காளியாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காளியாட்டம், தஞ்சை பகுதிகளில் நடக்கும் அம்மன் கோயில் திருவிழாக்களில் இடம்பெறும் நம்பிக்கை சார்ந்த மரபு ரீதியான ஆட்டக் கலையாகும். தலையில் கீரிடம், கண்களில் வெள்ளியிலான கண்மலர், கழுத்தில் நீண்ட மாலை, கையில் உடுக்கை, செந்நிற முகத்தில் வாயின் வெளியே கோரைபற்கள், இடையே தொங்கும் நாக்கு, பெருத்த மார்பு என காளி அம்மனைப்போல் வேடம் அணித்து வலம் வருகின்றனர். இவ்வாறு வலம் வருபவரை ஒருவர் இடுப்பு பகுதியில் பிடித்து வருகின்றார். எந்தக் கோயில் திருவிழாக்களில் காளி வேடமிடுன்றார்களோ அக்கோயில் திருவிழா முடியும் வரை விரதம் மேற்கொள்கின்றனர். காளிவேடம், காளி திருநடனம், காளி வீதிஉலா என பலப்பெயர்களில் அழைப்பர். இதில் பச்சைக்காளி, பவளக்காளி என இருவகைகள் உண்டு. இதன் வாயிலாக தீய சக்திகள் தனி மனிதனிடமிருந்தும், அவ்வூரிலிருந்தும் நீங்குவதாக நம்புகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளியாட்டம்&oldid=2653806" இருந்து மீள்விக்கப்பட்டது