காவிரி மைந்தன் (புதினம்)
Appearance
![]() நூல் அட்டை | |
நூலாசிரியர் | அனுஷா வெங்கடேஷ் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
தொடர் | மூன்று பாகங்கள் |
வகை | வரலாற்றுப் புதினம் |
வெளியீட்டாளர் | வானதி பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2006 (முதல் பதிப்பு) |
காவிரி மைந்தன், எழுத்தாளர் அனுஷா வெங்கடேஷ் எழுதிய, சோழர் கால வரலாற்றுப் புதினமாகும். வானதி பதிப்பகத்தால் இப்புதினம் வெளியிடப்பட்டது. இதன் கதைக்களம், கல்கியின் 'பொன்னியின் செல்வனுக்கு' தொடர்ச்சியாக, அதன் கதை முடிவிற்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் நிகழ்வுகளாக புனையப்பட்டிருகிறது. இந்நூல் மூன்று பாகங்களுடையது.
பொன்னியின் செல்வனில் வந்த பெரும்பாலான கதாபாத்திரங்கள், காவிரி மைந்தனிலும் இடம்பெறுகின்றன. சம்புரவராயரின் மகனும், மணிமேகலையின் அண்ணனுமாகிய இளவரசர் கந்தமாறன் இக்கதையின் நாயகனாகவும் மற்றும் பழுவூர் இளவரசி லோகமாதேவி (நந்தினி அல்ல) முக்கிய கதாபாத்திரமாகவும் காவிரி மைந்தனில் வலம் வருகின்றனர்.