காவேரியின் கணவன்
| காவேரியின் கணவன் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஏ. கே. வேலன் |
| தயாரிப்பு | ஏ. கே. வேலன் அருணாச்சலம் ஸ்டூடியோஸ் |
| கதை | ஏ. கே. வேலன் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | முத்துகிருஷ்ணன் பக்கிரிசாமி மாஸ்டர் ஸ்ரீதரன் தட்சிணாமூர்த்தி சௌகார் ஜானகி சூரியகலா சி. கே. சரஸ்வதி குசலகுமாரி |
| விநியோகம் | அருணாச்சலம் பிக்சர்ஸ் சர்கியூட்[1] |
| வெளியீடு | செப்டம்பர் 27, 1959 |
| நீளம் | 13956 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காவேரியின் கணவன் 1959 என்பது ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், சௌகார் ஜானகி, பக்கிரிசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1959 செப்டம்பர் 27 அன்று வெளியானது.[2]
கதைக்களம்
[தொகு]இதில் இரண்டு காதல் கதைகள் உள்ளன. காவேரி சிறுமியாக இருந்தபோது அவள் தந்தை அவளை அழைத்துக் கொண்டு திருச்சியில் உள்ள தன் நண்பரைப் பார்க்கச் சென்றார். அந்த நண்பருக்கு ஏகாம்பரம் என்ற ஒரு மகன் இருந்தான். காவேரியும் ஏகாம்பரமும் ஒன்றாக விளையாடுகின்றனர், ஆனால் ஏகாம்பரத்தின் தாய்க்கு காவேரியைப் பிடிக்கவில்லை. இருப்பினும், அந்தக் கால வழக்கப்படி ஏகாம்பரத்துக்கும், காவேரிக்கும் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோதே திருமணம் முடித்துவிடுகின்றனர். விரைவில், ஏகாம்பரம் வளர்ந்து வெளிநாட்டில் படித்துவிட்டு நாடு திரும்புகிறான். ஏகாம்பரத்திடம் அவனது தாயார் காவேரி ஆற்றில் விழுந்து இறந்துவிட்டதாகக் கூறிகிறார். இதனால் ஏகாம்பரம் வேறொரு பெண்ணை மணக்கிறான். அந்த பெண்ணும் இறந்துவிடுகிறாள். பின்னர் காவேரி உண்மையில் இறக்கவில்லை என்பதை ஏகாம்பரம் கண்டுபிடிக்கிறான்.
காவேரியின் சகோதரன் ஆனந்தன் வேறொரு ஊரில் வசிக்கிறான். தன் சகோதரி ஆற்றில் விழுந்து இறந்ததைக் கேள்விப்படும் அவன் துக்கமடைந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். அவன் ஒரு நாடகக் குழுவில் இணைகிறான். அக்குழுவில் வசந்தா என்ற பெண்ணைச் சந்திக்கிறான். இருவரும் காதலிக்கின்றனர். வசந்தாவின் தாய் ஒழுக்கமற்றவர் என்பதை ஆனந்தன் அறிகிறான். எனவே அவன் வசந்தாவை மோசமாக நடத்துகிறான். ஆனால் வசந்தா தான் குற்றமற்றவள் என்றும், தன் தாயின் தவறுகளுக்காக தன்னை தண்டிக்கக்கூடாது என்று கூறுகிறாள். இந்த இரண்டு இணையரின் பிரச்சினைகள் தீர்கின்றனவா, அவர்கள் வாழ்வில் மீண்டும் இணைந்தனரா என்பதே மீதிக் கதையாகும். [3]
நடிப்பு
[தொகு]படத்தின் பாட்டடுப் புத்தகத்திலுள்ள தகவல்களைக் கொண்டு இப்பட்டியல் உருவாக்கபட்டது[3]
|
|
தயாரிப்பு
[தொகு]இந்தப் படத்தை ஏ. கே. வேலன் அருணாச்சலம் ஸ்டுடியோஸ் என்ற பதாகையின் மூலம் தயாரித்து இயக்கினார். படத்திற்கான கதை, உரையாடலை அவரே எழுதினார். வி. ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்தார். வி. பி. நடராஜன் படத்தொகுப்பை மேற்கொண்டார். கலை இயக்கத்தை ஏ. பி. முத்து. மேற்கொள்ள, பி. எஸ். கோபாலகிருஷ்ணன் நடன இயக்குநராக இருந்தார். ஒளிப்படங்களை திருச்சி அருணாச்சலம் எடுத்தார்.[2]
இசை
[தொகு]உடுமலை நாராயண கவி, தஞ்சை என். ராமையா தாசு மற்றும் பி. கே. முத்துசுவாமி ஆகியோர் பாடல் வரிகளை எழுத, கே. வி. மகாதேவன் இசையமைத்துள்ளார்.[4] இப்படத்தில் இடம்பெற்ற "மாப்பிளை வந்தான் மாப்பிளை வந்தான் மாட்டு வண்டியிலே" புகழ்பெற்றது.[5]
| பாடல் | பாடகர்/கள் | வரிகள் |
|---|---|---|
| "வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி" | எம். எல். வசந்தகுமாரி | உடுமலை நாராயணகவி |
| "சின்ன சின்ன நடை நடந்து" | பி. சுசீலா | பி. கே. முத்துசாமி |
| "சின்ன சின்ன நடை நடந்து" (சோகம்) | ||
| "கன்னி வயது இளம் பருவத்திலே" | ||
| "தஞ்சாவூர் பொம்மை போலே" | திருச்சி லோகநாதன் | தஞ்சை இராமையாதாஸ் |
| "கன்னத்திலே விழும் பள்ளத்திலே...வெள்ளி அன்னமே வாராயோ" | ||
| "பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா" | ||
| "அலைமோதுதே நெஞ்சம் அலைமோதுதே" | திருச்சி லோகநாதன், கே. ஜமுனாராணி | |
| "மாப்பிளை வந்தான் மாப்பிளை வந்தான் மாட்டு வண்டியிலே" | எம். எஸ். இராஜேஸ்வரி, எல். ஆர். ஈசுவரி | |
| "மாப்பிளை வந்தான்" (சோகம்) | எம். எஸ். இராஜேஸ்வரி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காவேரியின் கணவன்" (in ta). Janasakthi: pp. 1. 11 September 1959 இம் மூலத்தில் இருந்து 8 March 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20250308160334/https://images.eap.bl.uk/EAP372/EAP372_9_15_74/1.jp2/full/1000,1350/0/default.jpg.
- ↑ 2.0 2.1 "1959 – காவேரியின் கணவன் – அருணாச்சலம் ஸ்டுடியோ" [1959 – Kaveriyin Kanavan – Arunachalam Studio]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 14 June 2017. Retrieved 14 June 2017.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ 3.0 3.1 காவேரியின் கணவன் (PDF) (பாட்டுப் புத்தகம்). Arunachalam Studios. 1959. Retrieved 20 July 2022 – via இணைய ஆவணகம்.
- ↑ Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 167.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ கவிராயர், தஞ்சாவூர் (19 November 2017). "காலத்தின் வாசனை: மாட்டுவண்டிப் பாதையிலே…". இந்து தமிழ் திசை. Archived from the original on 20 July 2022. Retrieved 20 July 2022.
