழி இயந்திரம்

Tulsi Badrinath’s review in Deccan Herald http://www.deccanherald.com/content/217447/soulful-delights.html

Hindu review of Nandanva by Seline Augustine

இலக்கியப்பங்கேற்புகள்[தொகு]

British Council Visitor to the University of Cambridge, U.K.;

Writer-in-Residence on a Charles Wallace Trust Fellowship with the University of Kent at Canterbury, U.K.;

Indian Participant at the International Writing Program at Iowa, USA;

Writer-in-Residence, Sahitya Akademi, Delhi;

Fellow, The Indian Institute of Advanced Study, Shimla,

Indian Participant at the seminars organized by the International Feminist Book Fairs at Montreal, Toronto (Canada) and at Amsterdam (The Netherlands).

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரி_(எழுத்தாளர்)&oldid=3924828" இலிருந்து மீள்விக்கப்பட்டது