காளிங்கராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காளிங்கராயனின் இயற்பெயர் லிங்காய கவுண்டர். இவர் கிபி 1240 ம் ஆண்டு பிறந்தார். இவர் கொங்கு வேட்டுவ கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்[1]. 20 வயது ஆனதும் அப்பொழுது கொங்கு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன் வீரபாண்டியன் (1265-1280) படையில் சேர்ந்தார். தனது செயலாற்றலால் விரைவில் தலைமைப்பதவியை அடைந்தார். பாண்டிய மன்னன் இவரை உத்திர மந்திரி (தலைமை அமைச்சர்) ஆக்கினார். மேலும் காளிங்கராயன் என்ற பட்டத்தையும் வழங்கினார். இவரின் உண்மைப்பெயரான லிங்காய கவுண்டர் என்பதால் அல்லாமல் காளிங்கராயன் என்ற பெயராலயே இவர் அறியப்படுகிறார். இவரின் சிறப்பை இன்றளவும் சொல்லுவது இவரின் பணிகளே. பவானியையும் நொய்யலையும் இணைத்து இவர் வெட்டிய பாசன கால்வாய் காளிங்கராயன் வாய்க்கால் என அறியப்படுகிறது. இக்வாய்காலை அமராவதி ஆற்றுடன் இணைக்க இவர் முடிவெடுத்து அத்திபாளையம் அருகே அணை கட்டினார். எனினும் அவரின் இத்திட்டம் நிறைவேறவில்லை. அத்திபாளையத்தில் உள்ள அணை ஓட்டை அணை என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. காளிங்கராயன் பற்றி புலவர் இராசு
  2. காளிங்கராயன் வாய்க்கால் பற்றி புலவர் இராசு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிங்கராயன்&oldid=2407550" இருந்து மீள்விக்கப்பட்டது