காளிங்கராயன் வாய்க்கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காளிங்கராயன் வாய்க்கால் கொங்கு மண்டலத் தலைவர் காளிங்கராயன் அவர்களால் 1271ஆம் தொடங்கப்பட்டு 1283ஆம் முடிக்கப்பட்டது. இவ்வாய்க்காலின் மொத்த நீளம் 56 மைல்கள் (90 கிமீ). பவானி காவிரி ஆற்றுடன் கூடுவதற்கு சற்று முன் அணை கட்டி பவானி ஆற்று நீர் காளிங்கராயன் வாய்க்காலுக்கு திருப்பி விடப்பட்டது. 56 மைல்கள் பயணித்து நொய்யல் ஆற்றில் ஆவுடையாபாறை என்னும் இடத்தில் இவ்வாய்க்கால் சேர்கிறது. இவ்வாய்க்கால் மூலம் ஈரோடு மாவட்டம் சிறப்பாக பயனடைகிறது. இவ்வாய்க்கால் தொடங்குமிடத்தில் இதன் சராசரி கடல் மட்ட உயரம் 534 அடியாகும், முடியுமிடத்தில் இதன் சராசரி கடல் மட்ட உயரம் 412 அடியாகும். இதன் மூலம் 15,743 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவ்வாய்க்கால் தொடங்குமிடத்திலிருந்து முடியுமிடம் வரையில் 36 மைல்கள்தானெனினும், இயற்கையாய் அமைந்த சிறுசரிவின் முழுப்பயனைப் பெறவேண்டியும் மிகுதியான நிலப்பகுதிகள் பாசனம் பெறவேண்டியும், இதனை வளைவுகளுடன் 56 மைல்கள் ஓடுமாறு செய்தார் காளிங்கராயர்.

700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாய்க்கால் மாசுக்களால் பாதிப்படைந்துள்ளது. 2007-ல் 12 கோடி ரூபாய் செலவில் இதை மேம்படுத்தப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தேசிய வேளாண்மை மற்றும் கிராம்புற அபிவிருத்தி வங்கி நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது.

ஈரோடு- காவிரி அருகில் ஓடும் காளிங்கராயன் வாய்க்கால்

பைஞ்சுதை[தொகு]

2008ல் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் வாய்க்காலில் மாசுவை குறைக்க வாய்க்காலின் வலது கரையில் காங்கிரிட் சுவர் கட்டப்படும் என்றார். இதற்காக 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

இந்து நாளிதழில் காளிங்கராயன் வாய்க்காலுக்கு 725 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி வந்த கட்டுரை

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.hindu.com/2008/12/22/stories/2008122253540300.htm