காவலம் சிறீகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காவலம் சிறீகுமார் (Kavalam Sreekumar) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய இசைக்கலைஞர் ஆவார். மலையாளத் திரைப்படப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என ப்லமுகங்களில் இவர் இயங்கி வருகிறார். இவரது ராமாயண பாராயணமும் மக்களிடத்தில் புகழ்பெற்ற்ள்ளது. [1] அறுபதுக்கும் மேற்பட்ட பிரபலமான மலையாள கவிதைகளை வழங்கியுள்ளார். [2] மலையாளக் கவிஞரும் நாடக ஆசிரியருமான காவலம் நாராயண பணிக்கரின் மகன் என்றும் அறியப்படுகிறார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

காவலம் சிறீகுமார் 1959 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதியன்று ஆலப்புழா மாவட்டம் காவலம் கிராமத்தில் பிறந்தார் . பத்மபூசண் விருது பெற்ற காவலம் நாராயண பணிக்கர் மற்றும் சாரதாமணி ஆகியோர் இவரது பெற்றோர்களாவர். இவருக்கு அரிகிருட்டிணன் என்ற மூத்த சகோதரர் இருந்தார். அவர் 2009 ஆம் ஆண்டில் இறந்தார். ஐந்தாவது வயதில் பாரம்பரியக் குரலிசையை கற்கத் தொடங்கிய இவர், அம்பலப்புழா சிவசங்கர பணிக்கர், திருச்சூர் வைத்தியநாதன், மாவேலிக்கார பிரபாகர வர்மா மற்றும் அம்பலப்புழா துளசி போன்ற இசை ஆசிரியர்களிடம் இசை பயின்றார். [3]

அகில இந்திய வானொலியில் 1985 ஆம் ஆண்டு முதல் 2007 வரை பணியாற்றினார். அகில இந்திய வானொலியில் பணியாற்றியபோது, பிரபல வயலின் கலைஞர் பி. சசிகுமாரிடம் பாரம்பரிய இசையைக் கற்றார். [4]

விருதுகள்[தொகு]

  • 2012 கேரள சங்கீத நாடக அகாடமி விருது [1]
  • 1989 - குருசாசத் பரபிரம்மம் - அகில இந்திய வானொலி- சிறந்த இசை அம்சத்திற்கான ஆண்டு விருது [5]
  • 1990- பாறைப்பேட்டை பந்திருக்குளம் - அகில இந்திய வானொலி- சிறந்த இசை அம்சத்திற்கான ஆண்டு விருது [5]
  • பல்கலைக்கழக இளைஞர் விழாவில் செம்மொழி பாடலில் தொடர்ந்து 5 ஆண்டுகள் முதல் பரிசு பெற்றார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Lyrical life".
  2. Nagarajan, Saraswathy (17 June 2021). "Musician Kavalam Sreekumar has rendered more than 60 Malayalam poems during the lockdown". https://www.thehindu.com/entertainment/music/kavalam-sreekumar-rendered-poems-lockdown/article34839907.ece. 
  3. "Kavalam Srikumar Classical Music Vocalist Profile, Programs, Awards, Photos & Videos". thiraseela.com. 2019-09-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-11-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "കാവാലം ശ്രീകുമാർ". M3DB.COM (in ஆங்கிலம்). 2020-11-17 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 5.2 "Kavalam Srikumar" (in ஆங்கிலம்). 2020-11-17 அன்று பார்க்கப்பட்டது.

 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவலம்_சிறீகுமார்&oldid=3344893" இருந்து மீள்விக்கப்பட்டது