உள்ளடக்கத்துக்குச் செல்

காவேரி கோபாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவேரி கோபாலகிருஷ்ணன்
Nationalityஇந்தியன்
Area(s)ஓவியர், வரைகதை உருவாக்குநர், கலை இயக்குநர்
Official website

{{#if:||

காவேரி கோபாலகிருஷ்ணன் (ஆங்கில மொழி: Kaveri Gopalakrishnan) என்பவர் சிட்னியில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சுயாதீன வரைகதைக் கலைஞர், வரைகலை ஓவியர், கலை இயக்குநர் ஆவார். 2018 மகளிர் தின கூகிள் டூடிலில் காட்சிப்படுத்தப்பட்ட ஆன் தி ரூப் என்ற ஊடாடகக்கூடிய ஓவியத்தின் மூலம் கவனம் பெற்றவர்.[1] குறிப்பாக இந்த ஓவியம் வாசிப்பை நேசிக்கும் வகையில் அமைந்திருந்தது.[2] 2018 ஆம் ஆண்டு கூகிள் சிறப்பு செய்த 12 பெண் கலைஞர்களில் இவரும் ஒருவராவார்.[3]

இளமைக் காலம்[தொகு]

1988 டிசம்பர் மாதம் யமுனா ஆச்சையா மற்றும் பரூக் அங்கிலேசரியா தம்பதியினர்க்கு மகளாக சென்னையில் பிறந்தார்.[4] இவர் இளம் வயதிலிருந்து எழுத்திலும் கதை ஓவியத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். எட்டு வயது வரை சென்னையிலும், அடுத்த எட்டாண்டுகள் மைசூருவிலும் பின்னர் பெங்களூரிலும் பள்ளிப்படிப்பை முடித்தார்.[5] அலகாபாத் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் 2012 ஆம் ஆண்டு அசைவுரு திரைப்பட வடிவமைப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2020 இல் ஆஸ்திரேலிய சிட்னியிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வடிவமைப்பில் ஆய்வுநோக்கில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[சான்று தேவை]

தொழில் வாழ்க்கை[தொகு]

இவர் 2013 இல் சம்பக் என்ற பதிப்பகத்தில் ஓவியராகப் பணியைத் தொடங்கினார்.[6] 2014 இல் அப்பணியிலிருந்து வெளியே வந்து தனியாக வரைகதைகளை வரையத் தொடங்கினார். எலிபண்ட் இன் தி ரூம் (2013), டிராயிங் தி லைன் (சூபன் புக்ஸ் 2015), ஸ்பிரிங் மெகசின், யூரோப்பியன் காமிக் ஆர்ட் (பெர்ஹன் புக்ஸ்) மற்றும் பஸ்ட் ஹன்ட்(யோடாபிரஸ் 2016) என்ற இந்தியாவின் முதல் வரைகலைப் புனைவிலி போன்ற கவனிக்கத்தக்க புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[7] 2014 இல் இரு வரைகலைப் புதினங்களையும் வெளியிட்டார். மேலும் பிராதம் புக்ஸ், ஜீஈ சுகாதாரம் பரணிடப்பட்டது 2014-07-09 at the வந்தவழி இயந்திரம், ஸ்காலஸ்டிக், டெட்டெக்ஸ் உட்படப் பல்வேறு அமைப்புகளுக்குப் பட ஓவியங்களை வழங்கியுள்ளார். மேலும் தங்கல் என்ற திரைப்படத்திற்கும் கைப்பேசி வரைகதைகளை உருவாக்கியுள்ளார்.[சான்று தேவை] சமூக பயனர்களை ஊக்குவிக்கும் இன்ஸ்டா கியான் என்ற இன்ஸ்டாகிராம் (முகநூல்) நிறுவனத்தின் திட்டத்தினை முன்னெடுத்தவர்.[8] 2016 இல் லண்டனில் சர்வதேச அளவில் நடைபெற்ற காமிக் கிரேடக்ஸ் கண்காட்சியில் இந்தியாவிலிருந்து இடம் பெற்ற மூவரில் இவரொருவராவார்.[9]

2018 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கூகிள் தனது சிறப்பு டூடிலை வெளியிட்டது. அதில் உலகம் முழுக்க பன்னிரண்டு நாடுகளைச் சேர்ந்த பன்னிரண்டு பெண் கலைஞர்களைச் சிறப்பு செய்தது அதில் ஒருவராக காவேரி கிருஷ்ணன் இடம் பிடித்தார்.[10] காட்சிப்படுத்தப்பட்ட இவரின் அசைவுரு ஓவியத்தில் ஒரு சிறுமி கூரையின் கீழே படிக்கிறாள், பக்கங்களைத் திருப்பத் திருப்ப அச்சிறுமிக்குச் சிறகு முளைத்துப் பறப்பதாக அமைகிறது. இது வாசிப்பை நேசிக்கும் கருத்தை வெளிப்படுத்தியது.[11]

இவர் ஆர்த்தி பார்த்தசாரதியுடன் இணைந்து அர்பன்லோரி என்ற இணைய வரைகதைத் தொடரைத் தொடங்கினார்.[12] ஆர்த்தி கதை எழுதவும் காவேரி ஓவியம் வரையமும் என்று சமத்துவமின்மை, ஆண்வழி மரபு போன்ற சமூகச் சிக்கல் தொடர்பான பல ஓவியங்களை இதில் தொடராக வெளியிட்டானர். மேலும் இவர் சர்வதேச தொகுப்பாக கதக் கலக்டிவ்ஸ் அமைப்பின் நிறுவன உறுப்பினராகவும், ஸ்டோரிவீவர் தளத்தில் கல்வித் தொடர் ஒன்றின் கலை இயக்குநராகவும், சமூக-அரசியல், கல்வி மற்றும் மனநலம் உட்பட பல்வேறு கருவில் வரையும் சுயாதீன ஓவியராகவும் உள்ளார்.[13][6]

கண்காட்சிகள்[தொகு]

 • 2019 எம்சிஏ ஜின் பெஸ்டிவல், சிட்னி
 • 2019 அதர் வேர்ல்ட்ஸ் ஜின் பெஸ்டிவல், சிட்னி
 • 2018 மங்காசியா: ஒண்டர்லாண்ட் ஆப் ஆசியன் காமிக்ஸ், பார்பிகன் லண்டன்
 • 2017 இண்டர்நேசனலர் காமிக்-சலூன் எர்லங்கன், ஜெர்மனி
 • 2017 டெல்லி காமிக் ஆர்ட்ஸ் பெஸ்டிவல், புது தில்லி
 • 2016 காமிக் கிரேடக்ஸ்: 100 விமன் மேக்கிங் காமிக்ஸ் அட் ஹவூஸ் ஆப் இலுஸ்ட்ரேசன், லடண்டன்
 • 2016 ஈஸ்ட் லண்டன் காமிக் அண்ட் ஆர்ட்ஸ் பெஸ்டிவல், லண்டன்
 • 2015 லெஜண்ட் ஆப் தி டிராயிங் போர்ட், பூமா சமூக மன்றம்
 • 2014 எஸ்விஏ கேளரீஸ், நியூ யார்க் நகரம்


மேற்கோள்கள்[தொகு]

 1. "International Women's Day 2018". கூகிள். பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
 2. "12 Women Share Empowering Stories for International Women's Day on Google Doodle". Billboard. https://www.billboard.com/articles/news/8235938/international-womens-day-on-google-doodle. 
 3. "Did You Know There Are A Young Indian Artist's Sketches In Today's Women's Day Google Doodle?" (in en). indiatimes.com. https://www.indiatimes.com/technology/news/google-s-women-s-day-doodle-celebrates-the-work-of-bangalore-based-artist-kaveri-gopalakrishnan-341039.html. 
 4. "Sketchup Session With City Artist Tomorrow". starofmysore.com. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
 5. "Kaveri Gopalakrishnan". astray. https://astray.in/interviews/kaveri-gopalakrishnan. பார்த்த நாள்: 4 September 2021. 
 6. 6.0 6.1 "Kaveri Gopalakrishnan on the joys of illustration" (in en). femina.in. https://www.femina.in/achievers/illustrator-kaveri-gopalakrishnan-41138.html. 
 7. "About the Event". insider.in. https://insider.in/sketchup-2-8-with-kaveri-gopalakrishnan-mar24-2018/event. பார்த்த நாள்: 4 September 2021. 
 8. "Project: Insta Gyaan by Kaveri Gopalakrishnan for Instagram". thefloatingmagazine.com. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
 9. "Women cartoonists dominate bestseller lists". டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/life-style/books/features/female-comic-creators-draw-a-new-future/articleshow/58559861.cms. பார்த்த நாள்: 4 September 2021. 
 10. "மகளிர் தினத்தன்று கூகுல் டூடிலில் இடம்பெற்றுள்ள இந்திய பெண்ணின் கைவண்ணம்!". யுவர் ஸ்டோரி. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
 11. "International Women's Day 2018: Artist Kaveri Gopalakrishnan on creating her Google Doodle". பஸ்ட் போஸ்ட். https://www.firstpost.com/living/international-womens-day-2018-artist-kaveri-gopalakrishnan-on-creating-her-google-doodle-4380163.html. பார்த்த நாள்: 4 September 2021. 
 12. "Urbanlore, a new webcomic series traces a changing urban India". இந்தியன் எக்ஸ்பிரஸ். https://indianexpress.com/article/lifestyle/faces-of-the-city/. பார்த்த நாள்: 4 September 2021. 
 13. "Urbanlore, a new webcomic series traces a changing urban India". The Indian Express (in ஆங்கிலம்). 2015-10-19. பார்க்கப்பட்ட நாள் 2021-03-10.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரி_கோபாலகிருஷ்ணன்&oldid=3366050" இலிருந்து மீள்விக்கப்பட்டது