கால் தூக்கிற கணக்கப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
கால் தூக்கிற கணக்கப்பிள்ளை

கால் தூக்கிற கணக்கப்பிள்ளை சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று. திளைப்புக்காக விளையாடப்படுவது. தமிழக நாட்டுப்புறங்களில் இது பரவலாக விளையாடப்படும். இக்காலத்தில் அருகிவருகிறது.

நான்கு சிறுவர். இருவர் கைகோத்துக்கொள்வர். ஒருவரது வலக்கையும் மற்றொருவரது இடக்கையும் கோக்கப்படும். மூன்றாமவர் அந்த இருவரின் தோள்களை முழங்கைகளால் வளைத்துப் பிடித்துகொண்டு தன் முழங்கால் ஒன்றை மடித்து, இருவர் கோத்திருக்கும் கைகளில் வைத்து ஏறிக்கொண்டு சவாரி செய்வார். சவாரி செய்பவரின் இன்னொரு காலை நான்காமவர் தூக்கிப் பிடித்துக்கொண்டு செல்வார். குறிப்பிட்ட தூரம் சென்றதும் வேறொருவர் சவாரி. பின்னர் ஆள் மாற்றி மாற்றிச் சவாரி.

சவாரி செய்பவர் பாடிக்கொண்டே செல்வார். அவர் பாடும் பாட்டு ”கால் தூக்கிற கணக்கப்பிள்ளைக்கு மாசம் பத்துருவா”(இதைத் திரும்பத் திரும்பப் பாடுவார்)

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  1. அ. மு. பரமசிவானந்தம், மலைவாழ் மக்கள் மாண்பு, தமிழ்க்கலைப் பதிப்பகம் சென்னை வெளிநீடு, 1967
  2. இ. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, 1982
  3. இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், 1980