காவல்துறை மோதல் கொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காவல்துறை மோதல் (ஆங்கிலம்:Police encounter) என்பது தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பான கொலைகளுக்கு ஒரு தகுதிச் சொல்வழக்காக பயன்பாட்டில் உள்ளது.

போலி மோதல் (Fake Encounter) என்பது காவல்துறை அல்லது ஆயுதம் தாங்கிய படைகளால் ஒரு வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர்கள் காவல்துறை காவலில் இருக்கும்போது அல்லது அவர்கள் ஆயுதமற்ற நிலையில் இருக்கும்போது அல்லது அதிகாரிகளிடம் சரணடைந்த நிலையில் கொல்லப்படுகின்றனர். கொல்லப்பட்டதற்கான காரணமாக கொல்லப்பட்டவர்கள் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு அதிகாரிகளை தாக்க முனைந்ததாகவோ, தாக்கியதாகவோ, அதனால் தற்காப்புக்காக சுட்டுக்கொன்றாக கூறுகின்றனர். படுகொலை செய்யப்பட்ட நபரின் அருகில் ஆயுதங்களை கிடத்தி அல்லது சடலத்தின் அருகில் துப்பாக்கி போன்றவற்றை வைத்து தங்களது தரப்பு வாதத்தை முன்வைக்கின்றனர். சில நேரங்களில் காவல்துறை கைதுசெய்த நபர் தப்பிக்க முயற்சித்ததாகவும் அதனால் சுட நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற கொலைகளை சட்டமும் நீதிமன்றங்களும் ஏற்றுக்கொள்வதில்லை.

1990ம் 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் மும்பை காவல்துறை நிழல்உலக தாதாக்களை ஒழிப்பதற்காக மோதல்படுகொலைகளை நிகழ்த்தியது. இப்படுகொலைகளை நடத்தும் காவல்துறை அதிகாரிகள் 'மோதல் சிறப்பதிகாரிகள்' என்று அழைக்கப்படுவதுண்டு. இப்படுகொலைகள் வேகமான நீதியை பெற்றுத்தருவதாக ஒரு சிலர் ஆதரித்தாலும், மனித உரிமைகள் மீறப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன.[1]

தமிழகம்[தொகு]

தமிழகத்தில் காவல்துறை மோதல்கள் நிகழ்ந்துள்ளன. வங்கிக்கொள்ளையர்களாக சந்தேகிக்கப்பட்டு பீகார், மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் காவல்துறை மோதலில் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி என்பவர் மனு செய்தார். [2] இது தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி, சென்னை மாவட்ட ஆட்சியர், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆகியோர் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாக்கீது அனுப்பியது. [3]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]