காவல்துறை தலைமை இயக்குநர்

இந்தியாவில் காவல்துறையின் தலைமை இயக்குநர் (ஆங்கிலம்: Director General of Police) என்பது இந்தியக் காவல்துறையின் மிக உயரிய பதவியாகும். இப்பதவியில் உள்ளவர்கள் அனைவரும் இந்தியக் காவல் பணி அதிகாரிகள் ஆவர். இவர்கள் பொதுவாக ஒரு மாநிலத்தில் காவல்துறைக்கு தலைமை வகிப்பர். ஆயினும் இவர்கள் சிறைத்துறை, குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை முதலிய மாநில அரசின் துறைகளின் தலைவர்களாகவோ அல்லது நடுவண் புலனாய்வுச் செயலகம், மத்திய சேமக் காவல் படை போன்ற நடுவண் அரசின் துறைகளிளோ பணியமர்த்தப்படலாம். அசோகச் சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து இப்பதவியின் சின்னமாகும்.[1][2] கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ADGP) இந்திய காவல்துறை சேவையில் (IPS) ஒரு தலைமை இயக்குநர் (DGP) க்கு இளையவராக கருதப்படுகிறார். ஏடிஜிபி மற்றும் டிஜிபி இருவரும் 3-ஸ்டார் போலீஸ் தரவரிசையில் இருந்தாலும், டிஜிபி ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் போலீஸ் படையின் தலைவராகவும், ஏடிஜிபி ஒரு துணை அதிகாரியாகவும் இருக்கிறார்.
பதவி நியமனம்
[தொகு]மாநில அரசுகள் மத்திய அரசுப் பணியாளா் தோ்வு ஆணையத்துக்கு (யுபிஎஸ்சி) டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பெயா்களை அனுப்பும், அதிலிருந்து மூவரை யுபிஎஸ்சித் தேர்வுக்குழு பரிந்துரைக்கும் அதிலொருவரைத் தலைமை இயக்குநராக மாநில அரசுகள் நியமிக்கும். இப்பதவி நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படியும், யுபிஎஸ்சி விதிமுறைகளின்படியும், குறைந்தது 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருக்கக்கூடிய அதிகாரியே நியமிக்கப்பட வேண்டும்.[3] பதவியேற்பவர் குறைந்தது ஆறு மாதப் பதவிக்காலமாவது இருக்கவேண்டும்.
தமிழ்நாடு
[தொகு]தமிழ்நாட்டில் 2025 ஆகஸ்ட் வரை 31 இயக்குநர்கள் பதவி வகித்துள்ளனர்.
- அசோக் குமார்[4]
- டி.கே. இராஜேந்திரன்
- ஜெ.கே. திருப்பாதி (2019 ஜூலை 01 - 2021 ஜூன் 30
- சைலேந்திர பாபு (2021 ஜூலை 01 - 2023 ஜூன் 30)
- சங்கர் ஜிவால் (2023 ஜூலை 01 - 2025 ஆகஸ்ட் 31)
- ஜி. வெங்கட்ராமன் (2025 ஆகஸ்ட் 31 -)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Union Public Service Commission
- ↑ ஆறாவது ஊதியக் குழு அறிக்கை
- ↑ "தமிழகத்தின் 32-வது டிஜிபி யார்? தேர்வு நடைமுறையை தொடங்கியது அரசு!". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/21/who-is-the-32nd-dgp-of-tamil-nadu. பார்த்த நாள்: 5 October 2025.
- ↑ "Chennai police commissioner TK Rajendran is DGP, George CoP again". deccanchronicle. https://www.deccanchronicle.com/nation/in-other-news/080916/chennai-police-commissioner-tk-rajendran-is-dgp-george-cop-again.html. பார்த்த நாள்: 5 October 2025.