காளிதாஸ் ரங்காலயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காளிதாஸ் ரங்காலயா (Kalidas Rangalaya) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பாட்னா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்குகளில் ஒன்றாகும். இது ஒரு பண்பாட்டு நிகழ்வுகளுக்கான மையமும் ஆகும்.[1] இது காந்தி மைதானத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ளது [2] இது பீகார் கலை அரங்க நிறுவனத்தால் நடத்தப்படுகிறது, பீகார் கலை அரங்கம் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச நாடக நிறுவனத்தின் கிளை மையமாகும்.

வரலாறு[தொகு]

காளிதாசரின் பெயர் சூட்டப்பட்ட இந்த அமைப்பு 9 அக்டோபர் 1974 ஆம் நாளன்று அனில் குமார் முகர்ஜி அவர்களால் நிறுவப்பட்டது.[3] இது மாநில தலைநகரில் நாடக மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், தொடந்து மேற்கொண்டு செய்யவும் பீகார் அரசு, பீகார் கலை அரங்கத்திற்கு வழங்கிய நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.

கலை, பண்பாடு, கல்வியியல் தொடர்பான நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிறுவனம் முதன்முதலில் நிறுவப்பட்டது. மேலும் நாட்டுப்புற கலைகள், இந்திய செவ்வியல் நடனங்கள் மற்றும் பாடல்கள், தாகூரின் பாடல்கள் போன்றவற்றை மேம்படுத்துதலும் இதன் நோக்கமாக அமைந்தது. அதன் காரணமாக ஒரு ஒட்டுமொத்த மேம்பாட்டினை அடைய முடியும் என்றும் குறிப்பாக பீகாரில் உள்ள மக்கள் இதனால் பயன் பெறுவர் என்றும் கருதப்பட்டது. பீகார் கலை அரங்கமானது லாப நோக்கில் அமைக்கப்பட்ட நிறுவனம் அல்ல. இதற்காகப் பெறப்படும் வருமானமும் சொத்தும் நிறுவனத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதற்காகவே பயன்படுத்தப்படும். சமூகத்தைச் சார்ந்த பிற உறுப்பினர்களுக்கு இதன் பங்கோ, லாபமோ எந்த வகையிலும் மாற்றம் செய்யப்படாது அல்லது தொகையாக வழங்கப்படாது.[4]

பல்வேறு வகையான சோதனையான காலகட்டங்களை காளிதாஸ் ரங்காலயா எதிர்கொண்டு வந்துள்ளது. தலைநகரில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பழம்பெருமை வாய்ந்த கலை மற்றும் பண்பாட்டு மையமானது நாடகங்களை தொடர்ந்து நடத்தி வருவதோடு நடன விழாக்களையும் நடத்தி வருகிறது. போதிய வசதிகள் இல்லாத நிலையிலும் அது இதனை தொடர்ந்து செய்கிறது. சம்போதி கலா மஞ்ச் அமைப்பின் சார்பாக நாடகங்கள் அண்மையில் நடத்தப்பட்டன. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்மூலமாக நாடகக்கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இங்கு நடத்தப்படுகின்ற நாடகங்கள் இந்தி மற்றும் போஜ்பூரி மொழிகளில் அமைந்துள்ளன. அவை அனைத்தும் பெரும்பாலும் சமூகப் பிரச்னைகளை மையமாக வைத்தே நடத்தப்பட்டு வருகின்றன. எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாமல் இலவசமாக நடத்தப்படுவதால் மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. இங்கு நாடகத்தில் நடித்த பல கலைஞர்கள் மும்பை திரைப்பட பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றள்ளார்கள்.[5]

கண்ணோட்டம்[தொகு]

தற்போது காளிதாஸ் ரங்காலயாவில் ஒரு மேடை, அரங்கம், பீகார் நாடகவியல் நிறுவன அலுவலகம் மற்றும் 'அன்னபூர்ணா' என்று அழைக்கப்படும் ஒரு சிற்றுண்டிச்சாலை ஆகியவை அமைந்துள்ளன. இந்த வளாகத்தில் சகுந்தலா ஜந்தா அரங்கம், பிரியம்பாடா குழந்தைகள் அரங்கம், அனசூயா கலைக் கூடம், மற்றும் கலைஞர்களுக்கான அபயத்னா விருந்தினர் மாளிகை ஆகியவை உள்ளன. நடனம் மற்றும் இசை வடிவங்கள், ஓவியம் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றில் வகுப்புகள் வளாகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.[6]

நிர்வாகம்[தொகு]

காளிதாஸ் ரங்காலயாவின் நிறுவனத் தலைவர் அனில் குமார் முகர்ஜி ஆவார். நிறுவனர் தலைவர் 1940 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருந்த காலத்தின் இறுதிப்பகுதியில் என் தாயார் என்ற நூலை எழுதினார். பெரிய கல்வியாளரும், அறிஞருமான டாக்டர் அமர்நாத் ஜா என்பவர் இதனைக் காணாமல் போயிருந்தால் இது சாத்தியம் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதன் துணைத்தலைவராக தற்போது ஆர்.என். தாஸ் உள்ளார். செயலராக அனுபம் குமார் சின்ஹா உள்ளார்.[4]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிதாஸ்_ரங்காலயா&oldid=2961259" இருந்து மீள்விக்கப்பட்டது