காளிதாஸ் (2019 திரைப்படம்)
| காளிதாஸ் (2019 திரைப்படம்) | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஶ்ரீ செந்தில் |
| தயாரிப்பு | V. பார்கவி M. S. சிவநேசன் மணி தினகரன் |
| கதை | ஶ்ரீ செந்தில் |
| இசை | விசால் சந்திரசேகர் |
| நடிப்பு | பரத் ஆன் ஷீட்டால் |
| ஒளிப்பதிவு | சுரேஷ் பாலா |
| படத்தொகுப்பு | புவன் சீனிவாசன் |
| கலையகம் | லேப்பிங் ஆர்சு என்டேர்டைன்மெண்ட் இணைகிறேடிப்பிலே புரடக்சன்சு தினா சுடுடியோசு |
| விநியோகம் | PKM.S.அபிசேக் ஈசுவரன் புளூ வேல என்டேர்டைன்மெண்ட்சு |
| வெளியீடு | 13 டிசம்பர் 2019 |
| ஓட்டம் | 126 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காளிதாஸ் (2019 திரைப்படம்) (Kaalidas) என்பது 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் பரத், ஆன் ஷீட்டல் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விமர்சகர்களிடம் நேர்மறையான வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், பரத்தின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான வெற்றியாக அமைந்தது எனக் கூறுகின்றனர்.[1][2] இதன் விறுவிறுப்பான திரைக்கதையும், இசையும் பாராட்டுக்களைப் பெற்றது. 2024-இல், இதன் இரண்டாம் பாகம் (காளிதாஸ் 2) குறித்த அறிவிப்பு வெளியானது.[3]
கதைச்சுருக்கம்
[தொகு]காவல்துறை ஆய்வாளர் காளிதாஸ், நகரில் நடக்கும் அடுத்தடுத்த தற்கொலை மர்மங்களை விசாரிக்கிறார். வேலைப்பளுவால் அவர் தன் மனைவி வித்யாவுடன் நேரத்தைச் செலவிட முடியாமல் போகிறது. இறுதியில், அந்த கொலைகளின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மையும், வித்யாவின் மனநிலை பாதிப்பும் வெளிப்படுவது கதையின் திருப்பமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Review : Kaalidas review: Smart investigation thriller (2019)". சிஃபி. Archived from the original on 13 December 2019. Retrieved 2019-12-21.
- ↑ S, Srivatsan (2019-12-13). "'Kaalidas' movie review: Bharath anchors a simple, but effective whodunit" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/reviews/kaalidas-movie-review-bharath-anchors-a-simple-but-effective-whodunit/article30298208.ece.
- ↑ "Bharath's Next Is A Sequel To 'Kaalidas'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 July 2024.
