காவேரிப்பட்டிணம் அங்காளம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு அங்காளம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:பன்னீர் செல்வம் தெரு, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பாலக்கோடு
மக்களவைத் தொகுதி:தர்மபுரி
கோயில் தகவல்
மூலவர்:அங்காளம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி 5ம் நாள்
வரலாறு
கட்டிய நாள்:1910 முதல் 1913
அமைத்தவர்:வைத்திய முத்துச்செட்டி

காவேரிப்பட்டிணம் அங்காளம்மன் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இத்தலத்தின் அம்மன் சிலையானது மண்மேட்டில் அகழ்ந்து எடுக்கப்பட்ட திருவுருவம் எனப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் குறிசொல்லும் ஒருவர் குறி சொல்லியபடி மண்மேடாக இருந்த இந்த இடத்தில் அகழ்ந்து பார்த்தபோது அங்கு உடுக்கையும், அம்மன் சிலையும் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதை எடுத்து அதே இடத்தில் வைத்து வழிபடத்துவங்கினர்.[2] பின்னர் இங்கு 1910 முதல் 1913 வரை மூன்று ஆண்டுகளில் கோயில் கட்டப்பட்டது. கோயிலை வைத்திய முத்துச்செட்டி என்பவர் கட்டினார்.[3]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலானது மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகிய கட்டட அமைப்பைக்கொண்டதாக உள்ளது. கருவறையில் உடுக்கை, சூலம், கபாலம் ஆகியவற்றை கையில் ஏந்தியவாறு அமர்ந்த கோலத்தில் அங்காலம்மன் உள்ளார். இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[4]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகா சிவராத்திரி மற்றும் மயானக்கொள்ளை திருவிழா 9 நாட்கள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. திருவிழாவின் மூன்றாம் நாள் அம்மன் திருத்தேரில் புறப்பட்டு மயானத்துக்குச் சென்று தனது ஆவேசத்தைப் போக்கும் விதத்தில் மயானத்தில் உள்ள எலும்புத் துண்டுகளை உண்டு ஆவேசத்தைத் தணித்துக் கொள்ளும் நிகழ்வு சிறப்பாக நடைபெறுகிறது.

அன்னதானம்[தொகு]

இக்கோயிலில் தமிழக முதல்வரின் அன்னதான திட்டத்தின்படி நாள்தோறும் 25 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 94-96. 
  3. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 47. 
  4. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)