காவிரிப்பூம்பட்டினம் தமிழ்வளர் மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் மாங்குடி மருதன் தலைமையில் புலவர்கள் கூடித் தமிழ் பாடியது போலவே காவிரிப்பூம்பட்டினத்திலும், வஞ்சிமாநகரிலும் தமிழ் வளர்க்கும் மன்றங்கள் இருந்தன.

பட்டினப்பாலை குறிப்பு[தொகு]

"புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய பெருங்கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி" (அடி 42-45)

இந்தப் பாடலடிகளில் மொழி வளர்ச்சிக்காக உணவு படைத்த அட்டில்சாலை (மடம், மடப்பள்ளி) காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.