காவிரி தெற்கு காட்டுயிர் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காவிரி தெற்கு காட்டுயிர் காப்பகம் (Cauvery south Wildlife Sanctuary) என்பதுஇந்தியாவின் தமிழ்நாட்டின் தருமபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும். இந்த சரணாலயம் தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் வடக்கே அமைந்திருக்கும் காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம் மற்றும், கர்நாடக மாநிலத்தின் காவிரி காட்டுயிர் புகலிடம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு பெரியதொரு பகுதியல் அமைந்துள்ளது. இச்சரணாலயம் 2022 ஆம் ஆண்டில் நவம்பர் 8 அன்று, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் பிரிவு 26-ஏ இன் உட்பிரிவு (1)இன் உட்பிரிவு (1)இன் உட்பிரிவு (பி)-ன் கீழ் தமிழ்நாடு அரசு, காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தது.[1] இது 686,406 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.[2]

இது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இணைவிடத்தில் குறிப்பிடத்தக்க கானுயிரின வளாகங்கள். இது மாதேசுவரன் மலை, பிஆர் மலைகள், சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் ஆகியவற்றுடன் முக்கிய இணைப்பை உருவாக்குவதாக உள்ளது. இச்சரணாலயம் தென்னிந்தியாவில் யானைகள் வாழ்விடத்தின் ஒரு முக்கியப் பகுதியாகவும் காவிரி ஆற்றுப் படுக்கையில் உள்ள கானுயுர்களுக்கு முக்கியமான ஒரு பகுதியாகவும் உள்ளது. இந்த உய்விடத்தில் இரு முக்கிய யானைகளான வழித்தடமான நந்திமங்கலம், உழிபண்டா மற்றும் கோவைபள்ளம் - ஆனபெத்தள்ளா ஆகிய இடங்களை உள்ளடக்கியதாக உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஒசூர் அருகே 'காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம்'- தமிழக அரசு அறிவிப்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2023-02-09.
  2. காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தால் இவ்வளவு நன்மைகளா? பட்டியல் தந்த முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்இந்தியா 17, நவம்பர் 2022
  3. "35 வகை பாலூட்டிகள், 238 வகை பறவைகள்... - காவேரி தெற்கு வன உயிரின சரணாலய முக்கியத்துவம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-09.