காவேரி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காவேரி (இதழ்) என்பது 1940- 1950 ஆம் ஆண்டுகளில் கும்பகோணத்திலிருந்து மாதம் தோறும் வெளிவந்த ஓர் இலக்கிய இதழ் ஆகும். கே. எஸ். இராமானுசம் என்பவர் இந்த காவேரி இதழின் வெளியீட்டாளரும் ஆசிரியரும் ஆவார்.

கதை, கவிதை, கட்டுரை, தொடர்கதை போன்ற இலக்கியப் படைப்புகள் காவேரி இதழில் இடம்பெற்றன. ஓரங்க நாடகங்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், ஆசிரிய உரைகள் ஆகியனவும் இந்த இதழில் அச்சேறி வெளிவந்தன. அந்தக் காலத்தில் அறியப்பட்ட சுத்தானந்த பாரதியார், தமிழழகன், நா.சீ வரதராசன், இளம்பாரதி, தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் போன்ற இலக்கிய எழுத்தாளர்கள் இந்த காவேரி இதழில் எழுதி வந்தார்கள்.

சான்றாவணம்[தொகு]

காவேரி இதழ் தொகுப்பு, பாகம்:ஒன்று வெளியீடு:கலைஞன் பதிப்பகம், தியாகராய நகர், சென்னை-17

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரி_(இதழ்)&oldid=2120630" இருந்து மீள்விக்கப்பட்டது