காவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவன்
Kaavan is seen extending his trunk over the low wall of his enclosure as artist Cher gives him fruit
அமெரிக்க பாடகர் செர்ரிடமிருந்து பழம் பெறும் காவன்
இனம்ஆசிய யானை
பால்ஆண்
பிறப்பு1985
இலங்கை
செயற்பட்ட ஆண்டுகள்1985–2020 வரை பாக்கித்தானில்
2020–முஹ்டல் கம்போடியாவில்
அறியப்படுவதற்கான
 காரணம்
நீண்ட காலம் சிறையிலிருந்த இது சர்வதேச பிரச்சாரத்திற்குப் பிறகு இறுதியில் இடமாற்றம் செய்யப்பட்டது

காவன் (Kaavan) ( பிறப்பு 1985 ) என்பது ஒரு ஆண் ஆசிய யானை ஆகும். இதன் கூட்டாளியான சகேலி 2012இல் இறந்த பிறகு "உலகின் தனிமையான யானை" ஆனது.[1] இந்த யானையை 1985ஆம் ஆண்டில் இலங்கை அரசு பாக்கித்தானுக்கு பரிசளித்தது. 2020 நவம்பர் வரை இஸ்லாமாபாத் உயிரியல் பூங்காவில் இருந்த இந்த யானை அமெரிக்கப் பாடகர் செர் [2][3] தலைமையிலான உள்ளூர் மற்றும் சர்வதேச விலங்கு உரிமை ஆர்வலர்களால் தொடங்கப்பட்ட பிரச்சாரத்திற்கு பதிலளிக்கும் விதமாக கம்போடியாவிலுள்ள உள்ள ஒரு சரணாலயத்திற்கு மாற்றப்பட்டது.[4] .

மே 2020 இல், கவானை விடுவிக்க இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.[5]

சுயசரிதை[தொகு]

காவன் 1985ஆம் ஆண்டில் இலங்கையில் பிறந்தது. பின்னவாலா யானை அனாதை இல்லத்தில் வளர்ந்தது. இதற்கு ஒரு வயதாக இருந்தபோது, இலங்கை அரசாங்கம் அப்போதைய பாக்கித்தான் குடியரசுத் தலைவர் சியா-உல்-ஹக்கிற்கு பரிசளித்தது.[6] இந்த யானை இஸ்லாமாபாத் உயிரியல் பூங்காவியில் வைக்கப்பட்டு பாக்கித்தானில் வாழும் ஒரே ஆசிய யானையாக இருந்தது.[4][7] சாகெலி என்ற யானை 1990இல் வங்காளதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. மேலும் காவனின் கூட்டாளியாக 2012 இல் இது இறக்கும் வரை அங்கேயே இருந்தது.[1]

காவனை விடுவிப்பதற்கான பிரச்சாரம்[தொகு]

ஒரு அமெரிக்க கால்நடை மருத்துவரான சமர் கான் என்பவர் 2015இல் இஸ்லாமாபாத் உயிரியல் பூங்காவிற்கு வந்தபோது, காவனின் நிலையையும், சூழலையும் கண்டு கலக்கம் அடைந்தார். யானைகள் சரணாலயத்திற்கு காவன் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கையை விடுத்தார். இதற்கான ஒரு பிரசாரத்தையும் தொடங்கினார். அவரது மனுவில் 400,000க்கும் மேற்பட்டவர்களின் கையெழுத்துக்கள் இடம்பெற்றது. மேலும், அமெரிக்க பாடகர் செரின் கவனத்தையும் ஈர்த்தது.[8]

மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக, பூங்காவின் அதிகாரிகள் காவனின் பராமரிப்பை மேம்படுத்த சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது கூடுதல் நீர் வழங்குதல் மற்றும் அவரது சங்கிலிகளை அகற்றுவது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும். பின்னர், அதிகாரிகள் காவனை கட்டுப்பாடுகளிலிருந்து நீக்கப்பட்டதாகவும், அதற்கு ஒரு புதிய துணை தேவைப்படுவதாகவும் பதிலளித்தனர்.[9]

செப்டம்பர் 2016இல், ஒரு செய்தி அறிக்கை, காவன் வாழ்ந்த மோசமான நிலையை எடுத்துக்காட்டியது. இதில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த தகவல் இடம் பெற்றது.[10] காவனின் விடுதலையைக் கோரும் இரண்டாவது மனு 200,000க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை சேகரித்தது.[11] காவனை விடுவிக்கக் கோரி பாக்கித்தான் வழக்கறிஞரான ஓவைசி அவான் என்பவர் இஸ்லாமாபாத் உயிரியல் பூங்கா அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்ந்தார். [8]

காவனின் விடுதலை[தொகு]

21 மே 2020 அன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் காவனை விடுவிக்க வேண்டும் என்றும் பூங்காவை மூட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. முப்பது நாட்களுக்குள் வேறொரு நாட்டில் காவனுக்கு பொருத்தமான சரணாலயத்தைக் கண்டுபிடிக்க இலங்கை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வனவிலங்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.[12][13] விலங்குகளுக்கான கொடுமையைத் தடுக்கும் சட்டம் 1890 மற்றும் 1979 ஆம் ஆண்டு வனவிலங்கு கட்டளை மீறல் ஆகியவற்றின் அடிப்படையில் பூங்காவிலுள்ள விலங்குகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதற்காக நீதிமன்றம் விமர்சித்தது.[14]

கம்போடியாவிற்கு இடமாற்றம்[தொகு]

17 ஜூலை 2020 அன்று, கம்போடியாவிலுள்ள லெக்கின் சரணாலயத்திற்கு காவனை இடமாற்றம் செய்யப் பட்டது.[15]

கவானுக்கு விடையளிக்க பாடகர் செர் பாக்கித்தானுக்கு வந்தார். இதற்காக இஸ்லாமாபாத் உயிரியல் பூங்காவில் ஒரு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அதிகாரிகளும், ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.[16] பாக்கித்தானின் குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வியும் அவரது மனைவி சமீனா ஆல்வியும் பல்வேறு அமைச்சர்களுடனும், பிரதிநிதிகளுடனும் கலந்து கொண்டு யானைக்கு பிரியாவிடை அளித்தனர்.[17] இந்த நடவடிக்கை 30 நவம்பர் 2020 இல் நிறைவடைந்தது.[18]

ஆவணப்படம்[தொகு]

மார்ச் 2021 இல், பாரமவுண்ட் + என்ற திரைப்பட நிறுவனம் செர் & லோன்லியஸ்ட் எலிபெண்ட் என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை வெளியிடுவதாக அறிவித்தது.[19] இந்தப் படம் ஏப்ரல் 22, 2021 அன்று இணைய தளத்திலும், மே 19இல் இசுமித்சோனியன் தொலைக்காட்சியிலும் திரையிடப்பட்டது.[20]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "'World's loneliest elephant' heads to Cambodia". The Express Tribune (in ஆங்கிலம்). 2020-11-30. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  2. "Freedom for Kaavan". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.
  3. "Pakistan to free elephant Kaavan after campaign by US singer Cher". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  4. 4.0 4.1 AFP (2020-11-29). "'Loneliest' elephant Kaavan set to leave for Cambodian sanctuary". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  5. Ebrahim, Zofeen T. (2020-08-12). "Release of Kaavan the elephant reignites zoo debate in Pakistan". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  6. Khan, M Ilyas (November 28, 2020). "Kaavan, the world's loneliest elephant, is finally going free". BBC News. பார்க்கப்பட்ட நாள் June 3, 2021.
  7. "Last elephant standing". பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.{{cite web}}: CS1 maint: url-status (link)
  8. Nuwer, Rachel (April 21, 2021). "How Cher Helped Rescue the World's Loneliest Elephant". Smithsonian Magazine. பார்க்கப்பட்ட நாள் June 3, 2021.
  9. "Saving Kaavan plan in trouble". Eastern Eye: p. 21. July 22, 2016. வார்ப்புரு:Pq. 
  10. "Islamabad zoo | Pakistan Today" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  11. Ahmedabad Mirror (2016-07-08). "Kaavan, Pakistan's lonely elephant". ahmedabadmirror.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-23.
  12. Iqbal, Nasir (2020-05-22). "IHC wants Kaavan to be relocated to appropriate sanctuary". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  13. NEWSWIRE), The Nonhuman Rights Project (GLOBE. "Islamabad High Court Recognizes the Rights of Nonhuman Animals". TylerPaper.com (in ஆங்கிலம்). Archived from the original on 2020-05-31. பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.
  14. Editorial (2020-05-24). "Saving the elephant". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  15. "Kaavan Set To Retire To Cambodian Elephant Sanctuary". freethewild.org. 2020-07-17.
  16. "How Kaavan attained freedom after 35 years". The Express Tribune (in ஆங்கிலம்). 2020-12-01. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  17. "President, first lady bid adieu to Kaavan leaving for Cambodia on Nov 29". Associated Press Of Pakistan (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-24. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  18. "'World's loneliest elephant' Kavaan arrives in Cambodia with help from Cher". 30 November 2020. https://www.nbcnews.com/news/world/world-s-loneliest-elephant-kavaan-arrives-cambodia-help-cher-n1249344. 
  19. "Watch Cher Save an Elephant in Cher & the Loneliest Elephant Documentary". news.yahoo.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.
  20. "'Cher & The Loneliest Elephant' to Premiere on a Very Fitting Day". Billboard. 2021-03-24. பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவன்&oldid=3931179" இலிருந்து மீள்விக்கப்பட்டது