காளசமுத்திரம் ஊராட்சி (சின்னசேலம்)
| காளசமுத்திரம் | |||||
| — ஊராட்சி — | |||||
| ஆள்கூறு | |||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | கள்ளக்குறிச்சி | ||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | எம். எசு. பிரசாந்த், இ. ஆ. ப | ||||
| ஊராட்சித் தலைவர் | |||||
| மக்களவைத் தொகுதி | கள்ளக்குறிச்சி | ||||
| மக்களவை உறுப்பினர் | |||||
| சட்டமன்றத் தொகுதி | கள்ளக்குறிச்சி | ||||
| சட்டமன்ற உறுப்பினர் |
எம். செந்தில்குமார் (அதிமுக) | ||||
| மக்கள் தொகை | 1,782 | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||

காளசமுத்திரம் ஊராட்சி இந்தியா, தமிழ்நாடு, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கு வடக்கேயும், சின்னசேலம் நகரத்தில் இருந்து 6 கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இக்கிராமத்திலிருந்து 93 கி.மீ. தொலைவில் விழுப்புரம் நகரமும், 22 கி.மீ. தொலைவில் கள்ளக்குறிச்சியும் 82 கி.மீ. தொலைவில் சேலம் நகரமும் உள்ளது.[3]
பொதுத் தகவல்கள்
[தொகு]| வ-ஏண் | தலைப்பு | விவரம் |
|---|---|---|
| 1, | வருவாய் கிராமத்தின் பெயர் | காளசமுத்திரம் |
| 2, | ஊராட்யின் பெயர் | காளசமுத்திரம் |
| 3, | மொத்த மக்கள் தொகை | 1782 |
| ஆண் | 895 | |
| பெண் | 887 | |
| பரப்பளவு ஹெக்டரில் | ||
| 1, | நன்செய் | 43,445 |
| 2, | புன்செய் | 83,830 |
| 3, | நத்தம் | 5,35,0 |
| 4, | புறம் போக்கு | 166,08,0 |
| 5, | மற்ற வகை நிலங்கள் | 7,65,5 |
| மொத்த பரப்பளவு | 400,36,0 | |
| நீர் பாசனம் | ||
| 1, | முக்கிய நீர்பாசன ஆதாரம் | ஏரி |
| 2, | ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள்
எண்ணிக்கை |
2 |
கோவில்கள் மற்றும் திருவிழாக்கள்
[தொகு]இவ்வூரில் மிகவும் பிரசித்தியாக 3 தேர் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.
- ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் தேர் மற்றும் தீமிதி திருவிழா. (ஆடி மாதம்)
- ஸ்ரீ காளியம்மன் தேர் திருவிழா (வைகாசி மாதம்)
- ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா (காலனி தெரு)
காளசமுத்திரம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊர் பொது கோவில்களும், சில சமூகத்தின் குலதெய்வ கோவில்களும் காணப்படுகின்றது,
இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள்
[தொகு]- ஸ்ரீ வரதராஜ பெருமாள், மாரி அம்மன் கோவில்
- ஸ்ரீ பிடாரியம்மன் கோவில்
இந்த கோவில்களுக்கு பல ஏக்கர் மானியங்கள் (நிலங்கள்) உள்ளது.
ஊர் பொது கோவில்கள்
[தொகு]- ஓம் சக்தி கோவில்
- பேச்சியம்மன், மயான காளியம்மன் கோவில்
- சிவன் கோவில்
- அருள்மிகு செல்லியம்மன் கோவில் (ஏரிக்கரை)
- அருள்மிகு ஏரிக்கரை ஐயனார், கருப்பையா சுவாமி கோவில்
- அருள்மிகு மாரியம்மன் கோவில் (காலனி தெரு)
குலதெய்வ கோவில்கள்
[தொகு]குலதெய்வ கோவில்கள் என்பது குலதெய்வ வழிபாடு செய்பவர்களால் இந்த கோவில்கள் கட்டப்பட்டது, குலதெய்வ அன்பர்களால் இந்த கோவில்கள் நிர்வகிக்கப்படுகிறது.
- அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில்
- அருள்மிகு ஸ்ரீ கருப்பையா கோவில்
- அருள்மிகு ஸ்ரீ நாங்கூர் ஐயனார் கோவில்
- அருள்மிகு கோமதுறை சுவாமி கோவில்
- அரசமர தோப்பு பிள்ளையார் கோவில் (2 உள்ளது)
- மேற்குத்தெரு பிள்ளையார் கோவில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://www.onefivenine.com/india/villages/Villupuram/Chinnasalem/Kalasamudram