உள்ளடக்கத்துக்குச் செல்

காவல் அதிகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவல் அதிகாரி
தொழில்
செயற்பாட்டுத் துறை சட்ட அமலாக்கம்,
பொதுப் பாதுகாப்பு,
அரசுப் பணி,
பொதுச் சேவை,
மீட்புப் பணி,
தனியார் சொத்துப் பாதுகாப்பு
விவரம்
தேவையான கல்வித்தகைமை இடைநிலை அல்லது உயர்கல்வி
தொழிற்புலம் பொது இடங்கள்
தொடர்புடைய தொழில்கள் இராணுவக் காவல்துறை
பாதுகாப்புக் காவலர்
மெய்க்காப்பாளர்
துப்பறிவாளர்
இந்தோனேசியா மேற்கு சுமத்ரா தெருக்களில் சோதனைக்குச் செல்லும் காவலர்கள்

காவல் அதிகாரி (police officer) அல்லது காவலர், காவல் பெண் அதிகாரி என்பவர் காவல் துறையில் சட்ட அமலாக்கப் பணிகளை மேற்கொள்ள அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட அரசுப் பணியாளர் ஆவார். பெரும்பாலான நாடுகளில்காவல் அதிகாரி'' என்பது குறிப்பிட்ட பதவித் தரத்தைக் குறிக்காமல், காவல் துறையில் பணிபுரியும் நபர்களைக் குறிக்கும் பொதுப்பெயராகப் பயன்படுத்தப்படுகிறது. இவர்களின் முக்கியப் பொறுப்புகளில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுதல், குற்றங்களைத் தடுத்தல், பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்தல், அவசரநிலைகளில் உதவுதல் மற்றும் குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை அடங்கும்.[1]

காவல் அதிகாரிகள் பொதுவாக குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்தல், குற்றங்களைத் தடுத்தல், கண்டறிதல், புகாரளித்தல், பொதுமக்களைப் பாதுகாத்து உதவுதல், பொது ஒழுங்கைப் பேணுதல் ஆகிய பொறுப்புகளை வகிக்கின்றனர். காவல் அதிகாரிகள் பதவிப் பிரமாணம் மேற்கொள்வதுடன், சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் நபர்களைக் கைது செய்து குறிப்பிட்ட காலத்திற்கு காவலில் வைக்கவும் முடியும். மேலும், சில காவல் அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கண்காணிப்புப் பணிகள், குழந்தைகள் பாதுகாப்பு, முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு, குடிமையியல் உரிமையியல் சட்டம் , மோசடி, வன்கலவி, வன்முறை, கொலை, போதைப்பொருள் கடத்தல் போன்ற முக்கிய குற்றங்களுக்கான விசாரணை நுட்பங்கள் உள்ளிட்ட சிறப்புப் பணிகளில் பயிற்சி பெறுகின்றனர்.

பல காவல் அதிகாரிகள் சீருடை அணிந்து பணியாற்றினாலும், சிலர் பொதுமக்களைப் போல் தோற்றமளிக்கும் வகையில் சாதாரண உடையில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான நாடுகளில், காவல் அதிகாரிகள் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்காக சில சட்டங்களிலிருந்து விலக்கு பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஒருவரைக் கைது செய்யவோ காவலில் வைக்கவோ தேவையான சூழலில், சாதாரணமாக தாக்குதலாகக் கருதப்படும் அளவிற்கு வலிமையைப் பயன்படுத்த அவர்களுக்கு சட்டம் அனுமதி அளிக்கலாம். சில நாடுகளில், அதிகாரிகள் தங்களது பணிகளைச் செய்யும் நோக்கில் போக்குவரத்துச் சட்டங்களிலிருந்தும் குறிப்பிட்ட விலக்குகளைப் பெறுகின்றனர்.[2]

சொற்பிறப்பியல்

[தொகு]

காவல்துறை என்ற சொல் கிரேக்க மொழியின் பொலிட்டெயா என்ற சொல்லிலிருந்து தோன்றியது. இதன் பொருள் அரசாங்கம்- என்பதாகும். பின்னர் இது அரசின் குடிமை நிர்வாகத்தைக் குறிக்கும் பொருளிலும் பயன்படுத்தப்பட்டது. காவல்துறைப் பணியை மேற்கொள்ளும் நபரைக் குறிக்கும் பொதுவான சொற்களாக சட்ட அமலாக்க அதிகாரி அல்லதுஅமைதிக் காப்பு அதிகாரி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. மாவட்ட அலுவலர் (ஷெரிப்) என்பவர் பொதுவாக ஒரு மாவட்டத்தின் அல்லது மாகாணத்தின் உயர்நிலை காவல் அதிகாரியாகக் கருதப்படுகிறார். இந்தச் சொல், ஒரு நிர்வாகப் பகுதியின் மீது சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரியைக் குறிக்கும் பழைய ஆங்கிலச் சொல்லிலிருந்து உருவானது. இவருக்குக் கீழ் பணியாற்றுவதற்காக நியமிக்கப்படும் நபர் துணை ஷெரிப் (Deputy Sheriff) என அழைக்கப்படுகிறார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rfletcher. "Understanding the Roles of Military Officers and Enlisted Service Members". Military OneSource. Retrieved 6 April 2024.
  2. Dulaney, W. Marvin (1996). Black Police in America. Indiana University Press. p. 21. ISBN 0-253-21040-2.
  3. "Sheriff and Deputy Sheriff: LE & Police Careers | B&SC". www.bryantstratton.edu (in அமெரிக்க ஆங்கிலம்). 2025-05-23. Retrieved 2026-02-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவல்_அதிகாரி&oldid=4555246" இலிருந்து மீள்விக்கப்பட்டது