காளிப்பட்டி கந்தசாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு கந்தசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:காளிப்பட்டி, திருச்செங்கோடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருச்செங்கோடு
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:கந்தசாமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[2]

காளிப்பட்டி கந்தசாமி கோயில் (Kalipatti Kandaswamy Temple) தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும்.[1][3]

வரலாறு[தொகு]

காளிப்பட்டி கந்தசாமி கோயில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும். இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் கந்தசாமி சன்னதியும், இராஜகணபதி,இடும்பன், சனீஸ்வரர், வேலாயுதசாமி உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[4]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. தை மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் இங்கு நடக்கும் தைப்பூச தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. பொங்கல் வழிபாடு, உருளுதண்டம், காவடியாட்டம், கரகாட்டம், குறவன் குறத்தி, கும்மிப்பாட்டு என்று பாரம்பரியங்கள் கலந்த பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நோய்களை தீர்க்கும் அருமருந்தாகும் கந்தசுவாமி கோவில் திருநீறு!". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2022-10-03.
  3. "காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை". தினகரன் இம் மூலத்தில் இருந்து 3 அக்டோபர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221003111556/https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1040649. பார்த்த நாள்: 3 October 2022. 
  4. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. மலர், மாலை (2021-01-30). "காளிப்பட்டி கந்தசாமி கோவில்- நாமக்கல்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-03.

புற இணைப்புகள்[தொகு]