காவன்தீசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காவன்தீசனின் பத்துத் தளபதிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காவன்தீசன் அல்லது காகவண்ண தீசன்[1] (கி.மு. 205 -167) (காகத்தை போல் நிறம் உள்ளவன்) என்பவன் இலங்கையின் உருகுணை பகுதியை ஆண்டவன். எல்லாளன் வடக்கு இலங்கையை ஆண்டபோது காவன்தீசன் தெற்கு மற்றும் தென்கிழக்கு இலங்கையை இணைத்த உருகுணை பிரதேசத்தை ஆண்டான். காகவண்ண தீசனுக்கும் அவனுடைய இரண்டாவது மனைவியான விகாரமாதேவிக்கும் பிறந்தவனே துட்டகைமுனு. துட்டகைமுனு காகவண்ண திச்சனிடம் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளன் என்பவன் மீது போர் தொடுக்க வற்புறுத்தினான். எல்லாளன் மீதுள்ள மக்கள் பலம் மற்றும் படை பலம் கருதி காகவண்ண தீசன் எல்லாளன் மீது போர் தொடுக்க அச்சமுற்றான். இதை ஏளனப்படுத்தி பெண்களின் அணிகலன்களை தந்தைக்கு பரிசாக அனுப்பி வைத்தான் துட்டகைமுனு. இந்த வருத்தத்தால் காகவண்ண தீசன் இறந்தான். துட்டகைமுனுவிற்கு காவன்தீசன் எல்லாளன் மீது படை எடுக்க உதவாவிட்டாலும் அவனுடைய தாயான விகாரமாதேவி உதவினாள்.

பத்துத் தளபதிகள்[தொகு]

காவன்தீசனின் பத்துத் தளபதிகள் எனப்படுபவர்கள் இலங்கையின் காவன்தீச மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகள் கொண்ட பத்து இளைஞர்களாவர். அங்கம்போர என்ற இலங்கையின் தற்காப்புக்கலை வல்லுநர்கள். காவன்தீச மன்னன் இந்தப் பத்துத் தளபதிகளையும் நியமித்து அவர்கள் ஒவ்வொருவரின் கீழும் ஆயிரம் இளைஞர்கள் பணி புரியும் வண்ணம் தனது படை ஒழுங்கமைத்தான்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://encycl.opentopia.com/term/Dutte_Gamini[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவன்தீசன்&oldid=3239821" இலிருந்து மீள்விக்கப்பட்டது