கால் துடுப்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால் துடுப்பாட்டம்
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்புசர்வதேச கால் துடுப்பாட்ட கூட்டமைப்பு
பிற பெயர்கள்पाय चेंडू, लेग क्रिकेट, लात बॉल
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
தொடர்புஅங்கீகரிக்கப்பட்டது
இருபாலரும்ஆம், தனித்தனி போட்டிகள்
பகுப்பு/வகைஅணி விளையாட்டு
கருவிகள்பந்து, இலக்கு (இலக்குக் குச்சி, பிணை ஆணை)
விளையாடுமிடம்துடுப்பாட்ட மைதானம்
தற்போதைய நிலை
தாயகம்இந்தியா, நேபாளம், இலங்கை, பூட்டான், இந்தியத் துணைக்கண்டம், ஆசியா

கால் துடுப்பாட்டம் (Leg cricket) என்பது 80 மற்றும் 120 அடி (24 மற்றும் 37 மீ) ஆரம் கொண்ட ஒரு வட்ட மைதானத்தில் பதினொரு வீரர்கள்[1][2] கொண்ட இரு அணிகளுக்கு இடையே விளையாடப்படும் ஒரு வகை  துடுப்பாட்டமாகும்.[3][4] இந்தியா, நேபாளம்,  பூட்டான்,  இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளில் இவ்விளையாட்டு விளையாடப்படுகிறது.[5][6][7]

கால் துடுப்பாட்டம் என்பது பந்தை அடிப்பதற்கு மட்டையை விட கால்களைப் பயன்படுத்துவதாகும். பந்து வீச்சாளர் பந்தை கையிற்கு கீழ் தரையில் உருட்டுகிறார். ஆட்டக்காரர்கள் ஓட்டங்கள் எடுக்க பந்தை உதைக்க வேண்டும். ஒரு ஆட்டக்காரர் பந்தை எல்லைக் கோட்டிற்கு வெளியே உதைத்து நான்கு அல்லது ஆறு ஓட்டங்களை எடுக்க முடியும்.[5]

வரலாறு[தொகு]

கால் துடுப்பாட்டம் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகும். இது முக்கியமாக இந்தியாவில் பல்வேறு விதிகளுடன் விளையாடப்படுகிறது. கால் துடுப்பாட்டத்தை பெங்களூரைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் எசு. நாகராஜ் கண்டுபிடித்தார் . இந்த விளையாட்டை ஊரில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, உடல் தகுதிக்கு ஆதாரமாக இருந்தார். தில்லியில் உடற்கல்வி ஆசிரியர் சோகேந்தர் பிரசாத் வர்மா என்பவர் 2010 ஆம் ஆண்டு கால் துடுப்பாட்டத்தின் அதிகாரப்பூர்வ விதிப் புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். எசு. நாகராஜ் கால் துடுப்பாட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். வர்மா தற்போது சர்வதேச கால் துடுப்பாட்ட கூட்டமைப்பு மற்றும் இந்தியக் கால் துடுப்பாட்ட கூட்டமைப்பு ஆகியவற்றின் செயலாளராக உள்ளார்.[2][8]


விவரக் குறிப்புகள்[தொகு]

11 வீரர்கள் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையே கால் துடுப்பாட்டம் விளையாடப்படுகிறது. இது 80 முதல் 120 அடி வரையிலான ஆரம் கொண்ட வட்ட மைதானத்தில் விளையாடப்படுகிறது. ஆடுகளம் 8 அடி (2.4 மீ) அகலமும், 42 முதல் 48 அடி (13 முதல் 15 மீ) நீளமும் கொண்டது. ( வயது மற்றும் வீரர்களின் வகையைப் பொறுத்து). இலக்குக் குச்சிகளில் உள்ள தூரம் 12 அங்குலம் (304.8 மிமீ) (1 அடி). [9]

வீச்சு
பிரிவுகள் சிறுவர்கள் சிறுமிகள் இருபாலருக்கும்
12 வயதுக்குட்பட்ட சிறியது 44 அடி 44 அடி 44 அடி
14 வயதுக்குட்பட்ட மிகவும் இளையோருக்கான ஆட்டம் 44 அடி 44 அடி 44 அடி
17 வயதுக்குட்பட்ட இளையோருக்கான ஆட்டம் 46 அடி 46 அடி 46 அடி
19 வயதுக்குட்பட்ட மூத்தோருக்கான ஆட்டம் 48 அடி 48 அடி 48 அடி
ஆண்கள்/பெண்கள் 48 அடி 48 அடி 48 அடி
எல்லைகள்
பிரிவுகள் சிறுவர்கள் சிறுமிகள் இருபாலருக்கும்
12 வயதுக்குட்பட்டோருக்கான சிறிய ஆட்டம் 70 அடி 70 அடி 70 அடி
14 வயதுக்குட்பட்ட மிகவும் இளையோருக்கான ஆட்டம் 80 அடி 80 அடி 80 அடி
17 வயதுக்குட்பட்ட இளையோருக்கான ஆட்டம் 90 அடி 85 அடி 90 அடி
19 வயதுக்குட்பட்ட மூத்தோருக்கான ஆட்டம் 100 அடி 90 அடி 100 அடி
ஆண்கள்/பெண்கள் 120 அடி 100 அடி 120 அடி
இலக்குக் குச்சி
3 இலக்குக் குச்சிகளின் அகலம் 12 அங்குலம், 1 அடி
3 இலக்குக் குச்சிகளின் உயரம் 24–30 அங்குலம், 2–2.5 அடி

கூட்டமைப்பு[தொகு]

சர்வதேச அளவில், கால் துடுப்பாட்டம் சர்வதேச கால் துடுப்பாட்டம் கூட்டமைப்பால் நிர்வகிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. இந்த சர்வதேச அமைப்புக்கு சிறீ சுரேந்தர் குமார் தலைவராகவும், சிறீ சோகிந்தர் பிரசாத் வர்மா பொதுச் செயலாளராகவும் உள்ளார். இந்தியாவில் இந்தியக் கால் துடுப்பாட்ட கூட்டமைப்பு என்பது 2011 இல் உருவாக்கப்பட்டது. இது சங்கங்களின் பதிவுச் சட்டம், 1860 இன் கீழ் பதிவு செய்யப்பட்டு சர்வதேச கால் துடுப்பாட்ட கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.[3] இந்தியாவைத் தவிர, நேபாளம், பூட்டான், இலங்கை, புளோரிடா, கானா பாக்கித்தான் ஆகிய நாடுகளில் கால் துடுப்பாட்டம் பிரபலமானது.

போட்டிகள்[தொகு]

இந்தியாவில் தேசிய வாகையர் ஆட்டம்[தொகு]

சூலை 2012 இல், இந்திய கால் துடுப்பாட்ட கூட்டமைப்பின் மூலம் மூத்தோருக்கான தேசிய டி-10, கால் துடுப்பாட்ட வாகையர் ஆட்டம் தில்லியில் உள்ள பவானாவிலுள்ள இராசீவ் காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 24 சிறுவர்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்றன. தொடக்க விழாவின் முதன்மை விருந்தினராக தில்லியின் சட்டமன்ற உறுப்பினரும், முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளருமான சுரேந்தர் குமார் கலந்து கொண்டார்.[1]  [10] 2012 ஆம் ஆண்டு முதல், இந்தியக் கால் துடுப்பாட்ட கூட்டமைப்பு தில்லி, மகாராட்டிரா, தமிழ்நாடு, சார்க்கண்டு, அரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் 6 தேசிய விளையாட்டுகளை ஏற்பாடு செய்துள்ளது.

சர்வதேச வாகையர் ஆட்டங்கள் [தொகு]

சூலை 2013 இல் நடைபெற்ற முதல் இந்திய-நேபாள டி-10 கால் துடுப்பாட்டத் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது.[3][11]

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் 5ஆவது தேசிய டி20 கால் துடுப்பாட்ட வாகையர் போட்டி நடைபெற்றது.[12]

சனவரி 2017 இல், கர்நாடகா 211 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.[13] புது தில்லியில் நடைபெற்ற ஒடிசாவின் 5ஆவது தேசிய டி10 கால் துடுப்பாட்ட வாகையர் போட்டியில் 3ஆவது இடத்தைப் பிடித்தது.[14]  சந்தன் ரே இந்திய கால் துடுப்பாட்ட அணியின் தற்போதைய தலைவராக உள்ளார்.[15][9][16]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Kargal, Rahul (March 15, 2017). "Leg Cricket - your favourite sport, served with a twist". Sportskeeda. https://www.sportskeeda.com/cricket/leg-cricket-your-favourite-sport-served-with-twist. 
  2. 2.0 2.1 K., Sarumathi (February 28, 2017). "Welcome to the world of leg cricket". தி இந்து. https://www.thehindu.com/news/cities/bangalore/Welcome-to-the-world-of-Leg-Cricket/article17383066.ece. 
  3. 3.0 3.1 3.2 harpreet, Lamba Kaur (January 6, 2018). "Football or cricket? Leg cricket tries to find its feet in India". Asian Age. http://www.asianage.com/sports/in-other-sports/060118/football-or-cricket-leg-cricket-tries-to-find-its-feet-in-india.html. 
  4. "Cricket's Rendition of the 'Beautiful Game' - Leg Cricket". News 18. May 8, 2017. https://www.news18.com/news/ivideos/crickets-rendition-of-the-beautiful-game-leg-cricket-1395487.html. 
  5. 5.0 5.1 Narayanan, Jayashree (July 20, 2016). "'Every game has its challenges'". Deccan Herald. https://www.deccanherald.com/content/558877/every-game-has-its-challenges.html. 
  6. Engineer, Rayomand (January 6, 2018). "Is It Cricket? Is It Football? Well, It Is Both! Try Your Hand at This Unusual Sport". Thebetterindia.com. https://www.thebetterindia.com/126933/leg-cricket-india-sport/. 
  7. Mishra, Vidhan Chandra (August 11, 2017). "देश में लोकप्रिय हो रहा लेग क्रिकेट, अपने पैर से कीजिए किक मिलेगा फोर और सिक्स" (in Hindi). Prabhat Khabar. https://www.prabhatkhabar.com/news/vishesh-aalekh/country-popular-leg-cricket-kick-get-four-and-six/1036952.html. 
  8. "Home". legcricketindia.com.
  9. 9.0 9.1 Panda, Namita (May 12, 2016). "Bargarh boy strives to promote new sport". Telegraph India. https://www.telegraphindia.com/odisha/bargarh-boy-strives-to-promote-new-sport/cid/1505667. 
  10. Mather, Nazrin (January 24, 2018). "'Is it football or cricket?': Captain of India's Leg Cricket team decodes the sport". Thebridge.in. https://thebridge.in/is-it-football-or-cricket-captain-of-indias-leg-cricket-team-decodes-the-sport/. 
  11. "Chandan, Tushar, Ansuman get rousing welcome". Bhubaneswar: SportsLogon. July 25, 2016. http://sportslogon.com/body.php?page=news_details&news_id=naemqA%3D%3D. 
  12. "Chandan to lead State Leg Cricket team". Daily Pioneer. May 18, 2016. https://www.dailypioneer.com/2016/state-editions/2016-05-17-134840.html. 
  13. "Odisha finish 3rd in National Leg Cricket". SportsLogon. May 24, 2016. http://sportslogon.com/body.php?page=news_details&news_id=naWmow%3D%3D. 
  14. "Odisha Leg Cricket team gets warm welcome for securing 3rd Potion at the National T10 Championship". JSG Live. January 2, 2017. http://jsglive.in/2017/01/02/odisha-leg-cricket-team-gets-warm-welcome-for-securing-3rd-potion-at-national-t-10-leg-cricket-championship/. 
  15. "Odisha's Chandan Ray is India U-19 Leg Cricket team captain". Incredibleorissa. May 12, 2016. http://incredibleorissa.com/odisha-chandan-ray-india-leg-cricket-team-captain/. 
  16. Biswas, Sudipta (June 12, 2016). "Leg Cricketer Chandan urges Government for sponsorship". Sportzwiki. https://sportzwiki.com/cricket/leg-cricketer-chandan-urges-government-sponsorship/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்_துடுப்பாட்டம்&oldid=3668657" இலிருந்து மீள்விக்கப்பட்டது