கால் மீ பை யுவர் நேம்
கால் மீ பை யுவர் நேம் | |
---|---|
இயக்கம் | லூகா குவாடனீனோ |
தயாரிப்பு |
|
மூலக்கதை | Call Me by Your Name படைத்தவர் André Aciman |
திரைக்கதை | ஜேம்ஸ் ஐவரி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சய்யூமு முக்தீப்ரோம் |
படத்தொகுப்பு | வால்டர் ஃபேசானோ |
கலையகம் |
|
விநியோகம் |
|
வெளியீடு | 22 சனவரி 2017(சன்டான்ஸ்) 24 நவம்பர் 2017 (United States) 18 சனவரி 2018 (Brazil) 25 சனவரி 2018 (Italy) 28 பெப்ரவரி 2018 (France) |
ஓட்டம் | 132 நிமிடங்கள்[1] |
நாடு |
|
மொழி |
|
ஆக்கச்செலவு | $3.5 மில்லியன் |
மொத்த வருவாய் | $38 மில்லியன்[3] |
கால் மீ பை யுவர் நேம் (உன் பெயரால் என்னை அழை, Call Me by Your Name) என்பது 2017 ஆண்டு வெளியான ஒரு திரைப்படமாகும். இப்படத்தை இத்தாலி இயக்குநர் லூகா குவாடனீனோ இயக்கியுள்ளார். ஆண்ட்ரே அக்சிமன் இதே பெயரில் 2007 இல் எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜேம்ஸ் ஐவரியால் இது எழுதப்பட்டது. இப்படம் படம், 2017 ஆண்டுக்கான சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது.
கதை[தொகு]
வடக்கு இத்தாலியில் உள்ள சிறு கிராமத்தில் 1980 களில் இக்கதை நடக்கிறது. ஏலியோ, இசையில் ஆர்வம் கொண்ட 17 வயது இளைஞன். கோடை விடுமுறையைக் கழிக்க ஏலியோவின் வீட்டுக்கு வருகிறான் 24 வயது ஆலிவர். இருவருக்கும் இடையில் தன்பால் ஈர்ப்பு ஏற்படுகிறது. இது இயல்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் போன்றதே என்பதை, ஏலியோவுக்கும் ஆலிவருக்குமான ஈர்ப்பை ‘முதல் காதல்’ என்று ஏலியோவின் தந்தை சொல்கிறபோது உணர்த்துவதாக உள்ளது.
இருவருக்கும் இடையிலான பிணைப்பு வலுப்படுகிற ஒரு கட்டத்தில், “உன் பெயரால் என்னைக் கூப்பிடு, என் பெயர் சொல்லி உன்னை அழைக்கிறேன்” என்பான் ஆலிவர். இருவர் ஒருவராகிப் போகும் காதலின் இறுதிநிலைக்கு இருவரும் ஆட்படுகிறார்கள். ஆண் – பெண் காதலில் இருக்கிற அதீதமும் தேடலும் தன்பால் ஈர்ப்பிலும் உண்டு எனச் சொல்லியிருப்பதன் மூலம் தன்பால் ஈர்ப்பு இயற்கைக்கு எதிரானது என்ற பிற்போக்கு சிந்தனையை இயக்குநர் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).