கால வரம்பு
ஒரு கால வரம்பு (time limit நேர வரம்பு) அல்லது காலக் கெடு என்பது ஒரு குறுகிய காலப் புலம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலப் புள்ளியாகும். இந்தக் காலத்திற்குள் ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள குறிக்கோள் அல்லது பணியினை நிறைவேற்ற வேண்டும். அந்தக் காலம் கடந்துவிட்டால், அந்தப் பணி காலாவதியானதாகக் கருதப்படலாம் (எ.கா., வேலைத் திட்டங்கள் அல்லது பள்ளிப் பணிகளுக்கு). காலக்கெடுவிற்குள் முடிக்கப்படாத பணி ஒதுக்கீடுகள் அல்லது திட்டங்கள் பணியாளரின் செயல்திறன் மதிப்பீட்டை மோசமாகப் பாதிக்கலாம். பள்ளிப் பணிகள், கட்டுரைகள் அல்லது அறிக்கைகள் காலக்கெடுவுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்பட்டால், மதிப்பெண்கள் அல்லது தரங்கள் மாணவரின் மதிப்பீட்டிலிருந்து குறைக்கப்படலாம்.
சில சந்தர்ப்பங்களில், காலக்கெடுவுக்குப் பிறகு எந்தப் பொருட்களையும் சமர்ப்பிக்க முடியாது. இது முன்மொழிவுகளுக்கான அழைப்புகள், ஏலங்களுக்கான வணிக ஒப்பந்தப் புள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்முறைப் பள்ளிகளுக்கான விண்ணப்பத் தேதிகள் மூலம் ஏற்படலாம். பள்ளிகள், பல்கலைக்கழகங்களின் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வுகளுக்கு, தேர்வுக்கான கால வரம்பு முடிந்ததும் மாணவர்கள் தேர்வு எழுதுவதை நிறுத்திவிட்டு தங்களது விடைத்தாட்களை ஒப்படைக்க வேண்டும்.
நிருவாகத்தில், காலக்கெடு பெரும்பாலும் மைல்கற்களுடன் தொடர்புடையது.
சொற்பிறப்பியல்
[தொகு]காலக்கெடு என்ற சொல் அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது சிறை முகாம்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு மறைமுகச் சான்றுகள் மட்டுமே உள்ளன. கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவதற்கான ஓர் எல்லையைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Andersonville Prison". American Battlefield Trust. 18 December 2008. Retrieved 2020-05-15.